Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

12. பெண் சிலை

மந்தாகினி என்ற நாட்டை மந்தகேஸ்வரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு மன்மத வசீகரன் என்றொரு மகன் இருந்தான்.

கம்பீரமான தோற்றத்தோடு இருந்த மன்மத வசீகரன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு மட்டுமில்லாமல் மாவீரனாகவும் இருந்தான்.

மந்தாகினிபுரத்து அமைச்சன் பெயர் மங்களசரன், இவருக்கு கனமோகனன் என்றொரு மகன் இருந்தான்.

மதன மோகனன் எல்லாவகையிலும் மன்மத வசீகரனுக்கு இணையாகவே இருந்தான். இதனால் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே இணைபிரியாது செல்வார்கள். அவர்களுக்குள் எந்தவிதமான ஒளிவு மறைவோ, ரகசியங்களோ இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்தனர்.

இருவரும் ஒருசமயம் நாட்டைவிட்டு வெளியேறி அருகில் இருக்கும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர்.

வேட்டையாடி முடித்த களைப்பில் இருவரும் ஆலமர நிழலில் இளைப்பாறினர்.

அந்த இடத்தில் காணப்பட்ட புல்தரையில் மதனமோகனன் படுத்து தூங்கிவிட்டான். ஆனால் மன்மத வசீகரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் அந்த இடத்தைவிட்டு எழுந்து காட்டின் இயற்கை அழகினை ரசித்தப்படியே சிறிது தூரம் நடந்து சென்றான்.

வழியில் அழகான கோயில் ஒன்று தெரிந்தது. கோயிலின் வெளிப்புறச் சுவரில் அழகான சிற்பங்கள் பல செதுக்கப் பட்டிருந்தன. அந்தச் சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த சிலைகளை பார்த்துக் கொண்டே சென்ற வசீகரன் ஒரு சிலையைக் கண்டதும் மெய்மறந்தவளாய் அந்த இடத்திலேயே நின்றுவிட்டான்.

அந்தச் சிலையோ அழகான ஓர் இளம் மாது கையில் பூச்செண்டினை பிடித்துக் கொண்டிருப்பது போல் செதுக்கப் பட்டிருந்தது. உண்மையிலேயே ஒரு இளம்பெண் உயிருடன் அங்கு நிற்பது போன்ற பிரமையை அந்த சிலை ஏற்படுத்தியது.

அந்தச் சிலையின் அழகில் மனதைப் பறிக்கொடுத்த அவன் உண்மையில் பெண்ணொருத்தி அங்கே சிலை வடிவாக நிற்பது போன்று எண்ணியவனாய் "ஏய்... பெண்ணே ! உன்கரத்தில் இருக்கும் பூச்செண்டினை எனக்கு அளித்து என்னுடன் கூடி மகிழ்விக்கமாட்டாயா?' என கேட்டான்.

தொடர்ந்து இதே கேள்வியை சிலையைப் பார்த்துக் கேட்டபடி இருந்த வசீகரன் கிட்டத்தட்ட பித்து பிடித்ததைப் போன்று காணப்பட்டான்.

புல்தரையில் படுத்திருந்த மதனமோகனன் விழித்தெழுந்ததும், அங்கு வசீகரன் இல்லாதது கண்டு திடுக்கிட்டான். உடனே அவனைத் தேடிச் செல்லத் தொடங்கினான்.

கோயில் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது அவற்றில் இருக்கும் பெண்சிலையைப் பார்த்து புலம்பியபடி இருக்கும் வசீகரனைக் கண்டு திடுக்கிட்டான். மனவேதனை அடைந்தான்.

வசீகரனை நெருங்கி, "இளவரசே! பொழுது சாய்ந்து விட்டது. அரண்மனைக்குச் செல்வோம்" என்றான்.

வசீகரனோ "அந்தச் சிலையில் இருக்கும் பெண்ணை சந்தித்தால்தான் வீடு திரும்புவேன். இல்லையேல் நான் ஒருபோதும் வீடு திரும்பமாட்டேன்' என்று பிடிவாதமாக கூறினான்.

மதனமோகனன் மேலும் தர்மசங்கடமான சூழ்நிலையினை அடைந்தான். அதை ஆலயத்தின் அர்ச்சகரிடம் பெண் சிலையினைப்பற்றி விசாரித்தான்.

அவர் "இந்தப் பெண் சிலையை செதுக்கிய சிற்பி இங்கிருந்து பத்துகாதத் தொலைவில் இருக்கும் கூடல் என்ற நகரைச் சேர்ந்தவர். அவர் பெயர் கோதண்டம்!" என்றார்.

அவரிடம் கேட்டால் இந்தப் பெண் பற்றியத் தகவல் கிடைகம் என்று நம்பிய மதனமோகனன் அர்ச்சகருக்கு தேவைக்கேறம் பணம் கொடுத்து மன்மத வசீகரனைப் பார்த்துக் கொள்ளும்ப கூறினான்.

பின்னர்தான் சிலைப் பெண்ணைப் பற்றிய விபரத்தை அறிய வேண்டி புறப்பட்டான்.

மதனமோகனன் கூடல் நகரினை அடைந்தான். சிற்பியையும் சந்தித்து அந்தச் சிலைப் பெண்ணைப் பற்றிய விபரத்தினைக் கேட்டான்.

அந்தச் சிற்பியோ “ஐயா! இந்த சிலைப் பெண்ணை நான் முன்பின் கண்டதில்லை. சிலையை வடிக்கும் சில நாட்களுக்கு முன்பாக குயவன் ஒருவன் ஒரு நகத்தை கொண்டு வந்து என்னிடம் நதான். பளபளப்புடன் சாமுத்திரிகா லட்சணப்படி அந்நகத்துக் ய பெண் எவ்வாறு இருப்பாள் என்று யூகித்து மனதில் பதிய வத்தே அந்த கோயில் சுவரில் சிலைப் பெண்ணை வடித்தேன்" என்றார்.

அந்த சிற்பியிடமே குயவனின் இருப்பிடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கு சென்று குயவனைச் சந்தித்தான் மதனமோகனன்.

மதனமோகனனை நோக்கிய அந்தக் குயவனோ "ஐயா! அருகாமையில் உள்ள காட்டில் வசிக்கும் வேடன் ஒருவன் அந்த நகத்தை வைரக்கல் என்று கூறி ஒருமாலைப் பொழுதில் என்னிடம் சில மண்பாண்டங்களைத் தடுமாறு கேட்டான். அந்த நகத்தை வைரக்கல் என்று நம்பிய நான், அதனை வாங்கிக் கொண்டு மண்பாண்டங்களைக் கொடுத்தேன். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது தான் அது வைரமல்ல, வெறும் நகம் என்று எனக்குத் தெரிந்தது. அந்த நகத்தை சிற்பியிடம் கொடுத்து பணம் பெற்றேன்" என்றான்.

உடனே மதனமோகனன் வேடனை சந்தித்து விபரம் கேட்டான்.

மதனமோகனனைப் பார்த்த வேடன், “ஐயா! ஒரு நாள் நான் ஆலமரத்தடியில் படுத்து உறங்கிவிட்டு எழுந்து கண் விழித்துப் பார்த்தபோது தரையில் பளபளப்பாக ஒரு பொருள் மின்னுவதைக் கண்டேன். அது வெறும் நகம் என்று தெரிந்து அதை ஒரு குயவனிடம் கொடுத்துவிட்டு சில மண்பாண்டங்களை வாங்கி வந்துவிட்டேன்'' என்றான் வேடன்.

உடனே வேடனை கையோடு அழைத்துக் கொண்டு ஆவ மரத்தடிக்குச் சென்றான் மதனமோகனன்.

பின்னர் வேடன் விடைபெற்றுச் சென்றுவிட்டான். மதன மோகனன் மட்டும் அந்த ஆலமரத்தடியில் தனியாக அமர்ந் திருந்தான்.

இரவு நேரம் வந்துவிட்டதாலும், நீண்ட பயணம் செய் களைப்பினாலும் ஆலமரத்தடியில் படுத்தபடி அமாந்து யோசிக்கலானான். சிலைப் பெண்ணைக் கண்டு பிடிக்காம திரும்புவதில் எந்தவிதமான பயன் ஏதும் இல்லை என தோன்றினாலும் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்று புரியாமல் குழம்பினான்.

அவன் அமர்ந்திருந்த ஆலமரத்தில் ஆண், பெண் என கிளிகள் அம்மரப் பொந்தின் உள்ளே வாழ்ந்து வந்தன. அந்தப் உந்தின் உள்ளே ஓய்வாக இரண்டும் அமர்ந்திருக்கும்போது வண்கிளியை நோக்கிய பெண்கிளி, "அன்பே! இந்த மரத்தின் கீழே இளைஞன் ஒருவன் மனவேதனையுடன் இருக்கின்றானே! நம் இருப்பிடம் தேடி வந்த அவனை நமது விருந்தினராக கருதி அவனது மனக்கவலை எல்லாம் நீங்கிட நம்மால் முடிந்த உதவியை செய்திடலாம்" என்றது. ஆண்கிளியும் அதற்கு தனது சம்மதத்தை தெரிவித்தது.

இரண்டு கிளிகளும் பொந்தினைவிட்டு கீழே இறங்கி மதன மோகனனின் முன்னால் வந்து நின்றது.

"ஐயா! தாங்கள் ஏதோ ஒரு காரணத்தால் மனவேதனையுடன் இருப்பதாகத் தெரிகிறது. தங்களது வேதனைக்குக் காரணம் என்ன எனக் கூறினால் எங்களால் ஆன உதவிகளை செய்திடக் காத்திருக்கின்றோம்" என்றன.

மதனமோகனன் பறவைகளின் மொழியை அறிந்தவன் என்பதால் கிளிகள் கூறியதைப் புரிந்து கொண்டு தன் வேதனையைத் தெரிவித்தான்.

பெண்கிளி சிறிது யோசனை செய்துவிட்டு, "நீங்கள் கூறிய நகத்தை நான்தான் கொண்டுவந்தேன்" என்றது.

''கிளியே! நீ கூறும் இந்த தகவல் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. இந்த நகத்தை நீ எங்கு கண்டெடுத்தாயோ, அதனைக் கூறினால் என் மனதில் உள்ள வேதனைகள் எல்லாமே நங்கிவிடும்" என்றான் மதன மோகன்.

“ஐயா! இங்கிருந்து தொலை தூரத்தில் ஒரு நகரம் இருக்கிறது. லகாபுரம் என்றும் நகரில் வான் உயர வளர்ந்திருக்கும் மரங்கள் எளன. அம்மரத்தில் உள்ள பழங்களை நாங்கள் தேடிச் சென்று தினந்தோறும் உண்போம்.

அந்த நகரில் ஏழடுக்கு மாளிகை ஒன்று இருக்கிறது. அந்த மாளிகையின் மேல் மாடத்தில் இருந்தபடி ஒரு பெண் கை விரல்களால் தனது முடியைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தாள், அப்போது அவள் கையிலிருந்த நகம் ஒன்று பெயர்ந்து கீழே வந்து விழுந்தது. அந்த நகம் பளபளப்பாக இருந்ததால் அதனை வைரம் என்று நினைத்த நான் எனது கூரிய அலகினால் கொத்தி எடுத்து வந்தேன். அது ஒருநாள் தவறி கீழே விழுந்துவிட்டது" என்றது.

உடனே அந்த பெண்கிளிக்கு நன்றிகூறிய மதன மோகனன், மறுநாள் அதிகாலையில் மல்லிகாபுரத்தை நோக்கிப் புறப்பட்டான்.

அன்றைய நாள் முழுவதும் பயணம் செய்து மாலைப்பொழுதில் அந்நகரினை வந்தடைந்தான். அந்த பெரியதும், அழகானதுமான மல்லிகாபுரத்தில் வசிப்போரில் பெரும்பாலோர் வைர வியாபாரிகளாகவே இருந்தனர்.

அந்நகரில் இருந்த சிறு வைர வியாபாரியின் இல்லத்தில் தங்கிய மதனமோகனன் அவரிடம் அந்நகரில் இருக்கும் ஏழடுக்கு மாளிகைப் பற்றி விசாரித்தான்.

அதற்கு அந்த வைர வியாபாரி "ஐயா! இந்நகரில் வசிக்கும் வைர் வியாபாரிகள் அனைவருக்கும் அவர் தலைவர்போல் ஆவார் அவரது பெயர் நவகோடி நாராயணன் என்பதாகும். அவருடைட இல்லமே நீர் கூறிய ஏழடுக்கு மாளிகை ஆகும். நவகோடி நாராயணனுக்கு சரச சல்லாபி என்னும் மகள் ஒருத்தி இருந்தா அவள் தேவலோக நங்கையைப் போன்று பேரழகு மிக்கவன் அதோடு கல்வி, கேள்விகளில் எல்லாம் தலைசிறந்து விளங்குவா அனைத்து கலைகளையும் அவள் அறிவாள்'' என்றார்.

வைரவியாபாரி கூறியதைக் கேட்ட மதனமோகனன் அவருக்கு நன்றி கூறியபடி அன்றைய இரவுப் பொழுது அவர் வீட்டிலே தங்கிக் கொண்டான்.

காலையில் கண்விழித்த அவன் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த வைரமாலை மற்றும் பிற அணிகலன்களை விற்பனை செய்து ஒரு தொகையைத் திரட்டி எடுத்துக் கொண்டு பகட்டான உடைகளை வாங்கி அணிந்து கொண்டு தனது குதிரை மீதேறி நவகோடி நாராயணனின் ஏழடுக்கு மாளிகையை நோக்கிச் சென்றான்.

மாளிகையை சென்றடைந்த மதனமோகனன், நவகோடி நாராயணனை சந்தித்து தான் மந்தாகினிபுரத்து இளவரசன், மன்மத வசீகரன் என்றும் சிலகாலம் அந்நகரில் தங்கிச் செல்ல முடிவு செய்திருப்பதாகவும் கூறினான்.

அதனைக் கேட்டதும் நவகோடி நாராயணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தனக்கு மந்தாகினிபுரத்து மன்னருடன் வைர வியாபாரத் தொடர்பு இருந்து வருவதாகவும், ஆனால் இளவரசனையோ மந்திரி குமாரனையோ சந்தித்தது இல்லை யென்றும் கூறினார். ஆகையினால் மதனமோகனன்தான் மந்தாகினிபுரத்து இளவரசன் என்று நம்பினார்.

"இளவரசே! தாங்கள் என் மாளிகையில் எத்தனைக் காலம் வேண்டுமானாலும் தங்கலாம். இந்த மல்லிகாபுரத்தினை ஆசைதீர சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லலாம்" என்று பலவாறு உபசரித்தார்.

நவகோடி நாராயணன் தனக்களித்த உபசரிப்பைக் கண்டு மகிழ்ந்த மோகனன் அவருக்கு நன்றிகூறி "ஐயா தங்களது பெருந்தன்மை. எனக்கு மகிழ்வைத் தருகிறது. இருந்தாலும் தங்கள் மாளிகையின் அருகிலேயே எனது செலவிலேயே சிறிதாக மாளிகை ஒன்றினை எழுப்பி அதிலேயே தங்கிக் கொள்கிறேன்.எப்போது மல்லிகாபுரத்தை விட்டுச் செல்கிறேனோ அப்போது ங்களுக்கு, அந்த மாளிகையை உரிமையாகவே ஆக்கிவிட்டுச் பகிறேன். அதுவரையில் எனக்கு ஏதேனும் உதவிகள் வையிருந்தால் தங்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன்"  என்றான்.

மோகனனின் வேண்டுகோளின்படியே அவன் தனக்கென வா சிறு மாளிகை எழுப்பிட பலவிதத்திலும் நவகோடி நாராயணன் உதவிகள் செய்தார்.

மாளிகையை எழுப்பும்போது தன் மாளிகையில் இருந்து நவகோடி நாராயணனின் மாளிகையினுள் சென்றிட சுரங்கப் பாதை ஒன்றையும் ரகசியமாக அமைத்தான். அப்பாதையின் வழியாக சென்றால் நவகோடி நாராயணனின் புதல்வியான சரச சல்லாபியின் படுக்கையறையினை சென்றடையலாம். அந்த சுரங்கப்பாதைப் பற்றிய விபரம் வெளியே எவருக்கும் தெரியாதபடி அம்மாளிகையை எழுப்பிய தொழிலாளர்களுக்கு ஏராளமானப் பணத்தையும், பொருளையும் கொடுத்து சரிகட்டி வைத்திருந்தான்.

அடிக்கடி நவகோடி நாராயணனின் மாளிகைக்கு சென்று வெகுநேரம் பேசிக் கொண்டும், சமயம் வாய்க்கும்போது அவரோடு சேர்ந்து உணவு உட்கொள்ளவும் செய்த மதனமோகனன் சரச சல்லாபியிடம் சகஜமாகப் பழகிடும் சூழ்நிலையினை உருவாக்கிக் கொண்டான். அதுமட்டு மில்லாமல் சிலைப்பெண்ணே சரச சல்லாபி என்றும், அவளே இளவரசன் மன்மத வசீகரனின் மனம் கவர்ந்தவள் என்பதும் அவனுக்குப் புரிந்தது.

மதன மோகனின் கம்பீரமான தோற்றமும் அவனது பேச்சாற்றலும் சரச சல்லாபியின் மனதை மிகவும் கவர்ந்தன. அதனால் அவள் அவனை நேசிக்கத் தொடங்கினாள்.

ஒருநாள் இரவு நேரத்தில் தன்கையில் சிறு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு மதன மோகனன் தான் அமைத்த சுரங்கப் பாதையின் வழியாகச் சென்றான். நேராக சரச சல்லாபியின் படுக்கையறையில் சென்றடைந்து மெல்ல அவளது அறை கதவைத் தட்டினான்,

மதனமோகனனின் நினைவினால் வாடியபடி இருந்தவாறு உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த சரசசல்லாபி தனது அறைக் கதவை யாரோ தட்டுவது அறிந்து அதைத் திறந்தாள்.வாசலில் தனது மனங்கவர்ந்த மதனமோகனன் நிற்பதைக் கண்டவுடன் ஆனந்தமும், மகிழ்ச்சியும் அடைந்தாள்.

மதனமோகனன் அறைக்குள் நுழைந்ததுமே சரச சல்லாபி அவன் கையைப் பற்றி நெருங்கி வந்தாள்.

மதனமோகனனோ தன் கரத்தினை மெல்ல விடுவித்துக் கொண்டான்.

"சரசசல்லாபி நான் கூறுபவற்றை தயவு செய்து கேள்! நான் கூறப்போகும் தகவல்கள் உனக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இருந்தாலும் ஒரு இலட்சியத்திற்காக அவற்றை சந்தித்திட வேண்டிய நிலையில் நீ உள்ளாய்'' என்றான். அதோடு மட்டுமில்லாமல் தன்னைப் பற்றியும் தன்னுடன் வந்திருக்கின்ற இளவரசன் மன்மத வசீகரனின் நிலைப் பற்றியும் கூறி சரச சல்லாபியின் உருவச்சிலையைக் கண்டு அவள் மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளதையும் அந்தச் சிலைப் பெண்ணைத் தேடியேதான் அங்கு வந்து சேர்ந்ததையும், சிலை வடிவாக உள்ளவள் சரச சல்லாபியே என தான் கண்டறிந்ததையும் தெளிவாக விளக்கினான். அதோடு சரச சல்லாபியுடன் அவளது தந்தையின் மனம் கோணாதபடி இங்கிருந்து நாம் இருவரும் புறப்பட வேண்டும்" என்று கூறினான்.

மதனமோகனின் பேச்சில் இருந்த நியாயத்தையும் நிர்பந்தமான சூழ்நிலையினையும் உணர்ந்த சரச சல்லாபி தன் நிலையை மாற்றிக் கொண்டவளாய் மதனமோகனன் தன்னிடம் கூறிய திட்டங்களுக்குத் தான் மனப்பூர்வமாக உடன்படுவதாகவும் கூறினாள்.

சில நாட்களுக்குப் பின்னர் ஏழடுக்கு மாளிகையை அடைந்த மதனமோகனன். அங்கிருந்த நவகோடி நாராயணனை சந்தித்து வணங்கினான்.

ஐயா! எனது மனைவி ஊரிலிருந்து என்னைக் காணவே இங்கு வந்துள்ளாள். சிலநாட்கள் கழித்து நாங்கள் இரு எங்களது நாட்டிற்குத் திரும்பலாம் என எண்ணியுள்ளோம். 5. தாங்கள் எனது மாளிகைக்கு தங்கள் குடும்ப சகிதமாக வருகை தர் நான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். என் மனைவியே தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் விருந்தைப் பரிமாறப் போகிறாள். எனது மனைவியும் தங்களின் மகளைப் போன்றவள்தான், எனவே நீங்கள் மறுப்பு ஏதும் கூறாமல் விருந்துக்கு வரவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தான்.

மதனமோகனனின் வேண்டுகோளை ஏற்ற நவகோடி நாராயணன் தான் குடும்ப சகிதமாக விருந்துக்கு வருவதாகவும் ஒப்புக் கொண்டார். பின்னர் திருப்தியோடு மதனமோகனன் தன்னுடைய மாளிகைக்குத் திரும்பினான்.

சிறந்த சமையல் கலைஞர்களை வரவழைத்து சுவையான உணவினைத் தயாரித்து முடிக்குமாறு கட்டளையிட்டான். விருந்தும் தயாரானது. மதியம் உணவு உண்ணும் நேரம் வந்ததும் நவகோடி நாராயணன் குடும்ப சகிதமாக புறப்படத் தயாரானார். தங்களின் மகள் சரச சல்லாபியையும் உடன் அழைத்துச் சென்றால் கௌரவமாக இருக்கும் என்று மனைவி கூற நவகோடி நாராயணன் தன் மகளை விருந்துக்கு வருமாறு அழைத்தார்.

அவளோ "தந்தையே! எனக்குத் தாங்க முடியாத தலைவலியாக உள்ளதால் விருந்துக்கு நான் வருவது நன்றாக இருக்காது. அடுத்த முறை தாங்கள் அவரது வீட்டுக்குச் சென்றால் நான் தவறாது உங்களோடு வந்து கலந்து கொள்கிறேன்'' என்று மறுப்பு தெரிவித்தாள்.

நவகோடி நாராயணன் தன் மகளின் வேண்டுகோளுக்கிணங்க அவளை மாளிகையிலேயே விட்டுவிட்டு தன் மனைவியுடன் விருந்துண்ண மதனமோகனனின் மாளிகைக்குப் புறப்பட்டார்.

அவர்கள் அங்கிருந்து சென்றதும், சரச சல்லாபி விரைவாக, வாங்கப் பாதையினுள் இறங்கி வெகு வேகமாக சென்று மதன மோகனனின் மாளிகையை அடைந்தாள்.

அந்த நேரத்தில், நவகோடி நாராயணனும், அவரது மனைவியும் மாளிகையினுள் நுழைந்தனர். அவர்களின் வருகையை அறிந்த மதனமோகனன் சரச சல்லாபியை அழைத்துக் கொண்டு நவகோடி நாராயணனையும் அவரது மனைவியையும் வரவேற்றான்.

'வாருங்கள்! வாருங்கள் இவள்தான் என்னுடைய மனைவி நாங்கள் இருவரும் உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்!'' என்றான் மதனமோகனன்.

சரச சல்லாபியைக் கண்டதும் இருவரும் திகைப்படைந்தனர்.

"இவள் நம் மகள் அல்லவா!'' என்று குழப்பத்துடன் இருவரும் தடுமாற்றம் அடைந்தனர்.

உடனே மதனமோகனன் அவர்களிடம் சென்று. 'ஒரு ஆச்சர்யத்தைப் பாருங்கள்! எனது மனைவியும் உங்களது மகளும் ஒரே மாதிரியான உருவத்தில் இருக்கின்றார்கள்! இதுதான் இறைவனின் திருவடியில் உண்டாகும் பிரமிப்பு" என்று கூறினான்.

ஆனால் அவர்களோ அவனது பேச்சை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவியாய் தவித்தனர்.

நேரம் கடந்து கொண்டிருப்பதை மதனமோகனன் உணர்ந்தான்.

அவர்களை அழைத்துக் கொண்டு விருந்துண்ணும் இடத்திற்கு வந்தான்.

நவகோடி நாராயணன் தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள தந்திரமாக ஒரு செயலைச் செய்ய எண்ணினார்.

உணவைப் பரிமாற, சரச சல்லாபி தன்னருகே வந்ததும் தற்செயலாக நடந்தது போல் அவளது உடை மீது நெய் கிண்ணத்தில்

இருந்த நெய்யைக் கொட்டிவிட்டார். நவகோடி நாராயணனின் இந்தச் செயலை மதனமோகனன் கவனிக்கத் தவறவில்லை விருந்து இனிதாக முடிவடைந்தது. நவகோடி நாராயணன் அவர் மனைவியும் விடை பெற்றுக் கொண்டு மாளிகைக்க திரும்பினர்.

உடனே மதனமோகனன் சரச சல்லாபியை அழைத்து நெய்களை படிந்த உடையை களைத்து அதே மாதிரியான வேறு உடையைத் தந்து அணிந்து கொள்ளச் செய்து விரைவாக சுரங்கப் பாதையின் வழியாக அவளது மாளிகைக்கு செல்லும்படியாக கூறினான்.

சரச சல்லாபியும் வேறு உடை அணிந்து கொண்டு தன் பெற்றோர்கள் மாளிகையில் நுழையும் முன்பாகவே தனது மாளிகையினுள் நுழைந்து தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

வேகமாக தங்கள் மாளிகையை அடைந்த நவகோடி நாராயணனும் அவரது மனைவியும் நேராகச் சென்று சரச சல்லாபி இருக்கும் அறையை நோக்க அங்கு சரச சல்லாபி படுக்கையில் உறங்குவதைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டனர்.

நவகோடி நாராயணனின் மனைவி உறங்கும் தம் மகளை எழுப்பி தான் துணி துவைக்கச் செல்வதாகவும் அவள் உடுத்தியுள்ள உடையை அவிழ்த்துத் தந்தால் அதனையும் துவைத்துத் தருவதாகவும் கூறினாள்.

தாயின் சந்தேகக் கண்ணோட்டத்தைப் புரிந்து கொண்ட சரச சல்லாபி ஏதும் கூறாது தான் அணிந்திருந்த உடையை அவிழ்த்துக் கொடுத்து மாற்றுடை அணிந்து கொண்டாள்,

சரச சல்லாபி கொடுத்த உடையை எடுத்துச் சென்ற நவகோடி நாராயணனும், அவரது மனைவியும் அந்த உடையை சோதனைச் செய்ய எந்த இடத்திலும் நெய் படிந்த கறை தென்படவில்லை. எனவே தாங்கள் இருவரும் அனாவசியமாக தம் மகளை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று வருந்தி ஒருவாறு திருப்தி அடைந்தனர்.

சிலநாட்கள் சென்றன. ஒருநாள் மதனமோகனன் நவகோடி நாராயணனைச் சந்தித்து மறுநாள் தானும் தன் மனைவியும் தங்களது நாட்டிற்கு திரும்பிச் செல்ல இருப்பதையும், அதனால் தங்களை அவர்கள் இருவரும் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்திட வேண்டும் என்றும் கூறினான்.

தங்களது சந்தேகமானது விருந்து நடந்த தினத்தன்றே தீர்ந்தது என அவர்கள் எண்ணியதால் மதனமோகனனின் வேண்டு கோளுக்கு இணங்கி சம்மதம் தெரிவித்தனர்,

மறுநாள் காலை நவகோடி நாராயணன் தன் மனைவியுடன் மதன மோகனனின் மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.

அவர்கள் இருவரும் வரும் முன்பாகவே சரச சல்லாபி சரங்கம் வழியாக மதன மோகனனின் மாளிகைக்கு வந்து சேர்ந்திருந்தாள். மதன மோகனனும், சரசசல்லாபியுடன் வெளியே வந்து நவகோடி நாராயணன், அவர் மனைவி இருவரிடமும் விடைபெற்று வண்டியில் ஏறி அமர்ந்தனர்.

பெற்றோரைப் பிரிந்து செல்வதை எண்ணிய சரச சல்லாபி துக்கம் தாளாது விம்மி.... விம்மி அழுதாள். அவள் அழுவதைப் பார்த்த நவகோடி நாராயணனும் அவரது மனைவியும் அவள் தம் மகளே என அறியாதவர்களாக அவளுக்கு ஆறுதலைக் கூறி விடை கொடுத்தனர்.

குதிரைகளை அடக்கிய சாரட் வண்டியானது அவர்கள் கண்களை விட்டு மறைகின்ற வரையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்த சரச சல்லாபியின் பெற்றோர்கள், அதன்பின்னர் மாளிகைக்குத் திரும்பினர்.

மாளிகையின் உள்ளே சென்றதும் அங்கே தங்கள் மகளை அழைத்தனர். ஆனால் அவள் வராததால் மாளிகையெங்கும் தேடலாயினர். எங்கும் தென்படாது போகவே சரச சல்லாபியின் அறையை சோதனையிட்ட போது அங்கு ஒரு சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டனர். அது நேராக மதனமோகனனின் மாளிகையைச் சென்றடையவே அவர்களுக்கு எல்லாமும் புரிந்தது.

மதனமோகனனும், சரச சல்லாபியும் ஒருவரையொருவர் காதலித்ததையும் அவர்கள் காதலுக்கு தாங்கள் இருவரும் இடையூறாக இருக்கக்கூடும் என்ற காரணத்தை முன்னிட்டே இருமாளிகைக்கும் இடையே சுரங்கப்பாதை அமைத்து தனிமையில் இருவரும் சந்தித்து வந்துள்ளதையும் பின் அவர்களாக வாய்ப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டு எந்த விதத்திலும் சந்தேகம் எழாதபடி தப்பிச் சென்றுள்ளனர் என்று நினைத்தனர்.

நவகோடி நாராயணன் தன் மனைவியைப் பார்த்து, "நம் மகளும் இளவரசரும் விரும்புகிறார்கள் என்பதை முன்பே நமக்குத் தெரிவித்து இருந்தால் நாமே ஊரைக் கூட்டி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாமே!" என்று கூறி வருந்தினார்.

இவ்வாறாக மல்லிகாபுரத்தை விட்டு வெளியேறிய மதன மோகனனும் சரச சல்லாபியும் இளவரசனான மன்மத வசீகரன் இருக்கும் கோயிலை சென்றடைந்தனர்.

மதனமோகனன் மலர் கொத்து ஒன்றினை சரச சல்லாபியிடம் கொடுத்தான். அந்த மலர் கொத்தை இளவரசனிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான்.

பின்னர் அவளிடம், "இளவரசன் என்னைப் பற்றி ஏதாவது விசாரித்தால், உன்னை அழைத்து வரும்வழியில் புலியால் தாக்கப்பட்டு, நான் இறந்து விட்டதாகக் கூறு, அப்போது என்னைப் பற்றி இளவரசர் என்ன எண்ணுகிறார் என்பதை தெரிந்துகொள்ள எனக்கு வாய்ப்பிருக்கும்'' என்றான்,

மதனமோகனன் தன்னிடம் கொடுத்த மலர் கொத்துடன் இளவரசன் மன்மத வசீகரனிடம் சரச சல்லாபி சென்றாள். அங்கே வசீகரன் சிலை முன்பாக நின்று கொண்டு அதை நோக்கியவாறு, "பெண்ணே ! நீ எனக்கு பூச்செண்டை தா'' என பல முறைகள் புலம்பியபடி இருந்தான்.

அவனிடம் சரச சல்லாபி தன் வசமிருந்த மலர் கொத்தினைக் கொடுத்தாள். "அன்பானவரே! இதோ நான் தங்களிடம் வந்துவிட்டேன். மலர் கொத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றாள்.

சிலைப் பெண்ணைப் போலவே இருந்த சரச சல்லாபியைக் கண்டு மகிழ்ந்தவனாய், “அன்பே! உண்மையில் நீ வந்துவிட்டாயே! நான் காண்பது கனவொன்றும் இல்லையே!" என்று கூறி அவளை அணைத்து முத்தங்கள் பல கொடுத்தான். பின்னர் அவளைப் பார்த்து ''எனது ஆருயிர் நண்பனான மதனமோகனன் எங்கே? அவனைக் காணோமே" என்று கேட்டான்.

சரச சல்லாபிதுக்கம் தாங்காதவள் போல், “தங்களுடைய நண்பர் என்னை அழைத்து வரும் வழியில் புலியால் தாக்கப்பட்டு மரணமடைந்துவிட்டார்" எனக் கூறினாள்.

"ஐயோ! என் ஆருயிர் நண்பன் எனக்காக உயிர் விட்டானா? உன்னை அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து அழைத்து வந்த அவன் இல்லாது நான் எவ்வாறு உன்னோடு இன்பமாக வாழ முடியும்? அவனில்லாத வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்" எனக் கூறிய மன்மத வசீகரன் சடாரென்று தன் உடைவாளை உருவிக் கொண்டு தன் மார்பில் பாய்ச்சி உயிர் இழந்தான்.

''ஐயோ... நான் கூறிய பொய்யே என்னை மனதார விரும்பியவரின் இறப்புக்கு காரணமாக அமைந்து விட்டதே! இனி அவரில்லாத வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன்? நானும் உயிர் வாழ்ந்திடேன்'' எனக் கூறி இளவரசன் மார்பில் பதித்திருந்த வாளினை உருவி தனது மார்பில் பாய்ச்சிக் கொண்டு அவ உயிரிழந்தாள்.

சற்று நேரத்திற்குப் பின்னர் இளவரசனும், சரச சல்லாபியும் எவ்வாறு இருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டி மதனமோகனன் அந்த இடத்திற்கு வந்தான். அங்கே இளவரசனும். சரச சல்லாபியும் மாண்டுக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகித்துத் தெரிந்து கொண்டான்.

'ஐயோ! என்ன கொடுமை இது! இவர்கள் இருவரின் மரணத்திற்கு நான் காரணமாகி விட்டேன். இவர்கள் இருவரும் இறந்தபின் நான் மட்டும் உயிர் வாழ்வதில் என்ன பயன்?' என மனவேதனைப்பட்டுக் கீழேக் கிடந்த வாளினை எடுத்து தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு உயிர் விட்டான்.

சிறிது நேரம் சென்றதும் அங்கே ஆலயத்து அர்ச்சகர் வந்தார்.

இளவரசர் உட்பட மூவரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார். 'தான் வரும் வரையில் இளவரசரை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கும் போது தான் அவரைச் சரியாகக் கவனிக்காததால் அல்லவா அவர் இறக்க நேரிட்டுள்ளது. அவர் இறப்பே மற்ற இருவரின் உயிர் இழப்புக்கு காரணமாக அமைந்தது. எனவே இந்த மூவரின் மரணத்துக்கும் தானே காரணம்' என எண்ணியவராய் தானும் தன் கழுத்தை வாளால் அறுத்துக் கொண்டு உயிர்விட்டார்.''

இவ்வாறாக கதையைக் கூறி முடித்த திரைச்சீலை விக்கிரமாதித்தனை நோக்கி, "வேந்தே இந்தக் கதையில் இளவரசன், மந்திரிகுமாரன், சரசசல்லாபி, ஆலய அர்ச்சகர் ஆகிய நால்வரில் யாருடைய உயிர்த் தியாகம் சிறந்தது?" எனக் கேட்டது.

விக்கிரமாதித்தன் எவ்வகையிலாவது பேசாமடந்தையை வாய் பேச வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், "திரைச் சீலையோ நால்வரில் மந்திரி குமாரனின் உயிர்த் தியாகமே சிறந்தது'' என்று கூறினான்.

விக்கிரமாதித்தன் பதிலைக் கேட்ட, பேசாமடந்தை தன்னை மறந்தவளாய் சட்டென எழுந்து நின்றாள்.

"நீர் கூறுவது எவ்வகையில் நியாயமாக இருக்க முடியும்! இளவரசன், மந்திரி குமாரன், சரச சல்லாபி ஆகிய எல்லோருமே தங்களது உயிர் இழப்புக்கு ஒவ்வொருவர் காரணமாக அமைகின்றனர். அதனால் அவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆலய அர்ச்சகரோ இந்த மூன்று பேரின் தற்கொலைகளுக்கும், தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாது இருக்கும்போது, வெறும் கடமை யுணர்ச்சியை முன்னிட்டு உயிர் துறந்ததுதான் அனைவராலும் போற்றிப் புகழக்கூடிய உயிர்த்தியாகமாக இருக்க முடியும்' என்று கூறினாள்.

பேசாமடந்தையை ஒருமுறை பேசவைத்துவிட்ட மகிழ்ச்சியால் விக்கிரமாதித்தன், ''என்னடா இது! ஒரு பெண்ணுக்குத் தெரிந்திருக்கும் நியாய அநியாயம் கூட எனக்குத் தெரியாது போய்விட்டதே! எப்படி இருந்தாலும் பெண்ணே நீ என்னைவிட புத்திசாலிதான்" என்றான்.

விக்கிரமாதித்தன் இவ்வாறாகத் தன்னைப் பார்த்துக் கூறியதும், பேசாமடந்தை தான் ஒருமுறை பேசிவிட்டது நினைவுக்கு வந்தவளாய், 'அடடே! ஏமாந்துப் போனோமே!' இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என எண்ணியவளாய் மௌனமாக இருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் விக்கிரமாதித்தன் பொறுமை இழந்தவனாய் வேதாளத்தை தம்மிடம் வருமாறு இரகசியமாக அழைத்து, பேசா மடந்தையின் இரவிக்கையுள் ஊடுருவி இருக்குமாறு கூறினான்.

அவ்வாறே வேதாளமும் பேசாமடந்தையின், இரவிக்கையுள் இரவிக்கையாய் ஊடுருவியது.

உடனே விக்கிரமாதித்தன், ''ஐயோ.. என்ன இது! பொழுதே போக மாட்டேன் என்கிறதே! இவ்வளவு நேரமாக திரைச்சீலைக் கதையைக் கூறியதால் ஓரளவுக்கு மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க முடிந்தது. பேசாமடந்தை அணிந்து இருக்கும் இரவிக்கையே! நீயாவது வாய்திறந்து ஒரு கதையைக் கூறினால் பொழுது போகிவிடுமே! ' என்று வேண்டினான்

உடனே இரவிக்கையுள் ஊடுருவி இருந்த வேதாளம், "மன்னவா! எனது நிலை திரைச்சீலையைவிட பரிதாபமானது. மூர்ச்சைக்கூட விடமுடியாதபடி பேசாமடந்தை தன் உடம்பில் என்னை இறுக்கமாக அணிந்து இருக்கின்றாள். அவளது உடம்பில் இருந்து வழியும் வியர்வையால் நனைந்து பேசக்கூட சக்தியற்று புழுங்கிக் கிடக்கும் நான் எவ்வாறு உமக்குக் கதையினை கூற இயலும்?'' எனக் கேட்டது.

தான் அணிந்திருக்கின்ற இரவிக்கையே வாய்திறந்து பேசிடுவதைக் கண்ட பேசாமடந்தை திகைப்படைந்தாள். உடனேதான் அணிந்திருக்கின்ற இரவிக்கையைக் கழற்றி சட்டென விக்கிரமாதித்தன் முன்பாகக் போட்டுவிட்டு புடவை முந்தானையால் தன் உடம்பைப் போர்த்திக் கொண்டாள்.

பேசா மடந்தையின் செயலைக் கண்டு விக்கிரமாதித்தன், "இரவிக்கையே! பேசாமடந்தையின் அழகான உடம்பைத் தழுவிக் கொண்டிருந்த பாக்கியத்தை பெற்ற உன்னை உனது எஜமானி விடுதலை செய்துவிட்டதால் இனி நீ தாராளமாக எனக்குக் கதை கூற எந்த விதமான இடையூறும் இருக்காது" என்றான்.

அதனைக் கேட்ட இரவிக்கையும் தன் கதையைத் தொடர்ந்தது!

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.