அடுத்தநாள் வழக்கம் போல் போஜராஜன் நீராடி, புத்தாடை உடுத்தி குலதெய்வத்தை வணங்கி பூஜை முடித்தவனாய், நவரத்தின் | சிம்மாசனம் இருக்கும் கொலுமண்டபத்தை அடைந்தான்
சிம்மாசனத்தின் சில படிகளைக் கடந்த போஜராஜன் அடுத்துள்ள படியில் தனது காலை வைத்த போது அப்படிக்கு காவலாக இருந்த பூர்ண சந்திரவல்லிப் பதுமையானது கலகலவென்று சிரித்தது.
பின்னர் போஜராஜனை நோக்கி, "போஜராஜரே எங்கே செல்கிறீர்! சற்று நில்லும்! எனது மாமன்னர் விக்கிரமாதித்தரின் வீரதீர சாகஸகங்களுக்கு ஓரளவேனும் நீர் சமமானவராய் இருந்தால் இந்த நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து உமது ஆட்சியை நடத்த இயலும்" என்று கூறியது.
உடனே போஜராஜன், "பதுமையே! உனது விக்கிரமாதித்த மன்னரின் சாகஸம் என்று எதனைக் கூறுகின்றாய்?'' என்று கேட்டான் போஜராஜன்.
''அரசனே! நாடாறு மாதம் முடிந்ததும் எமது மாமன்னர் வழக்கம்போல் தன் அமைச்சரையும் அழைத்துக் கொண்டு காடாறு மாதம் செல்ல முடிவெடுத்துப் புறப்பட்டார்.
இருவரும் தங்களது நாடான உஜ்ஜியினிப் பட்டணத்திலிருந்து வெகு தூரம் விலகி வந்து அங்கிருந்த இரத்தினபுரி என்னும் நாட்டிற்குச் சென்றடைந்தனர்.
அந்த நாட்டில் பெரும்பாலும் நவரத்தின வியாபாரிகளாகவே குடிமக்கள் இருந்தமையால் அந்நாடு இயற்கை எழிலுடன் மாட மாளிகைகளையும், கூடக் கோபுரங்களையும் கொண்டு சிறப்புடன் விளங்கியது.
சாதாரண குடிமக்களைப் போன்று வேடமணிந்து சென்ற விக்கிரமாதித்தனும், பட்டியும் ஒரு காலை நேரத்தில் அந்நகரைச் சற்றிப் பார்த்துக் கொண்டு வந்தபோது பெரிய கிணறு ஒன்றின் அருகே பெருங்கூட்டமாய் மக்கள் திரண்டிருப்பதைக் கண்டனர். அவர்களும் அவ்விடத்தே சென்று பார்த்தபோது கூட்டத்தின் மையத்தில் அழகான பெண்ணொருத்தியின் பிரேதம் கிணற்றில் இருந்து எடுத்து போடப் பட்டிருப்பதைப் போலிருந்தது. அந்த பிரேதத்தின் உடலும், உடையும் முற்றிலுமாக நனைந்திருந்தன.
கூட்டத்தில் தன்னருகில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் பட்டி என்னவென்று விசாரித்தான்.
அவனோ, "ஐயா! இங்குப் பிணமாக கிடக்கும். பெண் தனக்குத் திருமணம் ஆகும் முன்பாக யாரோ ஒருவனைக் காதலித்து ரகசியமாகத் தொடர்பும் கொண்டிருந்தாள். அதனால் அச்செய்தியை அறிந்து அவளது பெற்றோர் தமது மகளான இந்தப் பெண்ணை கண்டித்துள்ளனர்.
மற்றவர்கள் இந்தப் பெண்ணை கேவலமாக பேசியுள்ளனர். எனவே இவள் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். அவளது பிணத்தையே கிணற்றில் இருந்து வெளியே எடுத்துப் போட்டிருக்கிறார்கள்” என்றான்.
இறந்து போன அந்தப் பெண்ணின் பரிதாபமான முடிவை எண்ணி வருந்தியவாறு பட்டியும், விக்கிரமாதித்தனும் தொடர்ந்து நகரினுள் சென்றனர்.
அவர்களுக்கு முன்பாக இடுப்பில் தண்ணீர்க் குடங்களை சுமந்தபடி சென்று கொண்டிருந்த இளம் பெண்கள் இருவர். தாழ்ந்த குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றது. விக்கிரமாதித்தனையும், பட்டியையும் கவர்ந்தது.
அப்பெண்களில் ஒருத்தியோ, "ஐயோ! பாவம்! இவ்வளவு சிறு வயதிலேயே இப்பெண்ணுக்கு இந்த நிலமை ஏற்பட்டு விட்டதே!" என்றாள்.
உடனே மற்றொரு பெண்ணோ , ''சரிதான்! இவளுக்காக பரிதாபப்படுவதற்கு என்ன இருக்கிறது! இவள் மட்டும் சாமர்த்தியமாக இருந்திருந்தால் இவளது காதல் ரகசியம் வெளிவந்திருக்கவும் செய்யாது. அதனால் இந்தப் பெண்ணுக்காக அனுதாபப்படவேண்டியதில்லை" என்றாள்.
இரண்டாவது பெண்ணின் பேச்சைக் கேட்டதும் விக்கிர மாதித்தனும், பட்டியும் வியப்படைந்தனர். அவர்கள் அந்தப் பெண்ணை கவனித்தனர்.
அவள் பார்த்தவரை மீண்டும் பார்க்க வைத்திடும் அளவுக்கு பேரழகுப் படைத்தவளாக இருந்தாள்.
அவளது ஒவ்வொரு அங்கத்தின் அசைவிலும் அவள் அழகின் அம்சம் தெரிந்தது. அவள் திருமணம் ஆகாதவள் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டனர்.
விக்கிரமாதித்தன் பட்டியிடம், 'பட்டி! இந்தப் பெண் கள்ளக்காதல் விவகாரத்தில் எந்தவகையில் சாமர்த்தியம் வாய்ந்தவள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றான்.
உடனே பட்டி சிரித்துக்கொண்டான், ''அண்ணா ! உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குண இயல்பும், செயல்பாடும் இருக்கும் இந்தப் பெண் நல்லவளாக இருந்தால் என்ன? இல்லை கெட்டவளாக இருந்தால் என்ன? நாம் ஏன் அவள் விவகாரத்தில் தலையிட வேண்டும்" என்றான்.
அதற்கு விக்கிரமாதித்தன், "பட்டி! இந்தப் பெண்ணின் பேச்சானது எவருக்குமே இயலாத சாதாரண மன இயல்புகளை கொண்டதாகக் காட்டுகிறது. இவள் தனது கள்ளக் காதல் விவகாரத்தில் எவளவு சாமர்த்தியமாக செயல்படுகிறான என்பதை நாம் தெரிந்து கொள்வது நமக்கு ஓர் "வையான அனுட வத்தினைத் தரும் என்றே நினைக்கிறேன்,'' என்றான்.
பின்னர் இருவருமே அவள் அறியா வண்ணம் அவளைப் பின் தொடர்ந்து சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும் அப்பெண்ணோடு பேசியப் பெண் தனியாகப் பிரிந்து சென்றாள்.
அவள் மட்டும் இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்தபடி தனியே சென்றாள். அவ்வாறு சென்றவள் பெரிய அரண்மனை போன்றிருந்த மாளிகையினுள் நுழைந்தாள். அவள் நுழைந்த மாளிகையைப் பற்றி, விக்கிரமாதித்தனும், பட்டியும் அருகில் உள்ளோரிடம் விசாரித்தனர்.
அவர்களோ. ''இந்த மாளிகையின் சொந்தக்காரர் செல்வ பூஷணம், அவர் இந்நகரில் உள்ள நவரத்தின வியாபாரிகளில் மிகவும் பிரபலமானவர். அவருடைய ஒரே புதல்வியின் பெயர் ஈ'ரச மோகினி. ஆனால் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ." என்றனர்.
இவ்வாறாக பர்கள் கூறியதைக் கேட்ட விக்கிரமாதித்தனும், 'டடியும் யாரும அறியாமல் தனியான இடத்திற்குச் சென்று தங்களை வைர வியாபாரிகள் போன்று வேடமிட்டுக் கொண்டனர் அவர்களில் பட்டி தந்தை என்றும் விக்கிரமாதித்தன் மகள் என்றும் உறவு முறையை வைத்துக் கொண்டனர்.
பின்னர் வேதாளத்தை வரவழைத்து உலகில் எவரிடமும் இல்லாத, கிடைக்கப் பெறாத நவரத்தினக் கற்களை, அதன் உதவியால் பெற்றுக் கொண்டு செல்வ பூஷணத்தின் மாளிகையை நோக்கிச் சென்றனர்.
வியாபாரிகள் போன்று தோற்றமளித்த விக்கிரமாதித்தனையும், பட்டியையும் செல்வபூஷணம் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மாளிகையினுள் அழைத்துச் சென்றார்.
"ஐயா! உங்கள் இருவரையும் பார்க்கின்ற வேளையில் உள்ளூர் வியாபாரிகள் போன்று தோன்றவில்லை. நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்? என்ன எதிர்பார்த்து என்னை நாடி வந்துள்ளீர்கள் என்று கூறமுடியுமா?" என்று கேட்டார்.
பட்டி அவரைப் பார்த்து, ''ஐயா! நாங்கள் உஜ்ஜியினி மாகாளிப் பட்டணத்தைச் சேர்ந்தவர்கள். என் பெயர் தனபாலன். இவர் பெயர் தனபாலன். நாங்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வைர வியாபாரம் செய்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் இந்நகருக்கு வந்தோம். இந்நாட்டின் பெரும்பான்மை யோர் நவரத்தின வியாபாரிகளாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்நாட்டின் சூழ்நிலையினைப் பார்க்கின்ற போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் மகன் குணபாலனுக்கு, நல்ல இடமாகப் பார்த்து பெண்ணெடுத்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த நகரில் தங்களுக்குத் தெரிந்த இடத்தில் நல்ல பெண்ணாக இருந்தால் கூறுங்களேன். தங்களின் உதவியால் இந்நகரிலேயே என்மகளின் திருமணத்தை முடித்துக் கொண்டு பெண்ணையும் எங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறோம்! இந்த நகரில் நவரத்தின வியாபாரிகளுக்கு எல்லாம் தலைவர் போல் தாங்கள் இருப்பதால் இந்நகரின் நிலவரம் எல்லாம் நன்றாகக் தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என் மகனுக்கு ஏற்றப் பெண் யார் வீட்டில் உள்ளாள் என்பதைத் தாங்கள்தான் எங்களுக்குக் கூறவேண்டும்'' என்றான்,
பின்னர் தாங்கள் கொண்டு வந்த நவரத்தினக் கற்களை செல்வ பூஷணத்திற்கு அன்பளிப்பாகவும் கொடுத்தான்.
பட்டிக் கொடுத்த நவரத்தினக் கற்களை செல்வபூஷணம் ஆராய்ந்தபோது அவை உலகில் எவருக்குமே கிடைத்தற்கரிய நவரத்தின கற்கள் என்பதை அறிந்து கொண்டார். இதன் காரணமாகவே பட்டியின்மீது செல்வ பூஷணத்திற்கு ஓர் மதிப்பும் மரியாதையும் உண்டானது.
தனக்கு நிகரான செல்வந்தர்களாக அவர்கள் இருக்கலாம் என நினைத்தவர், ''ஐயா! உங்கள் மகனுக்கு பெண் தேடுவதில் எனக்கொரு யோசனைத் தோன்றுகிறது. எனக்கு நவரசமோகினி என்ற பெண் இருக்கின்றாள். அவளுக்கு நான் திருமணம் செய்து முடிக்க எண்ணியபடியால் தாங்கள் விரும்பினால் தங்கள் மகன் குணபாலனுக்கே என் மகளைத் திருமணம் செய்து கொடுக்கத் தயாராக உள்ளேன்" என்று பணிவுடன் கூறினார்.
அதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தவனைப் போன்று பட்டி பாவனைச் செய்தான்.
"ஐயா! நீங்கள் கூறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. தங்கள் மகளை என் மகன் மணப்பேனானால் அவன் உன் மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். தங்கள் மகளை நான் பார்க்க வேண்டும் என்ற தேவையே இல்லை. தங்கள் மகள் சிறந்த அழகியாசவும், நல்ல குணவதியாகவும் இருப்பாள் என்பதில் எங்களுக்கு ஊசிமுனை அளவுக்கூட சந்தேகமும் இல்லை அதனால் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக திருமணத்தை நடத்திடலாம்" எனக் கூறினான்.
இதனைக் கேட்ட செல்வ பூஷணன் சற்றும் தாமதிக்காமல் அக்கணத்தில் இருந்தே திருமணத்திற்கான எற்பாடுகளைச் செய்யத் துவங்கினார் நல்லதொரு முகூர்த்த நாளில் தன் மகள் நவரசமோகினியை விக்கிரமாதித்தனுக்கு வெகு விமரிசையாகத் திருமணம் செய்து கொடுத்தார்.
சிலநாட்கள் பட்டியும், விக்கிரமாதித்தனும் செல்வ பூஷணத்தின் மாளிகையில் தங்கி விருந்துண்டு களித்தனர்.
ஆனால் விக்கிரமாதித்தன் நவரச மோகினியை திருமணம் செய்து கொண்டானேத் தவிர வேண்டுமென்றே அவளோடு இன்பம் கொள்ள ஒருநாளும் முயற்சிக்க வில்லை,
இரவு நேரத்தில் நவரச மோகினியே கலவியில் நாட்டம் கொண்டு அவனை நெருங்கி சரசமாட முயற்சித்த போதிலும், அவன் சிரித்துப் பேசி அனுப்பிடுவான். இப்படியே நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.
ஒருநாள் பட்டி செல்வபூஷணத்திடம் "ஐயா! நாங்கள் எங்கள் நாட்டைவிட்டு வெளியே வந்து பலநாட்கள் ஆகிவிட்டன. மேலும் அங்குள்ள வியாபார காரியங்கள் எல்லாம் என்னவானது என்றும் தெரியவில்லை! எனவே நாங்கள் தங்கள் மகள் நவரச மோகினியை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பலாம் என எண்ணியுள்ளோம்" என்றான்.
செல்வ பூஷணம் அதனைக் கேட்டு மகிழ்ந்தவராய் தன் மகளின் தேவைக்கு அதிகமாகவே சீர்வரிசைகள் பலவற்றைக் கொடுத்து மகளை வழியனுப்பவும் செய்தார்.
ஒரு வண்டியில் விக்கிரமாதித்தன், நவரசமோகினி, பட்டி மூவரும் அந்நகரைவிட்டுச் சென்றனர்.
நல்ல இயற்கை வளமும் வசதிகள் பலவும் நிறைந்த அந்த ஊரிலேயே மேலும் சிலகாலம் தங்கியிருந்து நவரச மோகினியின் குணாதிசயங்களை கண்டறியலாம் என இருவரும் விரும்பினர். அந்நகரின் எல்லையில் ஜன நடமாட்டம் என்பதே இல்லாத ஒரு இடத்தில் பழைய மாளிகை ஒன்று பூட்டிய நிலையில் இருந்தது. அந்த பழைய மாளிகையின் உரிமையாளர் யார் என விசாரித்து சிறிது காலத்திற்கு அதனை வாடகைக்கு எடுத்துத் தங்கினர்.
அம்மாளிகையில் குடியேறியபின் நவரசமோகினியை தங்களின் கண்காணிப்பிலேயே விக்கிரமாதித்தனும், பட்டியும் வைத்துக் கொண்டனர். எக்காரணம் கொண்டும், அவளை வெளியே சென்றுவர அனுமதிப்பதில்லை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் இருவரில் ஒருவரே சென்று வாங்கி வந்தனர்.
இருவருமே செல்லவேண்டிய நிலை ஏற்படுமாயின் நவரச மோகினியை உள்ளேவைத்து வெளிப்புறமாக பூட்டிச் சென்றிடுவர்.
மூவரும் அந்த மாளிகையில் வாழ்ந்து வருகின்ற போது தங்களது துணிமணிகள் ஆகியவற்றை சலவை செய்து தருவதற்கு மட்டும் ஒரு கிழவியை வேலைக்கு அமர்த்தி யிருந்தனர். அந்தக் கிழவிக்கும் மாளிகையின் ஜன்னல் வழியாகவே துணிகளைக் கொடுப்பர். |
இரவு நேரத்தில் அம்மாளிகையில் மாடியில் உள்ள அறையில்தான் படுத்து உறங்குவர். அவ்வாறு படுத்து தூங்குவதிலும் நடைமுறையினை கையாண்டனர்.
படுக்கையின் மையத்தில் நவரச மோகினிபடுத்துக் கொள்வாள். அவளுக்கு இருபுறமும் பட்டியும், விக்கிரமாதித்தனும் படுத்து தூங்குவார்கள்.
ஒருநாள் சலவை செய்யும் கிழவியின் உடல் நலம் பாதிப்படைந்தது. அதனால் அவள் மாளிகைக்கு வந்து அழுக்குத் துணிகளை எடுத்துச் செல்லவோ, சலவை செய்த துணிகளை கொண்டு வந்து தரவோ இயலாது போயிற்று. அதன் காரணமாக கிழவியானவள் தன் மகன் விஜயனை தனக்குப் பதிலாக அழுக்குத் துணிகளை மாளிகையில் இருந்து எடுத்து வருமாறு கூறினாள்.
விஜயனும் விக்கிரமாதித்தனின் மாளிகைக்குச் சென்றான். மாளிகையின் முன்புறமாக நின்ற விஜயன் மூடப்பட்டு இருந்த கதவு முன்பாகச் சென்று குரல் கொடுத்தான்.
சிறிது நேரம் கழித்ததும் ஜன்னல் கதவினைத் திறந்த நவரச மோகினி வந்திருப்பது யார் எனப் பார்த்தாள்.
“நீங்கள் யார்? என்று கேட்டாள்.
"உங்களது வீட்டில் துணிகளை வெளுத்துக் கொடுக்கும் கிழவியின் மகன் நான். என் தாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நான் உங்கள் வீட்டிற்கு வந்து அவளுக்குப் பதிலாக அழுக்குத் துணிகளை எடுத்துச் செல்ல வந்துள்ளேன்" என்றான்.
ஜன்னல் வழியாக அழுக்குத் துணிகளைக் கொடுத்த நவரச மோகினியைக் கண்ட விஜயன் அவள் மீது தீராத மோகம் கொண்டான். வீடு வந்து சேரும்வரை நவரச மோகினியின் நினைவாகவே வந்தான்.
வழக்கத்திற்கு மாறாக அன்று தன் முகத்தில் ஒரு மாறுதல் தெரியவே, கிழவி "வாட்டமுற்று இருக்கக் காரணம் என்ன?'' என்று கேட்டாள்,
தன் தாய் கேட்ட கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்ல தயங்கிய விஜயன். அவள் மீண்டும் வற்புறுத்தவே, நவரச மோகினியின் மீதுதான் காதல் கொண்டுள்ளதை தெளிவாக மறைக்காமல் சொன்னான்.
''மகனே! அவள் தகுதி என்ன? நம் தகுதி என்ன? அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதே! உனது மனப்போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. கிடைக்காத பொருள்மீது ஆசை வைத்தால் நீ ஏமாற்றத்தை அடைவாய். அதனால் அந்தப் பெண்ணைப் பற்றி மறந்துவிடு. காலாகாலத்தில் உனக்கும் நல்லதொரு பெண்ணைப் பார்த்து விரைவில் நான் மணமுடித்து வைக்கிறேன். அதுவரைக்கும் நீ சற்றுப் பொறுத்திரு,'' என்று அறிவுரை கூறினாள்.
ஆனால் கிழவிக் கூறிய புத்திமதிகளை விஜயன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் நவரச மோகினியின் நினைவாகவே இருந்தான்.
விஜயன் வேளாவேளைக்கு முறையாக சாப்பிடுவதில்லை. இரவு நேரத்தில் உறக்கம் கொள்ளாது அலைந்து திரிந்து கொண்டு இருந்ததால் நாளுக்கு நாள் அவன் உடல் மெலிந்தான.
மகனின் இந்த நிலையைக் கண்ட கிழவியோ பரிதவித்தாள். அவள் மகனின் நிலையை நினைத்து கவலைப்பட்டாள். அவனது ஆசை முறையற்ற ஆசையாக இருக்கிறதே என்ன செய்வது? என்று பரிதவித்தாள்.
ஒருநாள் கிழவி அழுக்குத் துணிகளை எடுத்து வருவதற்காக நவரச மோகினியின் மாளிகைக்குச் சென்றாள். அவளிடம் இருந்து கிழவி துணியை வாங்குகின்ற போது கிழவியின் முகம் வாடியிருப்பதைக் கண்டு காரணம் கேட்டாள் நவரச மோகினி.
அதுவரை தன் நெஞ்சிலேயே தேக்கி வைத்து வேதனைப்பட்டு வரக் காரணமான தன் மகனின் விஷயங்கள் அனைத்தையும் மடைத் திறந்த வெள்ளம் போன்று நவரச மோகினியிடம் கொட்டித் தீர்த்தாள்.
அதனை சொல்லி முடித்த பின்னர்தான் தான் எவ்வளவு பெரிய தவறினை செய்துவிட்டோம் என உணர்ந்ததோடு நவரச மோகினி நம்மை விரட்டியடித்து விடுவாள் என்று பயந்தாள் கிழவி.
நவரச மோகினி சிரித்தாள். கிழவிக்கு ஒன்றுமே புரியவில்லை . மேலும் அவள் கிழவியைப் பார்த்து, "பாட்டி! உன்மகன் ஒரு கோழை. அவனைப் போன்ற ஒரு கோழையை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. தான் விரும்பும் பெண்ணை அடைவதற்கு முயற்சி செய்பவனே உண்மையான ஆண்மகன். உன் மகனுக்கு உண்மையிலேயே தைரியமிருந்தால் அவன் எதை விரும்புகின்றானோ அதனை அடைந்து கொள்வான்.''
நவரசமோகினி இவ்வாறு ஏன் கூறினாள் என்று கிழவிக்கு ஒன்றுமே புரியவில்லை .
வீடு திரும்பியதும் தன் மகனிடம் நடந்ததை தெரியப் படுத்தினாள்.
நவரச மோகினியின் மனநிலையினையும், அவர் தனக்கு அளித்த ஊக்கத்தையும், அவள் தன் தாயிடம் பேசியப் பேச்சுக்களில் இருந்து ஒருவாறு புரிந்து கொண்டதும் விஜயனுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது
அன்றைய இரவு விஜயன் நல்லவிதமாக ஆடை அணிந்து கொண்டு நவரச மோகினியின் மாளிகையினை வந்தடைந்தான்.
மாளிகையின் தலைவாசல் கதவு உட்புறமாகத் தாளிடப் பட்டிருந்தது. மாளிகையினுள் எவ்வாறு பிரவேசிக்க முடியும் என யோசித்தும் விஜயன் மாளிகையை சுற்றியபடி வந்தான்.
கொல்லைப் பக்கமாக அவன் வந்தபோது மாளிகையை ஒட்டி பெரிய ஆலமரம் ஒன்று இருப்பது தெரிந்தது. அவன் மரத்தின் மீது ஏறி அதன் கிளைவழியாக மாளிகையின் மேல் தளத்தை வந்தடைந்தான், பின்னர் அங்கிருந்து மாளிகையின் நடுத்தளத்திற்கு செல்லும் படியில் மெதுவாக இறங்கியபோது அங்குள்ள அகன்ற கூடம் ஒன்றில் நவரச மோகினிப் படுத்திருப்பதும் அவளின் இருபுறமும் இரு ஆண்கள் படுத்திருப்பதும் தெரிந்தது. - 'இவள்! தனியாகப் படுத்திருப்பாள் என்று வந்தால் இங்கு இவளுக்கு இருபுறமும் இரு ஆண்கள் படுத்துறங்கிக் கொண்டிருக்கின்றார்களே! திடீர் என்று அவர்கள் விழித்துக் கொண்டால் நம் கதி அதோகதிதான்' என்று நடுங்கினான் விஜயன்.
தூக்கம் வராமல் புரண்டுப் படுத்த நவரச மோகினி சற்றுத் தொலைவாக விஜயன் நின்று கொண் டிருப்பதைப் பார்த்துவிட்டாள். அத்துடன் அவனிடம் இருந்த தயக்கமும், குழப்பமும்கூட அவளுக்கு புரிந்துவிட்டது.
தன் இருபுறமும் படுத்திருக்கும் பட்டியையும், விக்கிர மாதித்தனையும் ஊன்றிக் கவனித்தாள்.
அவர்கள் இருவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.
நவரச மோகினி படுக்கையில் இருந்தபடியே விஜயனை ஜாடையில் தன்னருகே அழைத்தாள்.
"இதோ பார்! இவர்கள் இருவரையும் பற்றிக் கவலைப்படாதே நீ எதற்காக வந்தாயோ அந்தக் காரியத்தை நிறைவேற்றிக் கொள் என்று சைகையின் மூலம் விளக்கினாள்.
நவரச மோகினியின் சம்மதத்தை அறிந்து கொண்ட விஜயன், மோக வெறி கொண்டவனாய் நவரச மோகினியின் மீது சட்டெனப் பாய்ந்து அவளை மார்புறத் தழுவி இன்பமூட்டத் தொடங்கினான்.
அவளை விஜயன் அனுபவித்துக் கொண்டிருந்தபோது நவரச மோகினி தனது புறங்கையினால் விக்கிரமாதித்தனை இடித்தாள்.
தூக்கம் கலைந்த விக்கிரமாதித்தன் திரும்பிப் பார்த்த போது நவரச மோகினியோடு யாரோ ஒருவன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவ்வாறு கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது பட்டிதான் என்று மனம் வருந்தினான்.
'பட்டிக்கு இந்த கேவலமான எண்ணம் எப்படி வந்தது என்று புரியவில்லையே! அவன் நவரச மோகினியை விரும்புவது தெரிந்திருந்தால் தானே அவனுக்கு அவளை விட்டுக் கொடுத்திருக்கலாமே! இப்படி ஒரு கேவலமானச் செயலைச் செய்த பட்டியிடம் இனி பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக்கூடாது' என்று திரும்பியபடி படுத்துறங்கினான்.
சிறிது நேரம் கழிந்தது. அப்போதும் விஜயனுக்கும் நவரச மோகினிக்குமான கூடல் நிற்கவில்லை. அப்போது அவள் தனது புறங்கையால் பட்டியின் - துகை இடித்தாள்.
பட்டி உறக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தான். விக்கிரமாதித்தன் தான் நவரச மோகினியுடன் உறவு கொள்கிறான் என்று நினைத்தான். 'ஒரு நாட்டின் மன்னனாக இருக்கும் என் தமையலுக்கு ஏன் இந்த கேவலமான புத்தி வந்தது? எத்தனையோ பேரழகுப் பெண்கள் தேடிவந்து சுகம் அளிப்பார்கள்! இவளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னிடம் நேரிடையாகவே கூறி யிருக்கலாமே! நான் ஒதுங்கிக் கொள்வேனே! கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல் பக்கத்தில் ஒருவன் படுத்திருக் கின்றானே என்று கூடப் பார்க்காமல் இப்படி நடந்து கொள்கிறாரே!' என்று வருத்தத்துடன் மறுபுறமாக திரும்பிப் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.
அன்றைய இரவு விஜயனுக்கும், நவரச மோகினிக்கும் எந்த ஒரு தடையுமில்லாத இன்ப இரவாக அமைந்தது.
பொழுது விடியும் முன்பாக நவரச மோகினி தனது கள்ளக் காதலனை விஜயனை ஒரு அறையில் இருக்கச் செய்து வெளியே பூட்டிவிட்டு ஒன்றுமே நடவாதது போல் பட்டிக்கும், விக்கிரமாதித்தனுக்கும் இடையே வந்து படுத்துக் கொண்டாள்.
பொழுது விடிந்தபின்னர் படுக்கையை விட்டு எழுந்த விக்கிரமாதித்தன் பட்டியை முகம் கொடுத்து பார்க்கக்கூட விரும்பாதவனாய் முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்து கொண்டான்.
விக்கிரமாதித்தன் அவ்வாறு உட்கார்ந்திருப்பதைக் கண்ட பட்டி, இவர் செய்கின்ற தவறையும் செய்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போன்று உட்கார்ந்திருக்கின்றாரே!' என்மீது கோபம் உள்ளவர் போன்று நடிக்கின்றாரே என்று எண்ணியபடி மாளிகையின் மேல் தளத்திற்குச் சென்று உலாவத் தொடங்கினான்.
அந்த நேரத்தில் வான் வெளியில் நடந்த அதிசய காட்சியானது பட்டியின் பார்வையில் தென்பட்டது.
வான வீதியில் தவ சிரேஷ்டர் ஒருவர் தனது தவ வலிமையால் பறந்து கொண்டிருந்தார். அவர் மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியில் ஓர் ஒதுக்குப்புறமாக தரையிறங்கினார்.
பின்னர் தவசிரேஷ்டர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னர் தன் ஜடாமுடியில் மறைத்து வைத்திருந்த பெண்ணை எடுத்து கீழே இறக்கிவிட்டார். பின் தனது காலைக் கடன்களை முடித்திட வேண்டி ஒதுக்குப் புறம் தேடிச் சென்றுவிட்டார்.
தவசிரேஷ்டரால் தரையில் இறக்கிவிடப்பட்ட பெண் நாலாப்புறமும் சுற்றிப்பார்த்துவிட்டு தன்னை ஒருவரும் பார்க்கவில்லை என்பதையும் உறுதி செய்தவாறு தன் சேலைத் தலைப்பில் மூடி மறைத்து வைத்திருந்த இளைஞன் ஒருவனை கீழே இறக்கிவிட்டாள். பின்னர் இருவருமாக தனித்தனியாக காலைக் கடன்களை முடித்துத் திரும்பினர். பின்னர் மூவரும் ஒருவரை ஒருவர் அறியாதபடி அருகில் ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீரில் நீராடி முடித்தனர்.
அந்தப் பெண் நீராடி முடித்து அவசரமாக கரையேறி வந்து, தனக்கு முன்பாக நீராடிமுடித்து இருந்த இளைஞனை தன் முந்தானையில் மறைந்து கொள்ளும்படிச் செய்துவிட்டாள். சற்று நேரம் கழித்து வந்த தவசிரேஷ்டர் மீண்டும் அப்பெண்ணை எடுத்து தன் ஜடாமுடியில் மறைத்து வைத்துக் கொண்டு மீண்டும் ஆகாயத்தில் செல்ல முற்பட்டார்.
அதனைக் கண்ட பட்டியோ வேகமாக மாளிகையின் மேல்மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்து முனிவரின் காலில் விழுந்து வணங்கினான்.
அதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த முனிவர், "யாரப்பா நீ! என்ன காரணத்திற்காக என்னை நீ வணங்குகின்றாய்?'' என்று கேட்டார்.
பட்டி அடக்கத்துடன் "சுவாமி! தங்களை நான் சந்திக்க நேர்ந்தது என் பெரும் பாக்கியம். இன்றைய தினம் என் தந்தையின் திதி நாளாகும். இத்தினத்தில் எவரேனும் ஒரு துறவிக்கு அன்னதானம் அளிப்பது வெகு சிறப்பாகும். அதன் காரணமாகவே யாராவது தவமுனிவர் தென்படுகின்றாரா எனத் தேடிச் சென்றபோது வழியில் தாங்கள் என் கண்களில் தென்பட்டீர்கள்! தயவு செய்து எமது வேண்டுகோளை ஏற்று எனது இல்லத்திற்கு மறவாது வந்து சேர்ந்திட வேண்டும் அங்கு நான் தங்களுக்கு அளிக்க இருக்கும் எளிமையான விருந்தினையும் மறுப்பேதும் இல்லாமல் உண்டு எமக்குத் தங்கள் ஆதரவையும் ஆசியும் வழங்கிட வேண்டுகிறேன்" என்றான்.
தவ முனிவனும் பட்டியின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்டு அவனது மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
அவரை வரவேற்று உபசரித்த பட்டியானவன் மாளிகையின் உட்புறத்தே அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர வைத்தான்.
பின்னர் நவரச மோகினியை அழைத்தான். "இன்றைய தினம் நம் வீட்டிற்கு சில விருந்தினர்கள் விருந்துண்ண வருகிறார்கள். சுமார் ஏழு பேர் சாப்பிடும் அளவுக்கு அறு சுவையுடன் உணவினை தயார் செய்திடு" என்றான்.
உடனே நவரச மோகினியும் விருந்துக்கான உணவு வகைகளை தயார் செய்திடத் தொடங்கினாள்.
விக்கிரமாதித்தனுக்கு பட்டியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
'பட்டி இங்கு எதற்காக ஓர் துறவியை விருந்துண்ண அழைத்து வரவேண்டும். மாளிகையில் இருப்பது மூன்றே பேர். இப்போது வந்திருக்கும் துறவியையும் சேர்த்தால் நான்கு பேரே. ஆனால் பட்டியோ ஏழு பேருக்கான விருந்தை ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறான். ஏன் அவ்வாறு கூறினான்?' என பலவாறு சிந்தித்தான்.
அதே நேரம் ஆலமரத்து இலைகளைப் பறித்து வந்த பட்டியோ அவற்றை ஏழுபேர் உணவு உண்ணத் தக்க இலைகளாக தைத்து முடித்தான்.
சிறு நேரத்திற்குப் பின்னர் நவரச மோகினி "விருந்து தயார்! அனைவரும் விருந்துண்ண வரலாம்" என்றாள்.
பட்டி தான் தைத்த ஏழு இலைகளையும் வரிசையாக வைத்து தண்ணீர் தெளித்தான். பின்னர் முனிவரிடம் சென்று, "சுவாமி தாங்கள் விருந்துண்ண எழுந்தருள வேண்டும்?" என்றான்.
முனிவரும் பட்டியின் வேண்டுகோளை ஏற்று எழுந்து வந்து - ஓர் இலையின் முன்பே அமர்ந்தான்.
பட்டி, விக்கிரமாதித்தனை நோக்கி, "தாங்கள் முனிவருக்கு அடுத்துள்ள இலையில் அமர்ந்து கொள்ளுங்கள்'' என வேண்ட விக்கிரமாதித்தனும் அவ்வாறே அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் பட்டி அவனருகில் உள்ள இலையில் சென்று அமர்ந்து கொண்டதும், விக்கிரமாதித்தன், "பட்டி! நாம் நான்கு பேர்கள்தான் இங்கே இருக்கிறோம். மூன்று இலைகளில் மூவர் அமர்ந்தாகிவிட்டது. மற்றும் ஓர் இலையில் அமர்ந்து சாப்பிட நவரச மோகினி இருக்கின்றாள். இவை நான்கும் போக மேலும் மூன்று இலைகள் உள்ளனவே ஏன் வீணே அந்த இலைகளைப் போட்டுள்ளாய்?" என்று கேட்டான்.
பட்டி புன்னகை செய்தபடியே, "நாம் அனைவரும் விருந்து உண்ணும் சமயத்தில் நமக்கு அருகே இருக்கும் சிலர் சாப்பிடாது இருப்பது பெரும் பாவமாகும். அதனால்தான் அவர்களுக்கும் சேர்த்தே விருந்து தயார் செய்யுமாறு இலைகளையும் போட்டேன்" என்றவன் முனிவனைப் பார்த்தான்.
''சுவாமி! தங்களது ஜடாமுடியில் நீங்கள் மறைத்து வைத்திருக்கும் அந்தப் பெண்ணை தயவு செய்து கீழே இறக்கி விடுங்கள். அவளும் சேர்ந்து நம்முடன் அமர்ந்து விருந்துண்ணட்டும்" என்றான்.
தன் ரகசியம் அம்பலத்திற்கு வந்துவிட்டதே என வெட்கப்பட்ட முனிவன் தன் ஜடாமுடியில் மறைத்து வைத்திருந்த பெண்ணை கீழே இறக்கிவிட்டார்.
பட்டி அந்த இளம் பெண்ணை நோக்கி, "பெண்ணே ! உணவு உண்ணும் நேரத்தில் ஒருபோதும் வஞ்சனையை செய்யக்கூடாது. அதனால் நீ மறைத்து வைத்திருக்கும் உன் காதலனையும் வெளியே எடுத்துவிடு. அவரும் நம்முடன் அமர்ந்து உணவு உண்ணட்டும்" என்றான்.
பட்டியின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் மிகவும் வெட்கமடைந்தாள்.
தான் மறைத்து வைத்திருந்த தன் காதலனையும் வெளியே எடுத்துவிட்டாள். அனைவரும் இலையில் அமர்ந்தும் இரண்டு இலைகள் மீதம் இருக்கவே, பட்டி. நவரச மோகினியை அழைத்தான்.
"நீயும் உனது கள்ளக் காதலனுக்கு ஒரு போதும் வஞ்சனை செய்யக்கூடாது. அதனால் நீ மறைத்து வைத்திருக்கும் அவனையும் வெளியே வரச்சொல், அவனும் வந்து விருந்து உண்ணட்டும்" என்றான்.
பட்டி இவ்வாறு தன் கள்ளக் காதலை அனைவரும் அறியுமாறு போட்டுடைப்பான் என்று நவரசமோகினி சற்றும் எதிர்பார்க்க வில்லை. பட்டி அவ்வாறு கண்டுபிடித்தது அவளுக்குப் பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. தான் மறைத்து வைத்திருந்த விஜயனை அழைத்துவந்து ஓர் இலையின் முன்பாக அமரவைத்தாள்.
பட்டி அவளைப் பார்த்து, “நீ எங்கள் அனைவருக்கும் முதலில் விருந்தினைப் பரிமாறு! பின்னர் நீ அமர்ந்து உண்ணலாம்" என்றான். அவளும் அவ்வாறே செய்தாள்,
உணவை உண்டு முடிந்ததும் முனிவர் பெரும் கோபமடைந்தார்.
தன் காதலியைப் பார்த்து, “நீ எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்! இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை. உன் கள்ளக் காதலனையே நீ மணந்து குடும்பம் நடத்திக் கொள்.'' எனக் கூறி புறப்பட்டு செல்ல முடிவு செய்தார். மேலும் அவர் பட்டியை நோக்கி, ''ஐயா! நீர் எனக்கு சரியானப் பாடத்தைப் புகட்டினீர்! இதுவரையிலும் நான் எப்படியோ வாழ்ந்திருந்தாலும், இனி ஒரு போதும் பெண்களை மனதால் நினைக்கமாட்டேன்.'' என்று கூறியபடிப் புறப்பட்டார்.
பட்டியும் ''சுவாமி! வேறொரு இளம் பெண்ணை தாங்கள் சந்தித்தப் பின்னர் உங்கள் வைராக்கியம் நிலைத்து நின்றால் எனக்கு மகிழ்ச்சியே!'' என்று கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினான்
பின்னர் பட்டியானவன் முனிவரின் காதலியையும், அவளது கள்ளக் காதலனையும் அழைத்து, "நீங்கள் இருவரும் உங்களுக்கு ஓர் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் ஓர் எச்சரிக்கை. உங்களது காதல் விவகாரமானது உங்களோடே இருக்கட்டும். அடுத்தவர்களிடமும் அது தொடர வேண்டாம்" எனக் கூறி அனுப்பி வைத்தான்.
அடுத்து நின்று கொண்டிருந்த நவரச மோகினியை அழைத்து, "நீ.... நான் சொல்வதை கவனமுடன் கேட்டுக் கொள். கடவுள் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இடையே சிறு வேறுபாடுகளை வைத்துள்ளான். மிருகங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. ஆனால் மனிதன் மிருகத்தில் இருந்து மேம்பட்டவன். அவன் பெண் இன்பம் அனுபவித்திட வேண்டி சில கட்டுப்பாடுகளைத் தனக்குத் தானே விதித்துக் கொண்டிருக் கிறான். அதனால் ஒரு போதும் அவன் மிருகங்களுக்கு இணையாக நடந்து கொள்ளாது எப்போதும் மனிதத் தன்மையுடன் வாழ முடிகிறது. எனவே ஒருபோதும் கள்ளக்காதல் புரிவது சாமர்த்தியம் என எண்ணிவிடாதே! இந்த இளைஞனும் நீயும் இனி கணவன் மனைவியாக இங்கேயே குடியிருந்து வாழ்க்கை நடத்துங்கள். இனியாவது உங்கள் இருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் தவறாமை நிலைக்கட்டும்" என்று கூறி கொஞ்சம் பொருளையும் அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்.
பின்னர் விக்கிரமாதித்தனும் பட்டியும் அம்மாளிகையை விட்டு தங்கள் நாடான உஜ்ஜயினி மகாளிப்பட்டணத்தை நோக்கி பயணம் செய்யலாயினர்.
அப்போது விக்கிரமாதித்தன், ''பட்டி! உன்னை நான் தவறாக எண்ணிவிட்டேன். எந்தவிதக் காரணமும் இல்லாமல் உன் மீது நான் கோபம் கொண்டதை மனதில் வைத்துக் கொள்ளாதே!'' என்று கூறினான்.
பட்டி விக்கிரமாதித்தனைப் பார்த்துச் சிரித்தான். "அண்ணா ! உங்கள் கோபத்தை நான் பொருட்படுத்தி இருந்தால் ஒரு போதும் நாம் சேர்ந்திருக்க முடியாதே. ஆனால் ஒன்று...! நீங்கள் ஒன்றும் பெண்ணாசையில் முனிவனுக்கு சளைத்தவர் அல்ல என்பது எனக்குத் தெரியாதா? முனிவனுக்கு உபதேசம் செய்வது எனக்கு எளிதாக இருந்தது. ஆனால் உங்களிடம் என் உபதேசம் எடுபடுமா?" என்றான்.
அதனைக் கேட்ட விக்கிரமாதித்தன் புன்னகை செய்தபடி, "பட்டி நீ மன்னனுக்கு ஏற்ற மந்திரியல்லவா! மந்திரிக்கு அழகே நீதி சொல்வதில்தானே இருக்கிறது. அதோடு பெண்களைப்பற்சி உண்மைகளை ஆராய்ந்து உரைப்பதிலும் இருக்கிறது” என்றான்,
இவ்வாறாக விக்கிரமாதித்தனின் கதையைப் பூரணச் சந்திர வல்லிப் பதுமை கூறி முடித்ததும், மாலைப் பொழுதும் முடிந்துவிட்டதால், போஜராஜனும் மனம் வருந்தியவனாய் தன் அரண்மனை அந்தப்புரம் நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
மறுநாள் வழக்கம்போல் நீராடியபடி புத்தாடைகளை அணிந்து கொண்டு நவரத்தின சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்திட வேண்டுமென ஆசையுடன் போஜராஜன் சிம்மாசனம் இருக்கின்ற கொலுமண்டபத்தை அடைந்தான்,
சிம்மாசனத்தின் படிகளில் ஏறிய போஜராஜன் முப்பத்து ஒன்றாவது படியில் தனது காலை வைத்தபோது அப்படிக்கு காவலாக இருந்த பிரபோத வல்லிப் பதுமை அவனைப் பார்த்து சிரித்தது.
"போஜராஜனே! எம்மன்னர் விக்கிரமாதித்தப் பூபதியின் சாகசங்கள் பலவற்றைக் கேட்டீர். அவற்றில் சிறிதேனும் உமக்கு இருந்தால் அல்லவா இந்த சிம்மாசனத்தில் ஏறி நீர் அமர்ந்திட இயலும்! எமது மன்னரின் மற்றும் ஓர் சாகசத்தைக் கூறுகிறேன் கேளும்'' என்று விக்கிரமாதித்தனின் கதையைக் கூறத் தொடங்கியது.