மூன்றாவது நாள் பொழுது விடிந்ததும் போஜராஜன் நீராடி குல தெய்வத்தை முறையாக வழிபட்டு தனது அமைச்சரவை மற்றும் பரிவாரம் சூழ நவரத்தின சிம்மாசனம் இருக்கும் மண்டபத்தை வந்தடைந்தான்.
சிம்மாசனத்தின் முதல் இரு படிகளைக் கடந்தபோது அப்படிகளுக்கு காவலாக இருந்த பதுமைகள் ஒன்றும் கூறாது மௌனம் காக்கவே மூன்றாவது படியில் தனது காலை வைத்தான்.
அந்த நேரத்தில் மூன்றாவது படிக்கு காவலாக இருந்த மந்திர மனோன்மணிப்பதுமை கலகலவென்று சிரிக்கத் துவங்கியது.. பின்னர் அது போஜராஜனை நோக்கி "போஜ ராஜனே! சற்று நில்லும்! எமது விக்கிரமாதித்தரைப்போன்று வல்லமையும், சாகசமும் உமக்கு இருந்தால்தானே நீர் இந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து ஆட்சி செலுத்த முடியும்" என்று கூறியது.
உடனே போஜராஜனும் அந்தப் பதுமையை நோக்கி “ஏய் மந்திர மனோன்மணிப் பதுமையே உமது மாமன்னர் விக்கிரமாதித்தரிடம் நீ கண்ட சிறப்புக்கள் என்ன? அவற்றை நீ எமக்கு கூறிவிடுவாய்" என்றான்.
விக்கிரமாதித்தனின் கதையை மூன்றாவது படிக்குக் காவலாக இருந்த மந்திர மனோன்மணிப் பதுமை கூறத் தொடங்கியது.
"எமது விக்கிரமாதித்த மன்னர் இந்த நவரத்தின சிம்மாசனத்தில் இருந்து நல்லாட்சிப் புரிந்து வருகின்ற நேரத்தில் நாடாறு மாதகாலம் காடாறுமாத காலம் செல்லக்கூடிய நாளும் வந்தது.
அந்த நேரத்தில் மாமன்னான விக்கிரமாதித்தன் தான் இல்லாதபோது ஆட்சியும் நிர்வாகமும், சீராக இருந்திட வேண்டி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து பட்டியும், வேதாளமும் உடன் தொடர்ந்திட காட்டிற்குப் பயணமானான்.
மூவரும் கால் போனப் போக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே காணப்பட்ட பெரிய காட்டிற்குள் நுழைந்தனர்.
அதன் உள்ளே மூவரும் சென்று கொண்டிருக்கும் வேளையில் பாதையானது ஓரிடத்தில் இரண்டாகப் பிளந்து சென்றது. அங்கு நடப்பட்ட கல் ஒன்றில் சில விபரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதனை விக்கிரமாதித்தன் படிக்கலானான்.
அந்தக் கல்லில் இங்கிருந்து பிரிந்து செல்லும் இரண்டு பாதைகளில் வடபுறமாகச் செல்லும் பாதை வழியேச் சென்றால் அழகாபுரி என்ற நகரினை அடையலாம். அந்தப் பட்டணத்தை அழகேசன் என்னும் அரசன் ஆண்டு வருகிறான். அவனுடைய அரசபையில் தனவதி, குணவதி என்னும் பேரழகு வாய்ந்த இரு தாசிப் பெண்கள் மன்னனுக்கு வெண்சாமரம் வீசிடும் பணியினை செய்து வந்தனர்.
அந்த இரண்டு தாசிப் பெண்களுக்கும் மன்னனிடத்தில் பெரும் செல்வாக்கும் உண்டு. அதனால் அந்நாட்டு மக்களும், அப்பெண்கள் இருவரையும் மதிப்பும் மரியாதையுடனும் நடத்தினர்.
அந்தப் பெண்களில் யாராவது ஒருத்தியை எந்த ஒரு ஆண்மகன் அனுபவித்திட விரும்பினால் அவர்களுக்கு தலா ஆயிரம் வராகன் அளிப்பவர்கள் அனைவருக்குமே இன்பமளித்திட அத்தாசிப் பெண்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தங்களின் மனதை கவரக்கூடிய ஆண்மகனாக மட்டும் இருந்தால் அவனிடம் முன்கூறிய தொகையினைப் பெற்று அவனுக்கு இன்ப சுகத்தை குறைவின்றி அளித்திடுவார்கள்.
அடுத்து தென்புறமாகச் செல்லும் பாதையில் சென்றால் வீமாபுரி என்ற நகரத்தை அடையலாம். அந்த நகரில் ஏழுசுற்று மதில்கள் உள்ள விசித்திரமான அரண்மனை ஒன்று இருக்கும். அந்த மனையானது அமிர்த மோகினிக்கு சொந்தமானதாகும். அவளுக்கு பேரழகு வாய்ந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். அந்தப் பெண்னை எல்லோரும் பேசா மடந்தை என்றே அழைப்பார்கள், பேசாமடந்தை என்பது அந்தப் பெண்ணின் இயற் பெயரல்ல! அது காரணப் பெயராகும்.
அந்தப் பெண்ணை பேச வைப்பவர் எவராகயிருந்தாலும் அவருக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பதாக, அமிர்த மோகினி நிபந்தனை ஒன்றினை விதித்து இருந்தாள்.
பேசா மடந்தையின் பேரழகு பற்றிக் கேள்விப்பட்ட மன்னர்களும், செல்வந்தர்களும் அவளை மணந்திட வேண்டி வந்து அவளைப் பேச வைக்க முயன்று தோல்வியடைந்து பலவகைகளிலும் அவமானமடைந்து சென்றனர். ஆனால் இந்த இரு பாதைகளின் ஒவ்வொரு பாதையிலும் இருவராகச் செல்லாது தனித்தனியாகவே செல்ல வேண்டும் என்ற குறிப்பு கல்வெட்டாக இருந்தது.
கல்வெட்டில் இருந்த விபரங்களை எல்லாம் படித்து முடித்த விக்கிரமாதித்தன் பட்டியை நோக்கி “தம்பி! நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? உனது யோசனையை எனக்குக் கூறு என்றான்.
''அண்ணா ! நீங்கள் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் சென்று தனவதி, குணவதி இருவருக்கும் இருக்கின்ற சிறப்புக்களைப்பற்றி அறிய முயற்சியுங்கள். நான் தென்புற மிருக்கும் பாதையில் சென்று பேசாமடந்தை சம்பந்தமான விபரங்களையும், மர்மங்களையும் அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் என்று பட்டி கூறினான்.
பட்டியின் யோசனைப்படி விக்கிரமாதித்தன் வேதாளம் உடன்வர வடபுறம் செல்லும் பாதை வழியே சென்ற அழகாபுரியை அடைந்தான். அங்கு சென்றதும் வயது முதிர்ந்த துறவி போன்று வேடமிட்டு தனவதி என்றழைக்கப்பட்ட தாசியில் வீடு நோக்கிச் சென்றான்
அவளது இல்லத்தில் முன்பாக தனவதியை விரும்பி வருவோரின் வருகையைத் தெரிவிக்க வேண்டி மணி ஒன்று கட்டில் தொங்கவிடப்பட்டிருந்தது. துறவிக் கோலத்தில் இருந்த விக்கிரமாதித்தன் அம்மணியை அடித்தான்.
மணியோசையை கேட்ட மாத்திரத்தில் தனவதி தனது தோழியை அமைத்து ''வெளியே சென்று பார்! மணியோசை கேட்கின்றது. வந்திருப்பது பசுவாக இருக்குமானால், புல்லும், தண்ணீரும் வைத்து விடு. ஆண்டியாகவோ, பரதேசியாகவோ இருந்தால் அவர்களுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்பிவிடு. ஒருவேளை அழகான இளைஞன் யாராவது வந்திருந்தால் அவனிடம் இருந்து ஆயிரம் வராகன் பொன்னை வாங்கிக் கொண்டு அவனை உள்ளே அனுப்பிவிடு" என்றாள்.
வெளியே வந்த பணிப்பெண் வயது முதிர்ந்த தள்ளாடும் வயோதிகத் துறவி நிற்பதைக் கண்டு, "சுவாமி! எனது தலைவியின் கட்டளைப்படி தங்களுக்கு வயிறாற உணவளித்து அனுப்புகிறேன். நீங்கள் சற்று ஓரமாக அமருங்கள்" என்றாள்.
அவளது பேச்சைக் கேட்டதும் கலகலவென்று சிரித்தான் விக்கிரமாதித்தன். "அடி சேடிப் பெண்ணே ! கேவலம் நீ போடுகின்ற பிச்சைக்காக நான் இங்கு வரவில்லை. ஆயிரம் வராகன் பொன் கொடுத்து உனது தலைவியுடன் கூடி இன்பமடையவே வந்துள்ளேன்” என்றான்.
வயோதிக கோலத்தில் இருந்த விக்கிரமாதித்தனை நோக்கி சேடிப் பெண் சிரித்தாள். உடனே தன் தலைவியிடம் சென்று தெரியப்படுத்தினாள்.
சேடிப் பெண் தன்னிடம் கூறியதைக் கேட்ட, தலைவியோ கடுங்கோபமடைந்தாள். கையில் ஒரு உலக்கையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
"ஏய் கிழவா! இப்போதோ, எப்போதோ நீ சாகப் போகிறாய்! இந்த நேரத்தில் உனக்கு எதற்கு பெண்ணாசை வேண்டும்? மரியாதையாக இந்த இடத்தைவிட்டு ஓடிப் போய்விடு!'' என்றவாறு தன் கையில் இருந்த உலக்கையால் விக்கிரமாதித்தனை அடித்து துரத்தினாள்.
உலக்கை அடியை வாங்கியபடியே வெளியே வந்து பொத்தென்று தரையில் விழுந்தான் விக்கிரமாதித்தன்.
'பெண்ணே! நான் யாரென்று தெரியாமல் உலக்கையால் அடித்து அவமானத்தை ஏற்படுத்திவிட்டாய்! இதற்கு ஒருநாள் நீ என்னிடம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரவேண்டும். தக்க நேரம் வரும்போது உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன் ' என்று மனதுள் கூறிக் கொண்டவனாய் அதே கோலத்துடன் குணவதியின் மாளிகையை வந்தடைந்தான்.
குணவதியின் மாளிகை முன்பும் அழைப்பு மணிக் கட்டப்பட்டிருந்தது.
விக்கிரமாதித்தன் அந்த அணியை அடித்ததும், மாளிகையில் இருந்து சேடிப்பெண் ஒருத்தி வந்தாள்.
"சுவாமி! நீங்கள் பசியாறுமளவுக்கு உணவு தரட்டுமா!' அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப நான் வெகுமதிகளை கொடுக்கட்டுமா? என்று கேட்டாள்.
விக்கிரமாதித்தன் சிரித்துக்கொண்டே "அடி! சேடிப் பெண்ணே! நான் பிச்சைக் கேட்டோ, தானம் வாங்கிடவோ இங்கே வரவில்லை உனது தலைவியான குணவதியுடன் கூடி மகிழவே வந்துள்ளேன். இதனை நீ குணவதியிடம் தெரிவித்துவிடு" என்றான்.
உடனே சேடிப் பெண்ணும் மாளிகையினுள் சென்று குணவதியிடம் விக்கிரமாதித்தன் கூறியவற்றை எல்லாம் ஒன்றும் விடாமல் கூறினாள். அதைக்கேட்ட குணவதியோ, ஓடோடி வெளியே வந்து விக்கிரமாதித்தனை பணிந்தபடி ''சுவாமி! தங்களைப் போன்ற ஒரு தவ சீலரை உபசரித்திட நேர்ந்தது, நான் செய்த பாக்கியமே ஆகும். தயவு செய்து தாங்கள் மாளிகையினுள் வரவேண்டும்," என்று வேண்டினாள்.
மாளிகையினுள் நுழைந்த விக்கிரமாதித்தனை தக்க மரியாதையுடன் உபசரித்து நல்ல ஆசனம் ஒன்றில் அமரவைத்து பின்னர் வணங்கி நின்றாள்.
'சுவாமி! நான் எவ்வாறு தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும்? தாங்கள் அதனைத் தெரியப்படுத்திவிட்டால் நான் அவ்வாறே சேவை செய்கிறேன்'' என்றாள்
காளி கோலத்தில் இருந்த விக்கிரமாதித்தனும், 'குணவதி! நீ உன் பெயருக்கு ஏற்றாற் போலவே நற்குணம் கொண்டவளாக இருக்கின்றாய்! உன்னை சந்தித்துப் பேசியது எனக்குப் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் என் மனதில் உள்ள ஆசைகளை எல்லாம் உன்னிடம் தெரியப்படுத்த விரும்புகிறேன்'' என்றான்.
குணவதியும் விக்கிரமாதித்தத் துறவி என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்கும் ஆவலோடு நின்று கொண்டிருந்தாள்.
“குணவதியே! நான் வயோதிகனாக இருந்தாலும் பெண்களிடம் கூடி இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைமட்டும் எனக்கு குறையவில்லை. எனது வயதினை ஒரு பொருட்டாக கருதாது எனக்கு நீ இன்பசுகம் அளித்திடவேண்டும். அதுமட்டுமில்லாது, நான் தீராத நோயாளியாகவும் இருப்பதால் தக்க மருத்துவர்களைக் கொண்டு எனக்குப் போதுமான சிகிச்சையினையும் அளித்திட வேண்டும்" என்றான்.
அதனைக் கேட்ட குணவதி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். சுவாமி! தங்களின் விருப்பம் அதுவாக இருக்குமானால், அதனை தான் நிறைவேற்றுகிறேன். தங்களுக்குச் செய்யும் சேவையினை உறைவனுக்குச் செய்யும் சேவையாக கருதுகிறேன். எனவே தங்கள் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் விரும்பும் ரயிலும் தாங்கள் என்னோடே தங்கியிருக்கலாம்.' என்றாள்.
அந்த நேரத்தில் தனவதி தன் இல்லத்தில் கவலையோடு அமர்ந்திருந்தாள்.
தன்னைத் தேடி வந்தக் கிழவனை நாம் உலக்கையால் அடித்து பிட்டோமே! அதனை அந்தக் கிழவன் யாரிடமாவது தெரியப்படுத்திவிட்டானோ அல்லது அடியாட்களை கூட்டி வந்து நம்மைத் தாக்க வந்துவிட்டால் என்ன செய்வது? என்று கவலைக் கொண்டவளாய் தனது சேடிப் பெண்ணை அழைத்தாள். அவளிடம் துறவியை கண்காணித்து வருமாறு கூறினாள்.
துறவியைக் கண்காணித்த பணிப்பெண் வேகமாக திரும்பி வந்தாள். துறவிக்கு குணவதியால் மரியாதைக் கிடைத்ததையும் அவன் குணவதியுடனேயே தங்கி விட்டதையும் தனவதியிடம் திரும்பி வந்து கூறலானாள்.
அதனைக் கேட்ட தனவதியோ எவ்வகையிலாவது குணவதியை அவமானப்படுத்திட எண்ணியவளாய், மன்னனிடம் குணவதிக்கு உள்ள செல்வாக்கையும் குறைத்திட வேண்டும் என விரும்பியவளாய், வெகு நாட்களாக திட்டமிட்டு வந்த தனக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது என எண்ணி மகிழ்ச்சி யடைந்தாள்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் அரண்மனைக்கு வந்த 3 குணவதியும், தனவதியும் பணியின் பொருட்டு சென்றனர்.
அரசவை கூடியதும் தனவதி மன்னனை பணிந்து வணங்கினாள். ''அரசர் பெருமானே! கேவலமான தொழு நோய்பிடித்த ஒரு கிழவனை தனது ஆசைநாயகனாக வைத்துள்ள குணவதி இந்த சபையில் இருக்க தகுதி யற்றவள். எனவே அவளை எக்காரணம் கொண்டும், அரண்மனைக்குள்ளே அனுமதிக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்'' என்றாள்.
தனவதி தன்னைப்பற்றி குறை கூறியதும் குணவதி எழுந்து அரசனை வணங்கி நின்றாள்.
''அரசே! கடவுள் அருள் பெற்ற வயோதிக துறவிக்கு நான் அடைக்கலம் தந்தது கருணையின் அடிப்படையில்தானே ஒழிய வேறொன்றும் இல்லை, ஆனால் தனவதியின் கதையோ அவ்வாறில்லை! அவள் பணம் ஒன்றினையே குறிக்கோளாகக் கருதிக்கொண்டு அருவருப்பான தோற்றமும், ஆண்மையில்லாத மான ஒரு வைசியனை ஆசைநாயகனாக வைத்துக் மள்ளாள், என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றாள்.
இதனைக்கேட்ட தனவதி அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாதவளாய் என்ன செய்வது என்று திகைப்படைந்தாள்.
உடனே தன்னுடைய மாளிகைக்கு ஆட்களை அனுப்பினாள். அங்கிருந்து விலை உயர்ந்த அணிகலன்களை எல்லாம் கொண்டு வரச் செய்தாள். பின் அவைகளை மன்னருக்கு காணிக்கையாகக் கொடுத்தாள், "அரசர் பெருமானே! எனது அன்பளிப்பான இந்த விலை மதிப்புமிக்க அணிகலன்களை தங்களுக்கே காணிக்கை ஆக்குகின்றேன். இதனைப் போன்று குணவதியும் தங்களுக்கு காணிக்கை அளித்தால் மட்டுமே அவள் இந்த அவையில் இருக்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அவளை ஒரு பிச்சைக்காரியாக கருதியபடி அவையைவிட்டே வெளியேற்றிட வேண்டும்." என்று வேண்டிக்கொண்டாள்.
குணவதி தன்னுடைய உயர்ந்த குணத்தாலேதான் உயர்ந்து நின்றாள். அவளிடம் பணப்பலம் இல்லை . எனவே தனவதி அரசர்க்குக் கொடுத்த காணிக்கை அளவுக்குத் தன்னால் தர இயலாது என்பதை அவள் உணர்ந்திருந்தாலும்கூட அவள் முன்பாக தான் தாழ்ந்து விடக்கூடாது என்று எண்ணி அரசரிடம் தனது காணிக்கையை மறுநாள் அனுப்பி வைப்பதாக கூறி தன் மாளிகைக்குத் திரும்பினாள்.
குழப்பத்தோடும், மனவருத்தத்தோடும், திரும்பிய குணவதி யைக் கண்டு விக்கிரமாதித்தன் அதற்கான காரணத்தைக் கேட்டான்.
விக்கிரமாதித்தன் அந்த நேரத்தில் தன்னை அன்போடு விசாரித்ததுக் கண்டு குணவதி மனம் மகிழ்ச்சியடைந்தாள். அரண்மனையில் நடந்ததை ஒன்று விடாமல் தெரியப்படுத்தினாள்.
“குணவதி! நீ எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். நீ அரண்மனைக்கு சென்றிடு. இனிமேல் இந்தப் பிரச்சனையை நான் கவனித்துக் கொள்கிறேன்'' என்றான்,
மறுநாள் காலையில் அரண்மனைக்கு குணவதி புறப்பட்டுச் செல்லும் நேரத்தில், மன்னன் இன்முகத்துடன் அவளை வரவேற்றார்.
"குணவதி வா... வா! உன் வருகையைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்! என்றபடி சிம்மானத்தினை விட்டு இறங்கி குணவதியின் அருகே வந்துவிட்டார் மன்னர்.
"குணவதி! இன்று நீ அதிகாலையில் எனக்கு அனுப்பி வைத்த காணிக்கைப் பொருட்கள் எல்லாம் ஏழு யானைகளில் வந்து சேர்ந்தன. உன்னுடைய காணிக்கைப் பொருட்களின் மதிப்பினைட் பார்க்கின்ற வேளையில் தனவதி அனுப்பிய காணிக்கைப் பொருட்கள் சாதாரணமானவைதான்" என்றார் மன்னர்.
இதனைக் கேட்டதும் தனவதி மேலும் அவமானமடைந்தாள் அவளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
"மன்னா! குணவதி அனுப்பிய பரிசுப் பொருட்களை வைத்துக்கொண்டு அவளின் சிறப்பினை மதிப்பிட்டுக் கூறுவது தவறான செயல் என்றே நான் நினைக்கிறேன். இப்பெரும் செல்வத்தை அவள் யாரிடம் இருந்தோ கடன் வாங்கி வேந்திருக்கின்றாள். நான் வேறு ஒரு நிபந்தனையை விதிக்கிறேன் கேளுங்கள். நம் நாட்டில் இருந்து வெகு தொலைவில் உள்ள விமாபுரி என்ற நகரில் பேசாமடந்தை என்னும் பெண் ஒருத்தி இருக்கின்றாள். அவளை சந்திக்கும் முன்பாக பல சோதனைகளை கடந்தாக வேண்டும். அதன் பின்னரே அவளைப்பேச வைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல அவளது பெரும் செல்வத்திற்கும் அதிபதியாகவும் ஆகிவிடலாம். அவ்வாறு செய்யத் தவறினால் பலவிதமான அவமானங்களுக்கு ஆளாக நேரிடலாம். நான் எனது ஆசை நாயகனான வைசியரை அவளிடம் அனுப்பி வைத்து பேச வைத்து அவளைத் திருமணம் செய்து கொண்டுவரச் செய்கிறேன். வைசியர் அவ்வாறு அவளை திருமணம் செய்து வந்து விட்டால் குணவதி அவளது அரச பதவியைத் துறந்து எனது சேடிப் பெண்களில் ஒருத்தியாக பணியாற்ற வேண்டும் எனது ஆசை நாயகரான வைசியர் கிருமணம் செய்யாவிடில் குணவதியின் ஆசைநாயகனான கிழவன் சென்று இக்காரியத்தை முடித்து பேசா மடந்தையைப் பேச வைக்கிறாரா என்பதைப் பார்க்கலாம்'' என்று கூறினாள்.
தனவதி இத்தகைய சவாலினை விடவே குணவதியும் வேறு வழியில்லாமல் அந்தச் சவாலினை ஏற்றுக் கொண்டாள்.
தனவதியோ தன் மாளிகையை வந்தடைந்ததும் வைசியனை வீமாபுரிக்கு செல்லுமாறு கூறினாள். அரண்மனையில் தான் மன்னரிடம் போட்ட சபதத்தினை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தாள்.
அதனைக் கேட்ட வைசியனோ செய்வதறியாது திகைத்தான். தன்னால் பேசா மடந்தையைப் பேச வைத்திட முடியும் என்ற நம்பிக்கை வைசியனுக்கு இல்லை. தனது அவநம்பிக்கையினை தனவதியிடம் தெரியப்படுத்தினால் அவள் நம்மை வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவாளே என்று அச்சமடைந்தான். எனவே தனது கருத்தை தெரிவிக்காமல் வீமாபுரிக்கு சென்றிட முடிவு செய்தான்.
வைசியனிடம் தனவதி ஆயிரம் பொன்னைக் கொடுத்து நீங்கள் எவ்வகையிலாவது பேசா மடந்தையை சந்தித்து, அவளை பேச வைத்து வெற்றியுடனே திரும்பிவர வேண்டும்,'' என்று வேண்டினாள்.
தனவதி தன்னிடம் அளித்த ஒரு லட்சம் பொன்னையும் கையில் வாங்கிய வைசியன் வீமாபுரியை அடைந்து அங்குள்ள ஓர் விடுதியில் தங்கினான்.
மறுநாள் காலையில் விடுதியில் இருந்து தங்கிய வைசியன். பேசாமடந்தையின் மாளிகையின் முன்பாக இருந்த அழைப்பு மணியை அடித்தான்.
உடனே இரண்டு பணியாளர்கள் வெளியே வந்தனர். வைசியனை அழைத்துச் சென்று கணக்கர்களிடம் சேர்த்தனர்.
கணக்கர்கள் வைசியனிடம் இருந்து ஆயிரம் பொன்களை வாங்கிக் கொண்டு கோட்டையில் முதல் வாசலுக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் வாசலுக்குச் சென்ற வைசியனிடம் அங்கே தயாராக யிருந்த பணியாளர்கள் அவனுக்கு அறுசுவையான உணவினைக் கொடுத்தார்கள்,
வைசியனும் தன் தேவைக்கு அதிகமாக உணவை உண்டான் அவர்கள் இரண்டாவது கோட்டை வாசலுக்கு அவனை அனுப்பி வைத்தனர்.
அங்கே காணப்பட்ட அறையில் வைசியன் உள்ளே நுழைந்தான். உடனே ஒரு பதுமையானது முக்காலியைப் போட்டு வைசியனை அமர வைத்தது. வேறொரு பதுமை வைசியன் முக்காலியை விட்டு எழுந்து விடாதபடி கெட்டியாக பிடித்துக் கொண்டது. மூன்றாவதாக ஒரு பதுமை வந்தது.
அது வைசியனின் தலையை மொட்டையடித்தது. பின்னர் மூன்று பதுமைகளுமே ஒன்று சேர்ந்து வைசியனைப் பிடித்து வெளியே கொண்டு வந்து தள்ளிவிட்டன.
வைசியனோ அவமானத்தினால் தலைகுனிந்தபடி அழகாபுரி வந்து தனவதியின் முன் நின்றான்.
பேசாமடந்தையை பேச வைத்து விடுவான் வைசியன் என்று எதிர்பார்த்து இருந்த தனவதி அவனது மொட்டைத் தலையினைக் கண்டதும் பெரும் கோபமடைந்தாள். தனது ஆசை நாயகனை பலவாறாக ஏசினாள்.
'எனது ஆசை நாயகனே பேசாமடந்தையை போட வக்க உயாமல் அவமானப்பட்டு திரும்பிவிட்டான். கேவலம், குணவதி மாளிகையில் இருக்கும் கிழவனா பேச வைத்திடப் போகிறான்' என நினைத்து நிம்மதியடைந்தாள்.
அடுத்த நாள் பொழுது புலர்ந்ததும் வழக்கம்போல் தனவதியும், குணவதியும் அரண்மனைப் பணிக்குச் சென்றனர். அங்கு சென்றதும் தனவதி மன்னரை வணங்கி "வேந்தே! பேசாமடந்தை யைப் பேச வைத்திடும் முயற்சியில் நான் அனுப்பி வைத்த வைசியர் தோற்று வீடு திரும்பினார். இனி இந்த முயற்சியில் குணவதி இறங்கட்டும்" என்றாள்.
குணவதி வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக் கொண்டவ ளாக தன் மாளிகைக்குத் திரும்பினாள். விக்கிரமாதித்தனிடம் நடந்தவற்றை தெரியப்படுத்தினாள்.
உடனே விக்கிரமாதித்தன் ''பெண்ணே ! வருத்தப்படாதே! நாளைய தினம் காலைப் பொழுதில் வீமாபுரி சென்றடை கிறேன். நீ நாளை மன்னனை சந்தித்து இன்று முதல் நாற்பத்தைந்து நாட்களுக்குள் நான் பேசாமடந்தையை பேச வைத்து வெற்றியடைந்து அவளோடு நாடு திரும்புவேன் என்று கூறிவிடு" எனக் கூறினான்.
மறுநாள் காலை நேரத்தில் வேதாளம் பின்தொடர் கிரமாதித்தன் கிளம்பி வீமாபுரியை வந்தடைந்தான். அங்கு 'ற பின்னர் விக்கிரமாதித்தன் அள்ளகரத்துத் தெரு ஒன்றில் நடந்து சென்ற போது கடை ஒன்றில் பட்டி சொக்க கொண்டிருப்பதைப் பார்த்தான்.
விக்கிரமாதித்தனை அங்கு கண்டதும் பட்டி எழுந்தோடிச் ப வரவேற்றான். உடனே பட்டியும் விக்கிரமாதித்தனும் வியாபாரிகள் போன்று வேடமிட்டு அந்த ஊரில் கிழவி ஒருத்தி நடத்தி வந்த உணவு விடுதிக்குச் சென்று பசியாறிவிட்டு அங்கேயே தங்கிக் கொண்டனர்.
மறுநாள் பொழுது விடிந்ததும் விக்கிரமாதித்தனும் பட்டியம் எழுந்து நீராடிவிட்டு புத்தாடை அணிந்து கிழவி நடத்தி வந்த விடுதியில் உணவை உண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் பேசா மடந்தையைக் காணச் செல்வதைப் பற்றி கலந்து ஆலோசனை செய்தனர். திட்டங்கள் பல போட்டனர்.
விக்கிரமாதித்தன் வேதாளத்தை அழைத்து தனக்கு ஆயிரம் பொன் தேவை எனக் கூறவே ஆயிரம் பொன் அவனை வந்தடையுமாறு வேதாளம் செய்தது.
விக்கிரமாதித்தனும், பட்டியும் வேதாளம் வரவழைத்த ஆயிரம் பொன்னையும் எண்ணிச் சரிப்பார்த்துக் கொண்டிருந்த போது அக்கம் பக்கமாய் வந்த கிழவி அவ்விருவரும் ஏதோ வியாபாரம் செய்ய தீர்மானித்து புறப்படுகிறார்கள் என்று எண்ணினாள்.
"தம்பிகளா! நீங்கள் இருவரும் என்ன வியாபாரம் செய்யப் போகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டாள்.
விக்கிரமாதித்தன் அவளைப் பார்த்து, "பாட்டி உங்களது நகரில் உள்ள பேசா மடந்தையை பற்றி எவ்வளவோ கதைகள் கேள்விப்பட்டுள்ளோம். அவளை நாங்களும் போய்ப் பார்க்கலாம் என தீர்மானம் செய்துள்ளோம்'' என்றான்.
அதனைக் கேட்ட பாட்டியோ, "தம்பிகளா! உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலையெல்லாம்! அவளை சந்தித்துப் பேச வைப்பது என்பது நடக்கிற காரியமா? பலர் அந்த முயற்சியில் ஈடுபட்டு தோல்வியைத் தழுவி மொட்டையடிக்கப்பட்டு அவமானப் பட்டிருக்கின்றார்கள். உங்களைப் பார்த்தால் நல்ல பிள்ளைகளைப் போன்று தெரிகின்றீர்கள்! நீங்கள் வீணாக ஆயிரம் பொன்னையும் மெந்து அவமானப்பட்டு திரும்புவதைவிட பேசாமல் ஊருக்கே சென்றுவிடுங்கள்'' என்றாள்.
அதனைக் கேட்ட விக்கிரமாதித்தனோ, ''பாட்டி! பேசா மடந்தையின் வினோதமான நடைமுறைகளைக் கேள்விப் பட்டோம்! அதிலிருந்து அவள் எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் என்பது எங்களுக்கு வியப்பை அளித்தது. அதனைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். மேலும் அவளுடைய சாகசங்களை எல்லாம் எப்படியாவது முறியடித்திடவேண்டும். அதுவே எங்களது விருப்பம். அதுமட்டுமல்லாது நாங்கள் அவளைப் பார்க்கச் செல்கின்ற நேரத்தில் எவ்வகையிலான அற்புதங்கள் எல்லாம் நிகழும் என்பதையும் நீ எங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பாய்!'' என்று கேட்டுக் கொண்டான்.
''தம்பிகளே! அவளை சந்திக்க வருகின்ற அனைவரும் நீங்கள் கூறுவது போன்றே பேசிடுவர். நீங்களும் அப்படித்தானே!" என்று சிரித்தாள் பாட்டி.
பட்டியும், விக்கிரமாதித்தனும் பாட்டியை வியப்போடு பார்த்தனர்.
உடனே பாட்டி பேசாமடந்தையின் மாளிகையில் உள்ள அற்புதங்களை கூறத் தொடங்கினாள்.
பேசாமடந்தையின் கோட்டை வாசலில் இருந்து அவள் இருப்பிடமான அரண்மனை வரையிலும் மொத்தம் பத்து வாசல்கள் உண்டு .
முதலாவது வாசலை அடைந்தால் அங்கு ஓர் அழைப்பு வியிருக்கும். அந்த அழைப்பு மணியை அடித்தால் காவலர்கள் வந்து அழைத்து சென்றிடுவர்.
அங்கிருக்கும் கணக்கர்கள் ஆயிரம் வராகனை கேட்டு வாங்கிக் கொண்டு விருந்து வைத்து இரண்டாம் வாசலுக்கு அனுப்பி வைத்துவிடுவர்.
இரண்டாவது வாசலில் மூன்று பதுமைகள் இருக்கும். இம்மூன்று பதுமைகளும் விசையினால் இயக்கம் செய்யும்.
ஒன்று முக்காலியைக் கொண்டு வந்து போடும். இரண்டாவது பதுமை பேசாமடந்தையை சந்திக்க வந்தவனைப் பிடித்து முக்காலியில் உட்காரவைக்கும். மூன்றாவது பதுமை உட்கார்ந்தவனுக்கு மொட்டையடித்து பின்னர் மூன்றும் சேர்ந்து வந்தவனை வெளியே துரத்திவிடும்.
மூன்றாவது வாசலுக்குச் சென்றால் அங்கே இரண்டு மல்யுத்த வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் இருவரும் ஆளை அடித்து உதைத்து வெளியேற்றிடுவர். இதனைத் தாண்டி நான்காவது வாசலுக்குச் சென்றால் ஒரு கருங்குரங்கு காத்துக் கொண்டிருக்கும். அந்தக் குரங்கானது வருகின்றவர்களை பயங்கரமாக அச்சுறுத்தி வெளியே துரத்திவிடும்.
நான்காவது வாசலையும் தாண்டி ஐந்தாவது வாசலுக்குச் சென்றால் புலி ஒன்று கடுங்கோபத்துடன் சீறிப் பாயும்! அந்தப் புலியையும் சமாளித்து, ஆறாம் வாசலுக்குச் சென்றால் மதயானை ஒன்று தாக்க முயற்சிக்கும். ஏழாம் வாசலில் தரைக்கிணறு ஒன்று பெரிதாக இருக்கும் அக்கிணற்றை கவனிக்காமல் சென்றால் அதன் உள்ளே விழுகின்ற நிலை ஏற்படும். கிணற்றுள் விழுந்ததும் கிணற்றின் மேல் பகுதியில் தானாக இரு பலகைகள் வந்து கிணற்றை மூடிவிடும். எட்டாம் வாசலில் வாய்க்கால் ஒன்று இருக்கும். அது சேறு நிறைந்து காணப்படும்.
அந்தச் சேற்றில் இறங்கி அப்புறமாகச் சென்றால் நத்தைக் கூடு ஒன்றில் சிறிது நீரும் ஓலைச் சுருள் ஒன்றும் இருக்கும். வாய்க்காலைக் கடந்ததும் ஓலைச் சுருளைக் கொண்டு சேற்று அப்பியிருக்கும் இடத்தினை கால்பகுதியில் நன்றாக வழித்துவிட்டு நகைக் கூட்டுக்குள் இருக்கும் நீரைக் கொண்டு கால்களை சுத்தம் செய்து மீதம் பாதியளவு நீரை நத்தைக் கூட்டில் வைத்து ஒன்பதாம் வாசலுக்கு செல்ல வேண்டும்.
ஒன்பதாம் வாசலில் பளிங்கு மண்டபம் ஒன்று காணப்படும் அதன் தலைப்பகுதி கால்களை வழுக்கிவிடும் அளவுக்கு வழவழப்பாக இருக்கும். எவ்வளவு கவனமாக நடந்தாலும் கால்கள் வழுக்கித் தரையில் வீழ்ந்து மண்டை உடைபடுவது உறுதியாகும்.
இவைகளை எல்லாம் மீறியபடி பத்தாவது வாசலுக்கு வந்தால் அங்கே ஒரு ஆயிரங்கால் மண்டபம் தென்படும். அம் மண்டபத்தினுள் வெளிச்சமின்றி இருள் அடர்ந்து இருக்கும். அந்த இருள் அடைந்த மண்டபத்துள் வழியினை நன்கு அறிந்து நடக்க வேண்டும். கொஞ்சம் கவனம் இல்லாமல் நடந்தாலும் மண்டபத்தூண் எதிலாவது மோதி மண்டை உடைபட்டு இறக்க நேரிடும்.
இந்தச் சோதனைகள் அனைத்தையும் சமாளித்து உள்ளே சென்றால் பேசாமடந்தையின் நவரத்தின சிங்கார மண்டபத்தைக் காணலாம். அந்த மண்டபத்தில் எந்த நேரமும் எரிந்து கொண்டிருக்கும் தூண்டா விளக்குகளும் பிற விளக்குகளும் அம்மண்டபப் பகுதியை அழகுப் பெற செய்திடும்.
அந்த மண்டபத்தின் உள்ளே அலங்கார மஞ்சம் ஒன்று இருக்கிறது. அந்த மஞ்சத்தில் கால் மாடு, தலை மாடு பகுதிகளை நன்றாக ஆராய்ந்து அதில் அமர வேண்டும். அவ்வாறு சரியானபடி அமாந்தால் சில சிங்காரப்பதுமைகள் வந்து ராஜ உபச்சாரங்களைச் செய்யும் முறை மாறி அமர்ந்துவிட்டால் வேறு சில பதுமைகள் அவ்வாறு அமர்ந்தவனின் தலையை மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளிக்குத்தி அவமானத்தை ஏற்படுத்தி வெளி யேற்றும். இவைகள் அனைத்தையும் கடந்த பின்னர்தான் பேசாமடந்தையினை சந்திக்க முடியும். அந்த சந்திப்புக்கூட நேருக்கு நேராக இருக்காது. திரை ஒன்று தொங்கவிடப் பட்டிருக்கும் திரைக்கு அப்பால் பேசா மடந்தை அமர்ந்திருப்பாள். அவளை மூன்று வார்த்தைகள் மட்டும் பேச வைத்துவிட்டால் அவளை திருமணம் செய்து கொண்டு அவளின் ராஜ்ஜியத்திற்கே அதிபதியாகிவிடலாம். அவளைப் பேச வைக்கத் தவறிவிட்டால் பலவகைகளிலும் அவமானப்பட்டு கோட்டைக்கு வெளியே விரட்டியடிக்கப் படுவார்கள்” என்று பேசாமடந்தையின் விபரத்தைக் கூறி முடித்தாள் பாட்டி.
"பாட்டி! நீ பேசாமடந்தையின் கோட்டை ரகசியங்களை மட்டும்தானே கூறினாய்! அவளின் பேரழகினைப்பற்றி கூறவில்லையே!" என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.
"தம்பி! பேசாமடந்தையின் கூந்தல் அழகைச் சொல்லி மாளாது. சம்பங்கி எண்ணெய், சவ்வாது சாந்து ஆகியவற்றை கலந்து பூசி நறுமணமிக்க முல்லை மலர்சரத்தைச் சூடியிருப்பாள். அவளது கருங்கூந்தல் நீண்டு வளர்ந்து இருப்பது திரண்டு வரும் கருமேகக் கூட்டத்தை ஒத்து அமைந்திருக்கும்.
கார்மேகக் கூட்டத்திற்கு நடுவே மூன்றாம்பிறை காணுவது போல் அவளது முன்நெற்றி பிரகாசமாய் அமைந்திருக்கும். புருவங்கள் வானவில்லைப் போன்றும் விழிகள் நிலோற்பவ மலர்களைப் போன்றும், மூக்கு செண்பகப் பூவைப் போன்றும் இருக்கும். மேலும் அவளது கன்னங்கள் செழுமையாகவும், மார்பகங்கள் சொர்ணத்தால் வடிக்கப்பட்ட பால்குடங்களோ என எண்ணி வியக்குமாறு தோன்றிடும். உடுக்கைப் போன்ற சிற்றிடையும். தாமரைத் தண்டுகள் போன்ற இளந்தளிர் கரங்களும், வாழைத் தண்டுப் போன்றிருக்கும் கால்களும் அவளது அழகிற்கு மெருகு ஏற்றும். இத்தகைய பேரழகு மிக்கவளாகவும் அங்க லட்சணம் கொண்டவளாகவும் இருப்பாள். அவள் பட்டாடை மற்றும் அணிகலன்களை அணிந்திருப்பதைப் பார்க்கின்றபோது விண்ணுலகத்து மங்கையோ என்று வியக்கத் தோன்றும். இத்தகைய பாமகுப் பெற்ற பேசாமடந்தையை யாராலுமே வெற்றிபெற முடியாது. எனவே நீங்கள் வீணாக ஆசைப்பட்டு அவமானப்பட்டு நானம் நொந்து போகாமல் ஊருக்குச் செல்லும் வழியைப் பாருங்கள்" என்றாள் பாட்டி,
உடனே விக்கிரமாதித்தன் "பாட்டி! நாங்கள் பேசா மடந்தையைப் பற்றி தெரிந்து கொள்ளவே உன்னிடம் அதனைப் பற்றிக் கேட்டோம். அவளை அடைந்திட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த மட்டும் சும்மா சுற்றிப் பார்த்து வருகிறோம்" என்று பட்டியையும், வேதாளத்தையும் அழைத்துக் கொண்டு பேசாமடந்தையின் கோட்டையின் முதல் வாயிலினை வந்தடைந்தான்.
முதல் வாயிலில் காணப்பட்ட அழைப்பு மணியை பட்டி அடித்தான். மணி அடித்தவுடன் இரண்டு காவலர்கள் அவனை அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த கணக்கர்கள் ஆயிரம் பொன்களை விக்கிர மாதித்தனிடம் இருந்து வாங்கிக் கொண்டு அருஞ்சுவை விருந்து அளித்தனர்.
விருந்தினை உண்டு கொண்டிருந்தபோது விக்கிரமாதித்தன் அங்கிருந்த கணக்கர்களில் ஒருவனை தந்திரமாகப் பேசி நட்பாக்கிக் கொண்டான். அவர்கள் அந்த கணக்கனையும் தம்முடன் அழைத்துக் கொண்டு இரண்டாம் வாசலைக் கடக்கின்றபோது பணியாள் ஒருவன் எதிரே வந்தான்.
விக்கிரமாதித்தன் தங்களுக்கு எதிர்புறத்தில் வந்த பணியாளை வண்டுமென்றே மோதி "அடேய்... என்னப்பா நீ கொஞ்சம்கூட பாதையில்லாமல் நேருக்கு நேராக வந்து மோதிக் கொண்டாயே! எனை நான் என்ன செய்கிறேன் பார்!'' என்று கூறி இரண்டாம் சலின் உட்புறமாகப் பிடித்து தள்ளினான்.
விக்கிரமாதித்தனால் தள்ளப்பட்ட பணியாள் உள்ளேச் சென்று விழுந்ததும். பாட்டி முன்பு கூறியபடியே மூன்று பதுமைகள் வந்து பணியாளை மொட்டையடித்து வெளியே தள்ளின. இவ்வாறு தள்ளியவுடன் கணக்கன் உடன்வர விக்கிரமாதித்தனும் மற்றவர்களும் அடுத்த மூன்றாம் வாசலை அடைந்தார்கள்,
அதுவரையிலும் கணக்கனுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டு வந்த விக்கிரமாதித்தன் மூன்றாவது வாசல் வந்ததும் அதில் கணக்கனைப் பிடித்து தள்ளிவிட்டான்.
உடனே உள்ளேயிருந்து வந்த இரண்டு மல்யுத்த வீரர்களும் அவனைப்பிடித்து அடித்து உதைத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்ட விக்கிர மாதித்தன், தன்னோடு பட்டியும், வேதாளமும் உடன்வர நான்காம் வாசலை சென்றடைந்தான்.
அங்கே ஒரு பயங்கரமான கருங்குரங்கானது அவர்களைத் தாக்க வந்தது.
வேதாளத்தின் மூலம் அந்தக் குரங்கானது விசையால் இயக்கப்படுகின்ற பதுமையே என்பதை அறிந்த விக்கிரமாதித்தன் வேதாளத்தை ஏவிவிட்டு அந்தக் குரங்கை அடித்து நொறுக்கிட கூறினான்,
வேதாளமும் அப்படியே செய்யவே அவர்கள் அனைவரும் ஐந்தாவது வாசலை வந்தடைந்தனர்.
ஐந்தாவது வாசலில் இருந்த புலியையும், ஆறாவது வாசலில் இருந்த யானையையும் அடித்து வீழ்த்தி ஏழாவது வாசலுக்கு வந்தனர்.
அந்த வாசலில் பெரிய அளவுடைய தரைக்கிணறு இருந்தது தரையோடு தரையாக அக்கிணற்றின் அகன்ற வாய்ப்பகுதி இருந்ததால் அதனை எளிதாகத் தாண்டுவது என்பது இயலாது என உணர்ந்த விக்கிரமாதித்தன் பட்டியைப் பார்க்க, பட்டி அருகே இருந்த பெரிய பாறாங்கல்லைத் தூக்கி கிணற்றில் போட, கிணற்றின் இரு பலகைகள் மேலாக வந்து மூடிக் கொண்டன.
அப்பலகையின்மீது விக்கிரமாதித்தனும், பட்டியும் வேதாளமும் ஏறிக் கிணற்றைக் கடந்து எட்டாம் வாசலை அடைந்தனர். அந்த வாசலில் சேற்று வாய்க்கால் இருந்தது. அதனைக் கடந்துதான் அடுத்த வாசலை அடைய வேண்டும். அதனால் வேதாளத்தின் உதவியால் வாய்க்காலை கடந்து பட்டி அப்பால் சென்றான்.
விக்கிரமாதித்தன் சேற்று வாய்க்காலில் இறங்கி கரையேறி வேதாளத்தின் உதவியால் கால்களை கழுவிக் கொண்டு நத்தைக் கூட்டில் பாதி நீர் இருக்குமாறு செய்துவிட்டு ஒன்பதாவது வாசலை சென்றடைந்தான்.
அந்த வாசலுக்கு அடுத்தப்படியாக பளிங்கு மண்டபம் ஒன்று இருந்தது. அந்த மண்டபத்தின் தரையானது பாட்டி கூறியபடியே மிகவும் வழவழப்பாக இருக்கவே, வேதாளத்தின் மூலம் முதலில் பட்டி மண்டபத்தைக் கடந்தான்.
வேதாளம் கொடுத்த மெழுகுக் கொழுப்பினை விக்கிரமாதித்தன் தன் கால்களில் தடவியபடி மிகவும் கவனமாக அம்மண்டபத்தின் கீழே விழுந்திடாது கடந்து சென்று பத்தாவது வாசலையடைந்தான்.
அந்த வாசலுக்கு அடுத்தபடியாக இருந்த ஆயிரங்கால் மண்டபமானது இருள் அடர்ந்து காணப்பட்டது.
சரியான வழியைத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டப தூண்களில் மோதி உயிரைவிட நேரிடும் என்பதை அறிந்த விக்கிரமாதித்தன் என்ன செய்வது என்று தவித்தான்.
உடனே பட்டி, "அண்ணா ! நான் வேதாளத்தின் மீதேறி தங்கள் முன்பாக பறந்து செல்கிறேன். அப்போது வேதாளமானது பெண்டிசைப்பது போலவே ரீங்காரமிட்டுச் செல்லும் அந்த ஒலி செல்லும் திசை நோக்கியபடி தடுமாறாது தாங்களும் பின் தொடர்ந்து வந்தால் எளிதாக இம்மண்டபத்தைக் கடந்திடலாம்!" என்றான்.
உடனே வண்டுபோல் ரீங்காரமிட்டபடி வேதாளத்தின் மீதேறி பட்டி முன் செல்ல அந்த சப்தத்தை யூகித்தபடியே விக்கிர மாதித்தனும் கவனமாக சென்று அம்மண்டபத்தைக் கடந்தனர்.
ஆயிரங்கால் மண்டபத்தைக் கடந்ததும் அங்கே சிங்கார மண்டபம் ஒன்று தென்பட்டது. அது பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் ஆயிரங்கணக்கில் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரகாசித்தது.
அந்த மண்டபத்தின் மையத்தில் பலவகையில் அலங்காரம் செய்யப்பட்ட மஞ்சம் ஒன்று தென்பட்டது. அதுதான் பாட்டிக் கூறிய மஞ்சமென்று யூகித்து அறிந்த விக்கிரமாதித்தன் அதன் கால்மாடு, தலைமாடு எது என்று தெரியாமல் திகைப்படைந்தான்.
உடனே பட்டி தனது இடையில் பதுக்கி வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை விக்கிரமாதித்தனின் கையில் கொடுத்து மஞ்சத்தின் மையப்பகுதியில் வைக்கச் சொல்ல விக்கிரமாதித்தனும் அவ்வாறே செய்தான். மஞ்சத்தில் வைக்கப்பட்ட பழம் ஒரு பக்கமாக உருண்டோடியது.
இதைக் கவனித்த பட்டி, பழம் உருண்டோடிய பக்கமாக கால்களை நீட்டி அதன் எதிர்புறமாக தலையை வைத்துப் படுக்குமாறு கூறினான்.
விக்கிரமாதித்தனும் அவ்வாறே படுக்க சில பதுமைகள் எங்கிருந்தோ வந்தன. அவற்றுள் இரு பதுமைகள் மஞ்சத்தின் இருபுறத்திலும் நின்றபடி படுத்திருந்த விக்கிரமாதித்தனுக்கு வெண்சாமரங்கள் வீசின. வேறு இரு பதுமைகள் வாசனாதி திரவியங்களை விக்கிரமாதித்தனின் உடம்பில் பூசிவிட, சில பதுமைகள் விக்கிரமாதித்தனின் கை மற்றும், கால்களைப் பிடித்துவிடத் துவங்கின.
வேறு சில பதுமைகள் விக்கிரமாதித்தன் உண்ண வேண்டி வகையான தின்பண்டங்களைக் கொடுத்தன,
விக்கிரமாதித்தன் படுத்திருந்த மஞ்சத்தை சுற்றிலுமாக கணக்கற்ற மாப் பெண்கள் படுத்துறங்கிக் கொண்டிருக்கவே, விக்கிர மாதித்தனுக்கு பதுமைகள் செய்த உபச்சார ஆரவார சப்தத்தைக் கேட்டதும் கண்விழித்துக் கொண்டனர்.
அங்கே அலங்கரிக்கப்பட்டிருந்த மஞ்சம் ஒன்றில் யாரோ ஓர் ஆடவன் படுத்திருப்பதையும், அவனுக்கு பல்வேறு உபச்சாரங்களைப் பதுமைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டும், மஞ்சத்தின் அருகே மேலும் ஒரு ஆடவன் நின்று கொண்டிருப் பதைக் கண்டும் திகைப்படைந்தனர்.
உடனே வேகமாக தங்கள் தலைவி பேசாமடந்தையிடம் சென்றனர். அங்கு நடந்ததை அப்படியே தெரிவித்தனர்.
இதனைக் கேட்டதும் பேசாமடந்தை திகைப்படைந்தாள்.
"மஞ்சத்தில் படுத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவனை கோட்டையைவிட்டு வெளியேற்றுவேன்'' என்ற பேசாமடந்தை, அரண்மனை விளக்குகளை ஏற்றுகின்ற தீபநாயகி என்பவளை அழைத்து. அவளுக்கு இளவரசிப் போன்று உடைகளை அணியச் செய்து அலங்காரம் செய்து தோழியர் சூழ அலங்கார மண்டபத்தை நோக்கி அனுப்பி வைத்தாள்.
வந்திருப்பவன் தீபநாயகியை பேசாமடந்தை என எண்ணி ஏமாற்றம் அடைந்தால், அவனையும் அவனுடன் வந்திருப்பவ னையும் விரட்டி அடிக்க உரிமை உண்டு என்ற நிபந்தனை இருந்ததால் அவனையும் அவனது தோழனையும் வளியேற்றுவது கடினமாக இருக்காது என்று யூகம் செய்தாள்.
விக்கிரமாதித்தனும், பட்டியும் தாங்கள் இருக்கும் மஞ்சத்தை நோக்கி வெகு ஆர்பாட்டத்துடன் வந்து கொண்டிருந்த தீப நாயகியைக் கண்டதும் குழப்பமடைந்தனர்.
இவள் பேசாமடந்தைதானா இல்லையா? என்று குழப்பு மடைந்தனர். அவசரப்பட்டு தவறான முடிவினை எடுத்துக் கொண்டால் அவமானத்துடன் கோட்டையை விட்டு வெளியேற வேண்டியதிருக்கும் என்று நினைத்தனர்.
உடனே வேதாளமானது “நமக்கு எதிரே வரும் பெண் கையில் விளக்கு ஒன்றை எடுத்து வருகிறாள். தந்திரமாக நான் அந்த விளக்குத் திரியை உள்ளுக்கு இழுத்து விடுகிறேன். வந்து கொண்டு இருப்பவள் பேசாமடந்தையாக இருந்தால் தன்னருகே இருக்கும் சேடிப் பெண்ணை அழைத்து விளக்கினைத் தூண்டச் செய்துவிடுவாள். அவள் பேசாமடந்தையாக இல்லாத பட்சத்தில் தனது விரலால் விளக்கைத் தூண்டி விடுவதோடு, கையில் பட்ட எண்ணெயை தனது தலையில் தடவிக் கொள்வாள். இவ்வாறு அவள் செய்தால் அரண்மனையில் விளக்கேற்றும் சேடிப் பெண்ணாகத்தான் அவள் இருப்பாள் என்பது உறுதியாகிவிடும்" என்றது.
உடனேயே எவரும் அறியாதபடி தீபநாயகி கையிலிருந்த விளக்குத் திரியை உள்ளுக்குள் இழுத்தது வேதாளம்.
தீபநாயகியோ சிறிதும் தாமதிக்காமல் விளக்குத் திரியைத் தானே தூண்டிவிட்டு எண்ணெய் படிந்த விரலினைத் தலையில் துடைத்துக் கொண்டாள்.
இதனைக் கண்டதும், விக்கிரமாதித்தனுக்கு சிரிப்பு வந்து விட்டது. தன் முன்னே நின்றவளைப் பார்த்து அம்மா தீப நாயகி! உன் தலைவி பேசாமடந்தை இங்கு வந்தால் என்ன தேய்ந்தா போய்விடும்! அவளின் அழகு குறைந்தா போய்விடும்! உடனே நீ திரும்பிச் சென்று நான் உன்னை தீபநாயகி எனத் தெரிந்து கொண்டுவிட்டதாகக் கூறுவதுடன் அவளை உடனேயே இங்கே அழைத்துவா!" என்றான்.
விக்கிரமாதித்தன் தான் யார் என்பதை அறிந்து கொண்டான் என்று தெரிந்ததும் தீபநாயகி உடனடியாக தன் தோழியருடன் அந்த இடத்தை விட்டு ஓட்டமெடுத்தாள்.
பேசாமடந்தையின் தாயான அமிர்த மோகினி தன் அரண்மனையின் தலைமை சமையல்காரிக்கு நன்றாக அலங்காரம் செய்து தாதியர் புடைசூழ அனுப்பி வைத்தாள்.
மீண்டும் வேதாளமானது சமையல்காரியை இனம் கண்டு கொள்வதில் விக்கிரமாதித்தனுக்குத் துணையாக நிற்கவே, அவரும் இன்னார் என அறியப்பட்டு அவமானமடைந்து ஓடினாள்.
உடனே அவள் தன் மகளான பேசாமடந்தையை அழைத்து அன்பு மகளே! உன்னை வென்றிட பூமியில் எந்த ஆண்மகனுமே இல்லை என்று நினைத்திருந்தோம். எவனோ ஒருவன் நமது சூழ்ச்சிகளை அனைத்தையும் முறியடித்துவிட்டான். இனி நீ நேராக அவன் முன்னால் சென்று சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை ஒரு இரவுப் பொழுது முழுவதும் மௌனமாக பேசாது இருந்து வந்திருப்பவனை வெல்வதுதான் நமக்கு கடைசி வழி" என்றாள்.
பின்னர் அமிர்த மோகினி தனது தாதிப் பெண்களுடன் விக்கிரமாதித்தன் காத்திருக்கும் மண்டபத்திற்கு மறைவாக நின்று கொண்டு, "என் கட்டுக்காவல்கள் அனைத்தையும் வெகு சாமர்த்தியமாகக் கடந்து வந்து சேர்ந்திருக்கும் ராஜகுமாரனே உன்னை மகிழ்வோடு வரவேற்கிறோம். இறுதியாக இன்னும் ஓர் நபந்தனை இருக்கிறது. இந்த மண்டபத்தில் உமது மஞ்சத்திற்கு எதிராக இன்னொரு மஞ்சம் போடப்படும். அதில் பேசா மடந்தை வந்து அமர்ந்ததும் இருவருக்கும் இடையே சினா ஒன்றும் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைக்கு அப்பால் போடப்பட்ட மஞ்சத்தில் பேசாமடந்தை அமர்வாள் பொழுது முடியும் முன்னர் எனது மகளான பேசாமடந்தையை மூன்று வார்த்தைகள் பேசச் செய்ய வேண்டும். அவ்வாறு அவள் பேசிவிட்டால் அவளை நீர் நேருக்கு நேராக சந்திக்கலாம். அவ்வாறு நீர் செய்யாவிடில் பொழுது விடிந்ததும் அவமானப்படுத்தப்பட்டு விரட்டியடிக் கப்படுவீர்! இந்த நிபந்தனையை நீர் ஏற்றுக் கொள்கின்றீரா' என்று விக்கிரமாதித்தனிடம் கேட்டாள்.
அமிர்த மோகினியின் நிபந்தனையை விக்கிரமாதித்தன் ஏற்றுக் கொள்வதாக கூறினான்.
நிபந்தனைப்படி பேசாமடந்தை வந்து அமர்ந்தாள்.
நீண்ட நேரமாக பேசா மடந்தை வாய் திறவாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
நீண்ட நேரமாகப் பொறுத்துப் பார்த்த விக்கிரமாதித்தன் பேசாமடந்தையிடம் "வாய் திறந்து பேசாமல் இருப்பதுதான் உன் நிபந்தனை என்று நான் அறிந்தேன். ஆனால் உன் திருமுகத்தைக் காட்டுவதில் உனக்கு என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது? தயவு செய்து இந்த திரையை அகற்ற ஏற்பாடு செய்! உன்னைப்பேச வைக்க இயலாவிட்டாலும் உன்னுடைய அழகையாவது ரசித்தபடி இந்த இரவு முழுவதையும் கழித்திட விரும்புகிறேன்" என்றான்.
பேசாமடந்தையோ விக்கிரமாதித்தனுக்கு எந்தவிதமான பதிலையும் கூறாமல் மௌனமாக இருந்தாள். அவளைப் போ வைப்பது எவ்வாறு என்று விக்கிரமாதித்தன் யோசனை செய்தான் அவளை ஏதேனும் குறுக்கு வழியில்தான் பேச வைக்க வேண்டும் என்று முயற்சித்தான்.
தன்னருகே இருந்த வேதாளத்தை தொங்கிக் கொண்டிருக்கும் திரைச்சீலையில் பிரவேசிக்குமாறு கூறினான். வேதாளமும் விக்கிரமாதித்தன் கூறியபடியே திரையினுள் பிரவேசித்தது.
உடனே விக்கிரமாதித்தன் அந்தத் திரைச்சீலையை நோக்க “திரைச்சீலையே! உயிரும் பேசும் சக்தியும் உள்ள பேரழகி உனக்கு மறுபுறம் அமர்ந்து வாய் திறவாது பிடிவாதமாக இருக்கிறாள்.அதனால் அந்த இரவை எவ்வாறு கழிப்பது என்று எனக்குப் புரியவில்லை. உயிரற்றது என்று கருதப்படுகின்ற திரைச்சீலையே நீயாவது கதை ஒன்றை எனக்குக் கூறு! அக்கதையை கேட்டபடியே நான் இந்த இரவினை கழிக்க முயல்கின்றேன்" என்றான்,
ஆனால் எந்த ஒரு சலனமும் இல்லாது இருந்த திரை விக்கிரமாதித்தனுக்கு பதில் கூற முற்படுவது போன்று சலசலத்தது.
''மாமன்னரே! திரையாகத் தொங்கும் எம்மையும் ஒரு பொருட்டாக மதித்து கதை கூறுமாறு கூறியதிற்கு நான் தங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். நான் தங்களுக்கு எந்தக் கதையைக் கூறுவது? பட்டக் கதையைக் கூறுவதா? கெட்டக் கதையை கூறுவதா? அல்லது ஏதாவது ஒரு பழையக் கதையைக் கூறுவதா?" என்று கேட்டது.
"திரையே! நீ பட்டக் கதையினையும், கெட்டக் கதையினையும் முதலில் கூறு. அதன் பின்னர் பழைய கதை ஒன்றினையும் கூறு'' என்றான் விக்கிரமாதித்தன்.
உடனே வேதாளம் கதையைத் தொடங்கியது. "வேந்தனே! முன்பு நான் சிறு விதையாக இருந்தேன். விவசாயி ஒருவன் மண்ணை உழுதபடி அதில் என்னை விதைத்தான். அந்த நேரத்தில் மழை பெய்யவே விதையான நான் முளைவிட்டு இலைகளாக விரிந்து இறுதியில் ஒரு பருத்திச் செடியாக மாறினேன். பின்னர் பூத்துக் காய்த்து பஞ்சாகவும் மாறினேன். பஞ்சாக மாறிய என்னை சில பெண்கள் பறித்துச் சென்று பிய்த்துப் பிடுங்கி பின் நூலாக நூற்றனர். ஒரு நெசவாளி என்னை வாங்கிச் சென்று பாவாக்கி தரியில் நெய்து துணியாக மாற்றி துணி வியாபாரியிடம் விற்பனை செய்ய, பேசா மடந்தையின் ஆட்கள் அவனிடமிருந்து என்னை வாங்கி தையற்காரனிடம் கொடுத்தனர். அவன் என்னை எப்படியெல்லாமோ வெட்டி பலவிதமாக தைத்து திரைச்சீலையாக உருவாக்கினான். இப்போது இங்கு என்னைக் கொண்டுவந்து இழுத்துக் கட்டித் தொங்க விட்டுள்ளனர். மூச்சுக் கூட விட முடியாதபடி இழுத்து கட்டிவைக்கப்பட்டிருக்கும் என்னால் எவ்வாறு கதையைக் கூற இயலும்? என்னைத் தளர்த்தி அவிழ்த்து கீழே போட்டால் கதையைக் கூறுவேன்," என்றது திரைச் சீலை.
ஒரு மனிதனைப் போலவே திரைச்சீலைப் பேசுகிறதே என்று பேசாமடந்தை திகைப்படைந்தாள்,
தன் தோழியர்களிடம் குறிப்பால் திரைச்சீலையை அவிழ்த்து கீழேப் போடுமாறு சைகை செய்தாள்.
உடனே தோழியர்கள் திரைச்சீலையை அவிழ்த்து கீழேப் போடவே பேசாமடந்தையும், விக்கிரமாதித்தனும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.
பேசாமடந்தையின் அழகைக் கண்டு விக்கிரமாதித்தன் வியப்படைந்தான்.
''ஆண்டவன் உனக்கு இத்தகைய அழகினைக் கொடுத் திருக்கின்றானே! உன் அழகு முகத்தை இரவெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலே எனக்கு சொர்க்கம் கிடைத்தது மாதிரிதான். இருந்தாலும் நாம் இரவைக் கழித்திட இந்த திரைச்சீலைச் சொல்கின்ற கதையினைக் கேட்போம்" என்று கூறினான்.
அந்த நேரம் திரைச்சீலையும் கதை கூறலாயிற்று!