சித்திராபுரி என்ற நகரை தர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு குணவதி என்ற மனைவி இருந்தாள். சிறந்த அழகு மிக்கவளாக லாவண்யா என்ற மகளும் இருந்தாள்.
ஒருசமயம் மன்னர் தர்மனின் எதிரி நாட்டு அரசன் தன: பெரும்படையினைத் திரட்டிக்கொண்டு வந்து போரிடலானான்.
திடீரென நடைபெற்ற இந்தப் போரினால் தர்மன் திக்கு முக்காடினான். அதே நேரத்தில் எதிரி நாட்டு மன்னனது படை வலிமை மிக்கதாக இருந்ததால் போரின் முடிவில் தர்மன் தோல்வியைத் தழுவினான்.
போரில் எதிர்பாராத வெற்றிப்பெற்ற எதிரி நாட்டு அரசனோ தர்மனையும் அவனது குடும்பத்தாரையும் சித்திராபுரியை விட்டு துரத்தியடித்தான்.
நாட்டை இழந்த தர்மனும் அவனது குடும்பத்தாரும் அநாதைகளாக உயிர் பிழைத்திட வேண்டி நாட்டைவிட்டு வெளியேறி காட்டுவழியாக சென்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் கொள்ளைக்காரன் ஒருவன் அவர்கள் முன்னே வந்தான்
தர்மனோடு வந்திருந்த குணவதியும், லாவண்யவதியும் அணிந்து கொண்டிருந்த ஒருசில நகைகளையும் அணிகலன் களையும் கொள்ளைக்காரன் அபகரிக்க முயலும்போது தர்மன் வெகுண்டு கொள்ளையனை எதிர்த்துப் போரிட்டான் இருவருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அச்சண்டையில் கொள்ளையன் தர்மனைக் கொன்றுவிட்டு குணவதியும் லாவண்யவதியும் அணிந்திருந்த அணிகலன்களை வலுக்கட்டாய மாக அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டான்,
தர்மன் படுகொலை செய்யப்பட்டது கண்டு, குணவதியும் லாவண்யவதியும் இடிந்துப் போனார்கள். அவர்களுக்கு தர்மனின் மறைவு பேரிழப்பாக இருந்தது.
"நாம் நாட்டையும், செல்வத்தையும் இழந்தோம்! நாடோடிகள் போன்று காடும் மேடும் அலைந்தோம். இந்த நிலையிலும் நமக்கு என்று கணவராவது துணையாக இருந்தாரே! இப்போது அவரும் கொலையுண்டுவிட்டாரே! பெண்களாகிய நாங்கள் இருவரும் அநாதைகளாகி விட்டோமே! இனி நாங்கள் எப்படி வாழ்வோம்! என்று வாய்விட்டு கதறி அழுதாள் குணவதி.
தன் தாயின் வேதனையைக் கண்டு கலங்கிய யாவணய தயோ தனது வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் “தாயே கடவுள் நம்மைத் தொடர்ந்து சோதனை செய்கிறார். முதலில் நாட்டையும், பெரும் செல்வத்தையும் இழக்கச் செய்தார். பக்கு உற்றத் துணையாக இருக்கின்ற தந்தையார் உயிரையும் முத்துக் கொண்டார். ஆகையினால் நாம் வேதனைப்பட்டுக் பளவதால் எந்தப் பயனுமே ஏற்படாது. நமது தலைவிதிக்கான பன்களை நாம்தான் அனுபவித்தாக வேண்டும். நாம் மன அமைதிக்காக ஏதாவது அண்டை நாடுகளுக்குச் செல்வோம்! அங்கு ஏதாவது கூலி வேலையினை செய்து பிழைத்துக் கொள்வோம்'' என்றாள்.
தன் மகள் இவ்வாறு கூறியதும் தாயின் வேதனையானது சிறிது குறைந்தது.
பின்னர் இருவரும் தர்மனின் உடலை அடக்கம் செய்தபடி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். குறுக்கே காணப்பட்ட காட்டைக் கடந்து அண்டை நாட்டை வந்தடைந்தனர். அந்த நாட்டின் எல்லையில் பாழடைந்த மண்டபம் ஒன்று இருந்தது. அந்த மண்டபத்தில் அமர்ந்தவாறு எதிர்கால திட்டம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்றடைந்த அந்த நாட்டின் பெயரோ, பிரம்மதேசம் என்பதாகும். அந்த நாட்டை பிரம்மபுத்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.
அம்மன்னனுக்கு அழகேசன் என்ற மகனும் இருந்தான். அழகேசன் இளைஞனாக இருந்தால் அவனது தோற்றம் பார்ப்பவரைக் கவரும் விதமாக கம்பீரமாக இருந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பாக பிரம்மபுத்திரனின் மனைவி மரணமடைந்தாள். தினந்தோறும் பிரம்மபுத்திரன் தனது மகன் அழகேசனுடன் சேர்ந்து வெகு தொலைவுக்கு குதிரை சவாரி செய்துவிட்டு வருவான். இவ்வாறாக குதிரை சவாரி செய்வது அவர்களுக்கு உடற்பயிற்சி போன்று அமைந்தது. அன்றையதினம் வழக்கம்போல் குதிரை சவாரி செய்துவிட்டு நிதானமாக இருவரும் குதிரையில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மனக்கவலை அதிகம் கொண்டவராய் தனது தந்தை குதிரை சவாரி செய்வதைக் கண்ட அழகேசன் தனது குதிரையை தன் தந்தை சவாரி செய்யும் குதிரைக்கு அருகே செலுத்தி அவனை நோக்கி, "தந்தையே! தாங்கள் ஏதோ துயரத்துடன் இருப்பதாகத் தெரிகிறது. அந்த துயரத்திற்கான காரணத்தை நானும் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டான்.
"மகனே! நீ அறியாதது ஒன்றுமில்லை ! உனது தாய் இறந்து ஓரிரு மாதங்கள் கூட முடிவடையவில்லை! ஒரு நாட்டின் சிம்மாசனத்தில் பட்டத்தரசி இல்லாத ஒருவன் மன்னராக அமர இயலாது. இந்த வழக்கமானது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபினைக் காக்க வேண்டி நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என ராஜ குருவும், அமைச்சர் பெருமக்களும் பெரியோர்களும் வற்புறுத்துகின்றனர்.
அவர்களது கோரிக்கையினை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. உன்னுடைய தாயார் இருந்த இடத்தில் மற்றொரு பெண்ணை வைத்துப் பார்க்க என்னால் ஒருபோதும் முடியாது. ஆனால் அரச மரபு என்ற ஓர் காரணத்தைக் காட்டி அரசவையோர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருகின்றனர். நான் இனிச் செய்யப்போவது என்ன என்பது தெரியாது குழப்பத்துடன் தவித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்று பிரம்மபுத்திரன் கூறினான்.
தந்தையின் மனக்கவலைக்கான காரணத்தை அறிந்த அழகேசன் மன்னனை நோக்கி “தந்தையே! எனது தாயின் ஸ்தானத்தில் வேறொரு பெண்ணை வைத்துப் பார்த்திட என் மனம் சிறிதும் இடம் கொடுக்காது என்றாலும் அரச மரபு ஒன்று இருப்பதையும் நாம் என்றும் மறக்கக்கூடாது. எனவே இந்த ஒரு காரணத்திற்காவது நீங்கள் மனதினை தைரியப்படுத்திக்கொண்டு மறுமணம் செய்து கொள்ள சம்மதிக்கவேண்டும்" எனக் கூறினான்.
“உன் பேச்சும் சரியானதாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நீ கூறியவற்றை நானும் யோசிக்கிறேன்'' என்று பிரம்மபுத்திரன் கூறினான்.
தந்தையும், மகனுமாக இருவரும் கலந்து யோசனை செய்து வருகின்ற வழியில் குணவதியும், லாவண்யவதியும் அவ்வழியே - நடந்து சென்ற காலடித் தடங்கள் தரையில் பதிந்து இருப்பதை இருவரும் கண்டனர்.
அதனைக் கவனித்த அழகேசன் அக்காலடிச் சுவடுகளின் அமைப்பினை நன்றாக கூர்ந்து கவனித்தான். பின்னர் பிரம்மபுத்திரனை நோக்கி “தந்தையாரே! யாரோ இரண்டு பெண்கள் இவ்வழியாக நடந்து சென்ற காலடித் தடயங்கள் தரையில் பதிந்துள்ளதைப் பார்க்கும்போது அவ்விருவரும் அநேகமாக தாயும் மகளுமாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். இக்காலடிச் சுவடு அமைப்பைப் பார்க்கின்ற போது அங்க இலட்சணப்படி அவர்கள் இருவரும் பேரழகிகளாக இருந்திட வேண்டும் என் எண்ணுகிறேன்.'' எனக் கூறிய அழகேசன் மீண்டும் தனது தந்தையை நோக்கி, "எனக்கு ஒரு யோசனைத் தோன்றுகிறது அதை நான் தங்களிடம் கூறிவிடலாமா?" என வேண்டினான்.
“மகனே! உன் மனதில் பட்டதைக் கூற தயக்கம் காட்ட வேண்டாம். நீ எதை எண்ணுகிறாயோ அதை தெளிவுபட கூறிடு" என பிரம்மபுத்திரன் பதில் உரைத்தான்,
"தந்தையே! இக்காலடிச் சுவடுகளில் பெரிதாகவும், நீளமாகவும் உள்ளவை தாயினுடைய காலடிச் சுவடுகளாக இருக்கலாம். தயவு செய்து தாங்கள் இப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். அனேகமாக அவர்கள் இருவரும் இங்குதான் அருகாமையில் எங்காவது தங்கியிருக்கவும் கூடும்" எனக் கூறினான்.
தன் மகனின் யோசனையைக் கேட்ட பிரம்ம புத்திரனும் சற்று யோசனை செய்துவிட்டு, "மகனே! திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்ற சூழ்நிலை வருகின்றபோது, ஏதாவது நாம் செய்துதான் ஆகவேண்டும்! எனவே உன்னுடைய எண்ணப்படியே நான் நடந்து கொள்கிறேன். அதே சமயத்தில் நானும் உனக்கொரு யோசனைக் கூறலாம் எனவும் எண்ணுகிறேன். நான் மட்டும் திருமணம் செய்ய, நீ திருமணம் செய்யாமல் இருப்பது முறையானதல்ல! ஆகையினால் பெரிய காலடித் தடத்திற்கு உரியப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன். அநேகமாக அந்தப் பெண் தாயாகவே இருக்கக் கூடும். சிறிய காலடிச் சுவடுக்குரிய பெண் அவளுக்கு மகளாக இருக்கும் பட்சத்தில் நீ அவளைத் திருமணம் செய்து கொள்' என தனது எண்ணத்தைத் தெரியப்படுத்தினான்.
பிரம்மபுத்திரனின் யோசனையை அழகேசன் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டான். பின்னர் இருவருமாக காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து சென்றனர்.
அந்தக் காலடிச் சுவடுகள் ஒரு பாழும் மண்டபத்தை சென்றடைந்தன. அம்மண்டபத்தில் அவர்கள் எண்ணியபடியே பும் மகளுமாக பேரழகிகளாக குணவதியும், லாவண்யாவும் இருக்கக் கண்டனர்.
பிரம்ம புத்திரன் குணவதியை நெருங்கி அவர்களுடைய வரலாற்றினைக் கூறுமாறு கேட்க குணவதியும் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாது கூறிமுடித்தாள். அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களாக அந்த இரு பெண்களும் நாட்டையும் தலைவனையும் இழந்து திக்கற்றவர்களாக ஆன நிலையானது பிரம்மபுத்திரனுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.
பின்னர் குணவதியை நோக்கி, அப்பெண்களின் காலடிச் சுவடுகளை வைத்து தாங்கள் எடுத்த முடிவையும் கூறி தங்கள் இருவரையும் மணம் செய்து கொள்ள விருப்பமா எனவும் அவ்வாறு திருமணம் செய்துகொள்ள தான் அவர்களை கட்டாயப்படுத்தப் போவதும் இல்லை எனவும் கூறிமுடித்தான்.
பிரம்மபுத்திரன் கூறிய அனைத்தையும் குணவதி ஒரு முறை அல்ல பலமுறைக்கு யோசித்துப் பார்த்தாள். தானும் தனது மகளும் அனாதைகளாக இருக்கும் சூழ்நிலையில் தங்களுக்கு ஏதேனும் ஒருவகையில் ஆதரவு தேவை என்பதையும் பிச்சை எடுப்பவர்களைப் போன்று தெருத்தெருவாக அலைந்து திரிவதைவிட ஒரு அரச குடும்பத்தில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் நல்லது என்று முடிவெடுத்தாள்.
பின்னர் பிரம்மபுத்திரனை நோக்கிய குணவதி, ''அரசே! தாங்களின் யோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்வதே நாங்கள் இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஏற்றது. எனவே தங்களின் விருப்பப்படி நாங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கிறோம்'' என்று பதில் உரைத்தாள்.
குணவதியின் சம்மதத்தைக் கேட்டு மகிழ்ந்த பிரம்மபுத்திரன் அவர்களின் காலடியின் அளவினைத்தெரிந்து கொள்ள விரும்பி அவளிடம் தெரிவிக்க அவர்களும் தங்கள் காலின் அளவுகளை அளந்து தெரிவித்தனர். அந்த அளவுகளை அறிந்ததும் பிரம்மபுத்திரனும், அழகேசனும் அதிர்ந்து போனார்கள்.
சிறிய காலடிக்கு உரியவளாய் குணவதியும், பெரிய காலடிக்கு உரியவளாய் லாவண்யவதியும் இருந்தனர்.
அவர்களின் எண்ணப்படி பெரிய காலடி அளவை கொண்ட லாவண்யவதியை பிரம்மபுத்திரனும் சிறுகாலடி அளவைக் கொண்ட கணவதியை அழகேசனுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். இனிமேல் என்ன செய்வது என்று திகைத்த பிரம்மபுத்திரன் தனது மகனின் எண்ணத்தை அறிய அழகேசனை நோக்கினான்.
தனது தந்தையின் குழப்பத்தை குறிப்பால் உணர்ந்து கொண்ட அழகேசன் "தந்தையே! தற்போது உண்டான நிலையில் இறைவன் நமக்கு அருளியதாகவே கருத வேண்டும். எனவே நாம் இதற்கு முன்னர் தீர்மானம் செய்தபடி தாங்கள் லாவண்யவதியைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் அவளின் தாய் குணவதியைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என தீர்க்கமாக கூறினான்.
அதன்பின்னர் குணவதியும், லாவண்யாவும் முறைப்படி அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டனர். நல்லதொரு முகூர்த்த நாளில் பிரம்மபுத்திரன் லாவண்யவதியையும், அழகேசன் குணவதியையும் முறைப்படி மணந்து கொண்டனர்.
வருடங்கள் பல கழிந்தன. அவ்விரு தம்பதிகளுக்கும் குழந்தைகள் பிறந்தன. இப்போது புதிதாக பிரச்சனை எழுந்தது.
மன்னன் பிரம்மபுத்திரனின் குழந்தைகள் அழகேசனை என்ன முறை கொண்டு அழைப்பது? அதே போன்று அழகேசனின் குழந்தைகள் பிரம்மபுத்திரனை எந்த முறைகொண்டு அழைப்பது? என்பது மட்டுமில்லாமல் அவ்விருவரின் குழந்தைகளும் ஒருவரையொருவர் என்ன உறவுமுறை கூறி அழைப்பது? என்பதுதான் அப்பிரச்சனை.
இந்தப் பிரச்சனைக் குறித்து எந்த ஒரு தீர்மானத்திற்கும் வா முடியாமல் பிரம்ம புத்திரனும், அழகேசனும் தடுமாற்றம் அடைந்தார்கள்
இவ்வாறாக கதையை கூறி முடித்த வேதாளம் "மன்னனே! இந்தக் கதையில் எழுந்துள்ள உறவு முறைப் பிரச்சனையை எவ்வாறு தீர்த்து வைக்கப் போகின்றீர்?'' என்று கேள்வியை எழுப்பியது.
வேதாளம் தன்னிடம் கூறிய எல்லா கதைகளுக்கும் தயக்கமின்றி விடைகளை கூறிய விக்கிரமாதித்தன் இந்த முறைத் தெரியாத உறவு முறைக்கு விளக்கம் அளித்திட முடியாமல் தடுமாற்றமடைந்தான்.
அவனது தடுமாற்றத்தை உணர்ந்து கொண்ட வேதாளமும், "மன்னா! இந்த உறவுமுறைப் பிரச்சனைக்கு தங்களைத் தவிர வேறு எவராலயுமே இந்த உலகத்தில் பதில் கூற இயலாது. இப்போதுதான் நாம் தீர்மானமான முடிவுக்கு வந்திருக்கிறோம். இவ்வளவு நோமும் நான் புதிர்கதைகளை கூறி வந்ததற்கு ஓர் காரணமும் உண்டு அக்காரணத்தை தற்போது விளக்கிக் கூற விரும்புகிறேன் அது மட்டுமல்ல நான் இப்போது கூறப்போவது என்னுடைய பூர்வ ஜென்மக் கதையாகும். இந்தக் கதையினை நீயும் கேள்! என்று கதையைத் தொடர்ந்தது வேதாளம்.
“மன்னனே! பூர்வ ஜென்மத்தில் எனது பெயர் காளத்தியன் என்பதாகும். சோழ நாட்டு சிவன் கோயில் ஒன்றில் அர்ச்சகனாக இருந்து வந்தேன். தினந்தோறும் அர்த்த ஜாமப்பூஜை முடியும் வரையில் இருந்து பூஜை முடித்துச் செல்வது என்னுடைய வழக்கமாகும்.
ஒரு நள்ளிரவு அர்த்த ஜாமப்பூஜை முடித்துச் செல்ல கோயில் மூலத்தானத்திற்குச் சென்றேன். அர்த்த ஜாம பூஜை நடக்கும்போது மூலத்தானக் கதவினை திறப்பது வழக்கம். இல்லையென்றால் கதவுகளை மூடும் முன்பாகவே அப்பூஜையினை முடிப்பது வழக்கம்
அவ்வாறே பூஜையினை நான் துவங்குகின்ற நேரத்தில் வக்தானத்தின் உட்புறமாக பேச்சரவம் எழுவதை கவனித்தேன். வாச்சர்யப்பட்டு கதவின் இடுக்கு வழியாக உள்ளே பார்த்தபோது பார்வதியுடன் பரமசிவன் உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட நானும் அவர்களின் உரையாடலை உற்றுக் கவனித்தேன்.
பரமசிவன் ஒவ்வொரு புதிர்கதைகளாக கூறி வந்தார். பார்வதி ஒவ்வொரு புதிருக்கும் வெகு சாமர்த்தியமாக பதில் கூறிவந்தாள்.
அக்கதைகள் அனைத்தையும் நான் கவனமாகக் கேட்டு வரலானேன். கதை வெகு சுவாரஸ்யமாக இருந்தபடியால் கவனக்குறைவாக மூலத்தானத்துக் கதவின் மீது சடாரென சாய்ந்துவிட்டேன். அதனால் கதவில் பொருத்தியிருந்த மணிகள் சலசல வென்று ஒலி எழுப்பின.
சட்டென மூலத்தானத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவாகுவதை உணர்ந்து கொண்டேன். சட்டென நானே இறைவனாகிய பரமேஸ்வரனிடம் சரணடைந்து விட எண்ணி, அவரது பாதங்களில் வீழ்ந்து "எம் பெருமானே! நான் எவரும் செய்யத் தகாத தவறினை செய்துவிட்டேன். தாங்களும் அன்னையும் புதிர் கதைகளைப் பரிமாறிக் கொண்டதை நான் காதாரக் கேட்டு பெரும்பாவத்தை செய்துவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து அருளவேண்டும்!'' என வேண்டினேன்.
சற்று நேரம் அமைதியாக இருந்த பரமேஸ்வரன், “காளத்தியா! எனை மன்னித்து அருள்வது ஒன்றும் பெரிய வேலையல்ல! ஆனால் எவராக இருந்தாலும் செய்த தவறுக்காக தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். எனவே நீ உனது அடுத்த மைத்தில் வேதாளமாக பிறந்து சிலகாலம் அவதிப்படுவாய்!'' என்று சாபமிட்டார்.
அந்த சாபத்தைக் கேட்ட நான் பதறிய படியே இறைவனை வணங்கி "பரமேஸ்வரா! இறைவா! எனக்குத் தாங்களிட்ட சாபத்திற்கு யாதொரு விமோசனமும் கூடாதா?" என கண்ணீருடன் கேட்டேன்
உடனே பரமேஸ்வர் ''காளத்தியா! விக்கிரமாதித்தனின் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்கு இரண்டு காதத் தொலைவில் பெரிய காடு ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் பெரிய மயானம் ஒன்றும் இருக்கிறது. அந்த மயானத்திற்கு எதிராக துர்காதேவி ஆலயமும் இருக்கின்றது. மயானத்து முருங்கை மரக்கிளையில் நீ வேதாளமாக தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பாய். அந்தக் காட்டில் வசிக்கும் ஞானசீலன் என்னும் முனிவன் ஆலயத்து துர்காதேவிக்கு ஆயிரம் மன்னர்களைப் பலிகொடுத்து உன்னை வசப்படுத்த முயல்வான்.
மன்னர்களை பலியிடுவதற்காக ஞானசீலன் அழைத்து வரும் மன்னனிடம் உன்னைப் பிடித்து வருமாறு கூறுவான். அவ்வாறு வரும் மன்னனிடம் நான் தேவிக்கு கூறிய புதிர்கதைகளை கூறிடு ஒவ்வொரு மன்னனிடமும் இந்தப் புதிர்கதைகளை கூறிடு எவராலுமே இப்புதிர்கதைகளுக்கு விடையினைக் கூற முடியாது விக்கிரமாதித்தன் ஒருவனால்தான் இப்புதிர்கதைகளுக்கான விடையைக் கூறிட இயலும்! உனது புதிர்கதைகளுக்கு ஒன்றும் விடாது சரியான விடையை எவனொருவன் கூறுகின்றானோ அவனே விக்கிரமாதித்தன் என்று தெரிந்து கொள்!
உன்னை வசப்படுத்த முயலுகின்ற ஞானசீலனைத் தந்திரமாக கொல்கின்ற வழியினை விக்கிரமாதித்தனுக்கு கூறிவிடு! ஞானசீலன் மாண்டபின்னர் சில காலம் நீ விக்கிரமாதித்தனுடன் இருந்து அவனுக்கே சேவை செய்திடு. பின்னர் உனக்கு இட்ட சாபமானது விமோசனமாக்கிவிடும் என்று கூறினார். எனவே நீ நான் கறியாகிர் கதைகளுக்கு எல்லாம் சரியானபடி விளக்கமளித்தாய் உனது சரியாகப் பதில்களைக் கொண்டு நீதான் விக்கிரமாதித்த மன்னா என்பதைப் புரிந்து கொண்டேன். இனிமேல் ஞானசீலனைக் கொல்ல நாம் முயற்சி செய்திட வேண்டும்' என்று கூறியது.
உடனே விக்கிரமாதித்தன் "வேதாளமே! இனி நான் என்ன செய்திட வேண்டும் என்பதை தெளிவாகக் கூறிடு" என்றான்
"விக்கிரமாதித்தரே! நான் நீர் சுமந்து செல்லும் பிரேதத்தில் இருந்து இப்போது வெளியாவேன். நீர் வெற்றுப் பிரேதத்தை மட்டும் அந்த முனிவன் ஞானசீலன் முன்பாக கொண்டு சென்று ஒப்படைத்து விடும். முனிவனும் அப்பிரேதத்தை யாக குண்டத்தில் எரியும் தீயில் போட்டுவிட்டு உம்மை அக்னி குண்டத்தை வலம் வருமாறும் வலம் வந்து முடித்ததும் உம்மை அடிபணிந்து வணங்குமாறும் கேட்டுக் கொள்வான். நீர் அவ்வாறு அடிபணிந்து வணங்கும்போது உமது தலையை வாளால் வெட்டி அக்னி குண்டத்தில் போட வேண்டும் என்பதே அவன் செய்துள்ள முடிவு. அதற்கு நீர் உடன்படாது வெகு சாமர்த்தியமாக அவனது தலையை வெட்டி அக்னி குண்டத்தில் போட வேண்டும்.
உடனே துர்காதேவி உமது முன்பாக பிரசன்னமாகி உனக்கு வேண்டிய வரங்களை எல்லாம் அளித்திடுவாள்" என்று வேதாளம் கூறிமுடித்தது.
விக்கிரமாதித்தனும் தான் அவ்வாறே செய்வதாக வேதாளத்திற்கு வாக்குக் கொடுத்தான்.
அதன் பின்னர் வேதாளமானது பிரேதத்தில் இருந்து வெளியானதும் வெற்றுப் பிரேதத்தை சுமந்தபடி ஞான சீலனின் அருகில் விக்கிரமாதித்தன் சென்றான்.
வேதாளம் தெரிவித்தது போலவே அங்கு ஞானசீலன் பயங்கள் பல செய்தான். முடிவில் விக்கிரமாதித்தனை படத்தை வலம் வந்து அடிபணிந்து வணங்குமாறு வேண்டினான்.
ஞானசீலனைப் பார்த்த விக்கிரமாதித்தன், ''முனிவரே! எனது வாழ்நாளில் பலர் என் முன்னால் அடிபணிந்து வணங்கி உள்ளனர். ஆனால் நான் எவருக்கும் அடிபணிந்து வணங்கியதில்லை ! எனவே தாங்கள் எழுந்து வந்து இந்த யாக குண்டத்தை எவ்வாறு அடிபணியவேண்டும் என்று ஒருமுறை செய்து காட்டிட வேண்டும். அதைப் பார்த்து பின் நானும் அப்படியே செய்து முடிக்கிறேன்'' என்று கூறினான்.
ஞானசீலனும் விக்கிரமாதித்தனுக்கு யாக குண்டத்தை எவ்வாறு வலம் வந்து வணங்குவது என்பதை செய்து காட்டிட உடனே விக்கிரமாதித்தன் தனது உடைவாளை உருவி ஞானசீலனின் தலையை ஒரே வெட்டில் துண்டித்து அக்னி குண்டத்துள் போட்டான்.
அவ்வாறு செய்த மறுநிமிடமே துர்காதேவி அவன் முன்பாக தோன்றினாள்.
"விக்கிரமாதித்தா! எது நடக்க வேண்டுமோ! அது சற்றும் குறையாது நடந்து முடிந்தது. இனி வேதாளம் உனது ஏவல்களுக்கு கட்டுப்பட்டு உனக்கு சேவை செய்திடும். அதனால் உலகம் முழுவதும் உன்னுடைய புகழ் பரவும்!'' என்று கூறியபடி விக்கிரமாதித்தனை ஆசீர்வதித்தாள்.
விக்கிரமாதித்தன் துர்காதேவியை பணிந்து வணங்கினான்.
''தாயே! எனது வாழ்நாள் முழுவதும் உனது கடைக்கண் பார்வையானது என்மீது என்றும் நீடித்து நிலைத்திட வேண்டுகிறேன். உனது பலிபீடத்தில் பலியிட்ட தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மன்னர்களும் உயிர் பெற்று எழச்செய்து அவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்குச் செல்ல அருள்புரிய வேண்டும்" என்று மிகவும் வேண்டி நின்றான்.
விக்கிரமாதித்தனின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட துர்காதேவியும் பலிபீடத்தில் பலியிடப்பட்ட அனைத்து மன்னர்களையும் மீண்டும் உயிர்பெற்று எழுந்திடச் செய்தாள். அம்மன்னர்கள் அனைவரும் தேவியை வணங்கி தங்கள் நாடுகளுக்குச் சென்றனர்.
விக்கிரமாதித்தனோ துர்காதேவியை மீண்டும் பணிந்து வணங்கி வேதாளத்தையும் தன்னோடு அழைத்துக்கொண்டு தனது நாடான உஜியினி மாகாளிப்பட்டணம் சென்றடைந்து உலகம் போற்றும்படியாக வாழ்ந்து அரசாட்சிப் புரியலானான்.
இவ்வாறாக போஜராஜனிடம் கதையைக் கூறி முடித்த மதனாபிஷேக வல்லிப் பதுமை போஜ ராஜனைப் பார்த்து. "மன்னரே! எமது விக்கிரமாதித்த மாமன்னர் அவர்களின் அற்புத ஆற்றலை நான் கூறிய கதையின் மூலம் அறிந்திருப்பீர்! இத்தகைய பேராற்றல் உமக்கும் இருந்தால் நீர் இந்த அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யலாம்'' என்றது.
இவ்வாறு அந்த பதுமை கூறி முடிக்கவும், சூரியன் மறைகின்ற நேரமும் சரியாகயிருந்தது. அதனால் சிம்மாசனத்தில் ஏறி அமரும் நேரம் தவறிய காரணத்தால் மன வேதனையடைந்த போஜராஜன் தனது அந்தப்புரத்திற்குத் திரும்பினான்.