பாடலிபுரம் என்ற நகரை பாடலீசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவளிடம் ஒரு பஞ்ச வர்ணக்கிளி இருந்தது. ஆண் கிளியான அது நல்ல சிந்தனை சக்தியும் அறிவும் உடையது. மேலும் அது அனைத்து சாஸ்திரங்களையும் தெரிந்து வைத்திருந்தது. திரிகால ஞானமும் கூட அந்தக் கிளிக்கு இருந்தது.
பாடலீசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன்னுடைய எண்ணத்தினை தான் வளர்க்கும் பஞ்சவர்ணக் கிளியிடம் கூறினான். இந்த நேரத்தில் நீதான் எனக்கு நல்லதொரு யோசனையை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அந்தக் கிளியோ பாடலீசனைப் பார்த்து "அரசே! மகத நாட்டு இளவரசி பிரபாவதி என்னும் நங்கையானவள் எல்லா வகையிலும் சிறப்பு மிக்கவளாய் தங்களுக்கு ஏற்ற வகையில் இருப்பாள். அதோடு அவள் பேரழகி. நல்ல குணமும் நிரம்ப பெற்றவளாக இருக்கின்றாள். அவளையே தாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்" என்று தனது யோசனையைத் தெரியப்படுத்தியது.
அக்கிளியின் யோசனைப்படியே பாடலீசனும் ஒரு நன்னாளில் பிரபாவதியை திருமணம் செய்து தனது அரண்மனைக்கு அழைத்து வந்தான்.
பாடலீசனைப் போன்றே பிரபாவதியும் ஒரு பெண் வர்ணக் வியை வளர்த்தாள். அதுவும் பாடலீசனின் கிளிக்கு இணையாக அறிவு, சாமர்த்தியம் என அனைத்திலுமே நிகராக விளங்கியது.
பாடலீசனுடன் அரண்மனைக்கு முதன் முதலாக வரும்போது தன்னுடனேயே தான் வளர்த்து வரும் பெண்கிளியையும் பிரபாவதி எடுத்து வந்தாள்.
அன்றைய இரவு அரண்மனையின் அந்தப்புரத்தில் பாடலீசனும் பிரபாவதியும் தனிமையில் இன்புற்று இருக்கும்போது பாடலீசன் தன் மனைவியை நோக்கி "அன்பானவளே! நான் வளர்த்து வரும் பஞ்சவர்ணக் கிளியைப் போன்றே நீயும் ஒரு கிளியை வளர்த்து வருகிறாய்! இரு கிளிகளும் அறிவாற்றல், சாஸ்திர ஞானம் கலைஞானம் என அனைத்திலுமே சிறந்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக நான் வளர்ப்பது ஆண் கிளியாகவும் நீ வளர்க்கும் கிளி பெண்ணாகவும் உள்ளன. இப்போது நாம் இருவரும் உல்லாசமாக சல்லாபித்துக் கொண்டு இருக்கின்றோம்! ஆனால் நம் கிளிகளோ தனித்து கூண்டுகளில் அடைபட்டுக் கிடக்கின்றன. நாம் மட்டும் கூடி கொஞ்சி உலாவும்போது அவைகள் மட்டும் தனிமையில் இருப்பது நல்லதல்ல என்றே என் மனதிற்கு படுகிறது. எனவே அவை இரண்டையும் ஒரே கூண்டில் விட்டு உறவாடி இன்பமாக இருக்கச் செய்தால் என்ன? நீ என்ன நினைக்கிறாய்?" என்று அன்போடு கேட்டான்.
அதனைக் கேட்ட பிரபாவதியும் மனம் மகிழ்ந்தாள். ''உங்கள் யோசனையும் நல்லதென்றே என் மனதிற்குப் படுகிறது. ஆண்டவனது படைப்பில் எத்தனையோ விதமான ஜீவராசிகள் உயிர் பெற்றிருந்தாலும் அவைகளின் உணர்ச்சிகள் மட்டும் ஒரே விதமாக அமைந்துள்ளன. அவையும் மனிதர்களைப் போன்றே ஆணும், பெண்ணுமாக இன்பத்தை அனுபவிக்கின்றன. குட்டிகளையும், குஞ்சுகளையும் ஈனுகின்றன. இயற்கையின் - நிலையே இவ்வாறு இருக்கின்றபோது நமது கிளிகள் இரண்டை மட்டும் தனித்தனியே பிரித்து வைப்பது நல்லதல்ல. அவைகளை சேர்த்து வாழ வைப்பதே மிகவும் பொறுத்தமாகும்" என்றாள்.
பிரபாவதி இவ்வாறு கருத்துத் தெரிவித்ததும் உடனே பாடலீசன் பெண் கிளியை எடுத்துச் சென்று தான் வளர்த்து வரும் ஆண்கிளி இருக்கும் கூட்டினுள் விட்டான். திரும்பி வந்ததும் தன் மனைவியுடன் வெகுநேரம் கூடி மகிழ்ந்தான்.
சிறிது நேரத்தில் கிளிகள் இருந்த கூண்டில் இருந்து ஏதோ சண்டையிட்டுக் கொள்வது போன்று தோன்றவே, பாடலீசனும் பிரபாவதியும் கிளிகள் இருந்தக் கூண்டில் இருந்து எதன் காரணமாக சப்தம் வருகிறது என்று பார்த்தனர்.
கூண்டில் இருந்த ஆண்கிளியானது பெண்கிளியை நெருங்கி சல்லாபமாக இருக்க முயற்சி செய்தது.
பெண் கிளியோ "நீ என்னை நெருங்காதே! நான் சொல்வதைக் கேட்டு என்னை விட்டுவிடு!" என்று கதறியது கீ... கீ... கீ... என்று கூச்சலிட்டது.
உடனே ஆண் கிளியானது ''எதற்காக நீ இப்படி கூறுகின்றாய்? என்று கேட்டது.
பெண் கிளியோ “ஆண்கள் எப்போதுமே! சுய நலம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். ஒழுக்கம் இல்லாதவர்களாகலாம் இருக்கின்றார்கள். அவர்களில் யாருக்குமே பெண்களிடம் உண்மையான பற்றோ பாசமோ கிடையாது. தங்களின் வேட்கையினை தணித்துக் கொள்ள வேண்டி பெண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அப் பெண்களினால் பயன் எதுவும் இல்லையென்று தெரிந்து விட்டால் அப்பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டு உடனேயே தாமதிக்காமல் வேறொரு பெண்ணுக்காக தேடி அலைவார்கள். ஆகையினால் உன்னைப் போன்ற ஆண் இனங்களையே நான் வெறுக்கிறேன்" என்றது.
இதனைக் கேட்டதும் ஆண் கிளிக்கு கோபம் அதிகமாகியது.
"ஆண்கள் அனைவருமே உனது கருத்துப்படி கொடியவர்கள் எனக் கூறுவது என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஒரு சில ஆண்கள் மட்டும் நீ கூறுவது போல் இருக்கலாம். பெண்கள் மட்டும் என்ன நல்ல குணம் கொண்டவர்களா? அவர்களிலும் கொடிய குணம் கொண்டோரும் இருக்கின்றாரே" என்றது.
ஆண் கிளி இப்படிக் கூறியதை பெண் கிளி ஏற்க மறுத்தது. "இதோ பார்! அன்பின் பிறப்பிடமாக திகழ்பவர்கள் பெண்கள் தான் அவர்கள் மட்டுமே பாசமுள்ளவர்கள். அவர்களால் அன்புடனும், பாசமுடனும் இருக்க முடியுமே தவிர ஒரு போதும் கொடிய குணம் கொண்டோ ராக மாறிட மாட்டார்கள்'' என பெண் கிளியானது மறுப்புத் தெரிவித்தது.
அதனைக் கேட்ட ஆண் கிளியானது ''நீ ஆண்களை ஒட்டு மொத்தமாக குறை கூறுகின்றாயே! ஆண்கள் அப்படி என்ன பெரிதாக கொடுமை செய்துவிட்டார்கள்?" என கேட்டது.
உடனே பெண் கிளி "உன் கேள்வியும் நியாயமானதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் ஒரு கதை சொல்கிறேன். அதனைக் கேட்டபின்னர் கொடிய குணம் கொண்டவர்கள் ஆண்களா? இல்லை பெண்களா? என்பதை நீ முடிவு செய்!" என்று கதையைத் தொடர்ந்தது.
சூரிய புரம் என்ற ஊரில் தனதத்தன் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தனகேசரி என்ற மகனும் உண்டு.
தனகேசரிக்கு கடுமையாக உழைக்கத் தெரியாது, எந்த நேரமும் சோம்பேறியாகவே காலத்தை ஓட்டுவான். உழைப்பின் பயனை அவன் நன்கு அறியாத காரணத்தினால் அவனுக்கு நல்ல நண்பர்களே இல்லை. தீயகுணம் கொண்டோரே அவனுக்கு நண்பர்களாக வாய்த்தனர். அவர்களுடன் சேர்ந்து கெட்ட காரியங்களில் ஈடுபட்டு காலத்தை வீணாகக் கழித்து வரலானான்.
ஒருநாள் அவனது தந்தை தனதத்தன் திடீரென காலமாகி விட்டார். அதன் காரணமாக அவர் சம்பாதித்த சொத்துக்கள் முழுமையும் அவரது ஒரே வாரிசான தனகேசரியின் பொறுப்புக்கு வந்தது.
தன் தந்தையின் உழைப்பில் உள்ள அனைத்து செல்வங் களையும் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊதாரித்தனமாக செலவு செய்தான். அவனது அனைத்துச் சொத்துக்களும் அவன் கையை விட்டுச் சென்றன. வறுமையின் கோரப்பிடியில் அவன் சிக்கித் தவிக்கலானான்.
தனகேசரிக்கு வறுமை வந்து சூழ்ந்ததும் அவனது கெட்ட நணபர்கள் அனைவரும் அவனை விட்டுச் சென்று விட்டனர். அவனுக்கு அன்புக் காட்ட யாருமே இல்லை!
தனகேசரிக்கு அந்த ஊரில் இருக்க விருப்பம் இல்லாமல் வேறு எங்காவது சென்று விடலாம் என்று முடிவு செய்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
கால்நடையாகவே ஒரு நகரத்தை அடைந்தான். அந்த நேரம் வெபனுக்கு கடும்பசி ஏற்பட்டது. வெகுதூரம் நடந்து வந்த களைப்பினால் சோர்வுற்றான். அந்த இடத்தில் ஓர் மாளிகை இருப்பதைக் கண்டான். அந்த மாளிகையை ஒட்டியத் திண்ணையில் பசி மயக்கத்தில் படுத்துக் கொண்டான்.
அந்த மாளிகையில் பூபாலன் என்பவர் வசித்து வந்தார். அவர் பசி மயக்கத்தோடு படுத்திருந்த தனகேசரியை எழுப்பி உணவு கொடுத்து உபசரித்தார்.
தனகேசரி ஓர் வியாபாரியின் மகன் என்பதையும் தற்போது அவனுக்கு யாருமே ஆதரவு இல்லை என்பதையும் அறிந்தார்.
தனகேசரியை கைவிட மனம் இல்லாதவராய் தனது ஒரே புதல்வியான இரத்தினாவளியை தனகேசரிக்கு மணமுடித்து வைத்து தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.
தன் மனைவி இரத்தினாவளியுடன் அந்நகரிலேயே சில காலங்கள் வாழ்ந்து கொண்டிருந்தான் தனகேசரி.
ஒருநாள் தன் மாமனாரான பூபாலனை நோக்கி “நான் எனது ஊருக்குச் சென்று ஏதாவது வியாபாரம் செய்திட எண்ணுகிறேன். அதனால் என் மனைவி இரத்தினாவளியை என்னோடு அனுப்பி வையுங்கள்'' என்று கூறினான். அதனைக் கேட்ட பூபாலன் மகிழ்ச்சியடைந்தார்.
தனது மகளுக்கு ஏராளமான விலை மதிப்பெற்ற உயரிய தங்க ஆபரணங்கள், வைர நகைகள் மற்றும் தாராளமாக சீர் வரிசைகள் ஆகியவற்றை அளித்து தனகேசரியுடன் அனுப்பி வைத்தார்.
தன் மகளுக்குத் துணையாக இருக்கட்டுமே என்று தன குடும்பத்தைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவரையும் அவ்விருவருடன் சேர்த்து அனுப்பினார்.
மனைவி இரத்தினாவளி, மூதாட்டி ஆகியோருடன் வெகுதூரம் வரையிலும் பயணம் செய்த தனகேசரி வழியில் ஓர் காட்டுப் பகுதியை அடைந்தான்.
தன் மனைவி இரத்தினாவளியைப் பார்த்து 'அன்பே! இது பெரும் காடு இந்த இடத்தில் திருடர்களின் பயம் அதிகமாக இருக்கும். எந்த நேரமும் அவர்கள் நம்மைத் தாக்சி நம்மிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள். நீ அணிந்து இருக்கும் நகைகளைக் கழற்றி என்னிடம் கொடு நான் அவைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் நம்மிடம் விலையுயர்ந்த பொருள் ஏதும் இல்லை என்று தெரிய வந்தால் திருடர்கள் நமக்கு எந்தவிதத் தொல்லையும் அளிக்க மாட்டார்கள் என்று கூறினான்.
கணவனின் பேச்சை உண்மை என்று நம்பிய இரத்தினாவளி தான் அணிந்து இருந்த நகைகளை எல்லாம் கழற்றி தனகேசரியிடம் கொடுத்தாள்
அவள் நகைகளை அனைத்தையும் கழற்றிக் கொடுத்த உடனேயே அங்கு இருந்த பாழுங்கிணறு ஒன்றில் தனகேசரி தன் மனைவி இரத்தினாவளியையும் துணைக்கு வந்த மூதாட்டியையும் தள்ளி விட்டு ஓடிப்போய் விட்டான்.
கிணற்றில் விழுந்த அதிர்ச்சியின் காரணமாக அந்த சமுதாட்டியானவள் உடனே மடிந்து விட்டாள். ஆனால் இரத்தினாவளியோ கிணற்றில் தள்ளப்பட்டதும் தன் கையில் கிடைத்த சுவற்றுச்செடி ஒன்றினைக் கெட்டியுடனும் உறுதியுடனும் பிடித்துக் கொண்டாள்.
மிகவும் சிரமப்பட்டு கிணற்றில் இருந்து வெளியே வந்து உயிர் பிழைத்தாள். பின்னர் தன் கணவன் செய்த துரோகத்தை எTHI Rd7 வருந்தியபடியே தன்னுடைய பிறந்த வீட்டினை வந்தப்படந்தால்
இந்தக் கதையின் மூலமாக ஆண்களுக்கு இரக்க குணம் இல்லாமமை தெரிகிறது! இதனைப் போன்று எத்தனையோ சம்பவங்கள் உலகம் முழுவதும் நடை பெற்று வருகிறது. அதன் காரணமாகவே எனக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது. அதனால்தான் உன்னை என்னிடம் நெருங்க விட மாட்டேன் என்கிறேன்" என்றது பெண் கிளி.
ஆண் கிளிக்கு மீண்டும் கோபம் வந்தது. "நீ உலகம் புரியாமல் இருக்கின்றாய்! உலக வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தால் ஆண்களை விட பெண்களே அவ நம்பிக்கை கொண்டவர் களாகவும், ஒழுக்கம் தவறி நடப்பவர்களாகவும், வஞ்சக குணம் , கொண்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நான் ஒரு காலமும் சொல்ல மாட்டேன். அவர்களில் ஒரு சிலர் மட்டும் தீயவர்களாக இருக்கலாம். அதன் பொருட்டு ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்தையே குறை கூறினால் அது நல்லதல்ல. நீ ஆண்களை இழிவுப்படுத்த எண்ணியதால் மாதிரிக்காக நானும் ஒரு கதையைச் சொல்கிறேன்" என்று கதையை ஆரம்பித்தது.
சிவபுரம் என்றொரு நாடு இருந்தது. அந்த நாடு அதன் பெயருக்கேற்றபடியே சீரும் சிறப்புமிக்க நாடாக விளங்கலாயிற்று. > அந்த நகரில் சங்கரபாதன் என்ற வியாபாரி வசித்து வந்தார். அந்த வியாபாரிக்கு சங்கமித்திரை என்றொரு மகள் இருந்தாள்.
தான் ஒரு சிறந்த அழகிதான். தன்னைப் போன்று அழகு மணட பெண்கள் இந்த உலகத்தில் வேறு எங்குமே இருக்க முடியாது என்ற ஆணவம் அவளிடம் ஏராளமாக இருந்தது.
சங்கமித்திரைக்குத் திருமணம் செய்து வைக்க சங்கரபாதல் அவளுக்கேற்ற வரனைத் தேட துவங்கினான். ஆனால் தனது தந்தையார் பார்க்கின்ற எந்த வரனையுமே தனக்குப் பிடிக்கவில்லை என மறுத்து கூறலானாள் அவள்.
தனது செல்ல மகளின் இந்தப் போக்கினைக் கண்டு சங்கரபாதல் கவலையடைந்தார். அவளை ஒரு பொருட்டாக எண்ணிக் கொள்ளாமல் தனது விருப்பப்படியே மகாதேவன் என்ற இளைஞனை மணமுடித்து வைத்தார்.
கணவன் மகாதேவனுடன் குடும்பம் நடத்த சென்ற அவள் ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு வந்து, இல்லத்தில் அடிக்கடி சண்டையிடுவாள். தன்னால் தன் கணவன் மிகவும் வேதனைப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் காலம் கடத்தி வந்தாள்.
தன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சங்கமித்திரையை நெருங்கினான் மகாதேவன்.
அவளோ அதனை நிராகரித்தாள். "இதோ பார்! நான் எப்படிப்பட்ட பேரழகி என்று உனக்குத் தெரியுமா? எனக்கு நிகராக இந்த உலகத்தில் எவருக்குமே அழகு கிடையாது. நான் ராஜகுமாரனை மணந்து அவனோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தக் கூடியவள்! கேவலம் என் தந்தை உனக்கு என்னை திருமணம் செய்து வைத்து விட்டார். இனிமேல் கணவன் என்ற பேரில் என்னை நெருங்கும் வேலையை வைத்துக் கொள்ளாதே! அதன்பின்னர் நீதான் அவமானப் படுவாய்!'' என்று மிகவும் மட்டமாக பேசினாள்.
மகாதேவன் இதனை எதிர்பார்க்கவில்லை. பொறுமையுடன் இதனைக் கேட்டுக் கொண்டான்.
மகாதேவனின் பக்கத்து வீட்டில் பெரும் பணக்கார இளைஞன் ஒருவன் இருந்தான். அந்த இளைஞனின் பெயர் ரூபன்,
அவன் கம்பீரமாகவும், காண்போர் வியக்கும் வண்ணம் கட்டழகுத் தோற்றத்துடன் காணப்பட்டான். சங்கமித்திரை அவன் அழகில் மயங்கினாள்.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் கணவனுக்குத் தெரியாமல் அந்த இளைஞனோடு உறவு வைத்துக் கொண்டாள்.
ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்த இந்த உறவானது ரகசியமாகத் தொடர்ந்தது. பின்னர் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இதனால் மகாதேவன் மிகவும் கவலையடைந்தான். தன் மனைவியை அழைத்து அறிவுரைக் கூறி திருத்த முயற்சித்தான்.
தன் சுதந்திரப் போக்கினை கட்டுப்படுத்த முயற்சிக்கின்ற கணவனின் செயலைக் கண்டு சங்கமித்திரை ஆத்திர மடைந்தாள், தன் கணவனைப் பிரிந்து பெற்றோரிடம் அடைக்கலம் தேடி வாழத் தொடங்கினாள்.
தங்கள் மகள் தனியாக வந்ததைக் கண்டு அவளது பெற்றோர்கள் பலவகையிலும் காரணத்தைக் கேட்டும் தக்க பதிலைத் தெரிவிக்காமல் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டாள்.
நாட்கள் பல கடந்தன. மகாதேவன் அவளை மீண்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டி எந்த முயற்சியினையும் எடுத்துக் கொள்ளவில்லை. சங்கமித்திரையும் அதனைப் பற்றி கவலையெதுவும் படாமலேயே காலத்தை ஓட்டினாள்.
ஒரு சமயம் அவள் தனது உறவினர்களுடன் பக்கத்து ஊரில் நடைபெறுகின்ற திருவிழாவுக்குச் சென்றாள். அங்கே அவள் தன்னை சந்தித்துப் பேசிய சுந்தரன் என்ற இளைஞனிடம் மனதை பறி கொடுத்தாள்.
திருவிழாவுக்கு சென்று திரும்பிய நாளில் இருந்து தினந்தோறும் சுந்தரனை தனது வீட்டிற்குப் பின்புறமாக இருந்த காட்டிற்கு வரச் சொல்லி அங்கு அவனுடன் உறவு கொண்டாள். இதனை தினமும் செய்து வரலானாள்.
ஒருநாள் சங்கமித்திரையின் கணவனான மகாதேவன் தனது மனைவி மனம் திருந்தியிருப்பாள் என்ற எண்ணத்தோடு அவளை திருப்பி அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தோடு மாமனாரின் இல்லத்திற்கு வந்தான்.
அந்த நேரத்தில் சங்கமித்திரையின் முதலாம் காதலன் ஆன ரூபனும் பல நாட்களுக்குப் பின்னர் சங்கமித்திரையிடம் பேசி உறவாடலாம் என்ற எண்ணத்தோடு வந்தான்.
அவள் வீட்டின் அருகே சற்று தூரத்தில் நின்றபடியே அங்கு நடப்பதை எல்லாம் கவனிக்கத் தொடங்கினான்.
அன்றைய இரவுப் பொழுதில் தன் கணவன் தூங்கிய பின்னர் தனது கள்ளக் காதலன் சுந்தரத்தை காண வேண்டி யாருமே தன்னை அறிந்து கொள்ளாதவாறு வீட்டை விட்டு மெல்ல மெல்ல பின்புற கொல்லைக்கு வந்தாள். பின்னர் அருகில் இருக்கும் காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
சங்கமித்திரை இரவு நேரத்தில் எதற்காக தனியாக காட்டை நோக்கிச் செல்ல வேண்டும்! என்ன நடக்கிறது என்றுதான் பார்த்து விடலாமே என்ற எண்ணத்தோடு அவளைப் பின் தொடர்ந்தான் ரூபன்.
காட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்த சங்கமித்திரையோ தனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற சுந்தரனைக் கண்டு மகிழ்ந்து அவனோடு கூடி உறவாடத் தொடங்கினாள்.
ஆனால் தன்னிடம் மட்டுமே கணவன் அறியாது உறவு வைத்திருக்கின்றாள் என்று நம்பிய ரூபனோ மிகவும் ஏமாற்றம் அடைந்தான். இவள் எனக்கும் துரோகம் செய்து விட்டாளே! இவளை நாம் சும்மா விடக் கூடாது என்று ஆத்திரம் தாங்காமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரனைக் கொன்றுவிட்டு தனக்குத் துரோகம் செய்த சங்கமித்திரையின் மூக்கை அரிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
திடீரென யாருமே எதிர்பாராத நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என்று சங்கமித்திரை மிகவும் திகைப்படைந்தாள். அந்த அதிர்ச்சியில் இருந்து அவளால் மீண்டு வெளியே வரமுடியவில்லை .
இரத்தம் சொட்டுகின்ற மூக்கோடு தனது வீட்டை வெந்தடைந்தாள். தன் மூக்கில் இருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தத்தை அரிவாளில் தடவிவிட்டு கூக்குரல் கொடுத்து பெரும் கூச்சலிட்டாள்.
அவளது கூக்குரலைக் கேட்டு சங்கமித்திரையின் பெற்றோரும் அவளது கணவனும், அக்கம் பக்கத்திலிருந்த மக்களும் ஓடிவந்தனர். அவர்களிடம் எல்லாம் தன் மூக்கினை கணவன்தான் அரிவாளால் அரிந்து விட்டதாக பொய் கூறினாள்.
மகாதேவனோ இதனைக் கண்டு திடுக்கிட்டான், "இவள் என் மீது வீண்பழி சுமத்துகிறாள். இவளது பேச்சினை யாரும் நம்பாதீர்கள்!" என்று எடுத்துரைத்தான்.
ஆனால் சங்கமித்திரையோ எல்லோரும் நம்பும்படியாக நன்றாக நாடகமாடி விட்டாள். மகாதேவன் தான் அவள் மூக்கை அரிந்திருப்பானோ என்ற சந்தேகம் பல பேர்களுக்கு ஏற்பட்டது.
முடிவில் அந்த ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் எல்லோரும் ஒன்று கூடி இந்த வழக்கினை ஆராய்ந்தார்கள். ''அவர்களால் இந்த வழக்கிற்கு சரியானதொரு முடிவு எடுக்க முடியவில்லை . எனவே அவர்கள் அந்த ஊர் மன்னரின் உதவியினை நாடினார்கள்.
விசாரணையின் மூலமாக 'சங்கமித்திரையின் கணவனே அவள் மூக்கை அரிந்து இருக்க வேண்டும்' என்று தீர்மானம் செய்து அவனுக்கு தண்டனை வழங்க உத்தரவிட்டார்.
அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கினை எல்லாம் ஓர் ஓரமாக நின்றபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரூபன். - எந்த பாவமும் செய்யாத நிரபராதியான சங்கமித்திரையின் கணவன் வீணாகத் தண்டிக்கப்படுகின்றானே என அறிந்து மிகவும் வேதனைப்பட்டான். உடனே கூட்டத்தினரிடையே இருந்து வழக்காடு மன்றத்தின் உள்ளே புகுந்தான். நடந்ததை எல்லாம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தான். சுந்தரனைக் கொன்றதும், சங்கமித்திரையின் மூக்கை அரிந்ததும் குற்றமே என்றாலும் அவனது செயலுக்கு ஓர் காரணம் இருந்தாலும், அவனையும் மன்னித்து விடுதலை செய்தார் மன்னர். மகாதேவனையும் விடுதலை செய்து விட்டார்.
ஒழுக்க கேட்டுடன் நடந்து கொண்ட சங்கமித்திரையின் மீது ஊர் மக்கள் எல்லாம் காரி உமிழ்ந்தனர். இப்படியும் ஒரு பெண் இருக்கின்றாளா! இவள் இவ்வாறு பிறந்தது பெண் குலத்திற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்துகிறதே!' என்று புலம்பினர் பலர்."
இவ்வாறாக கதையைக் கூறி முடித்த ஆண்கிளி "இப்படிப்பட்ட பெண்களைப் பற்றி என்னாலும் பல கதைகளையும் சம்பவங்களையும் கூற முடியும், அதனால் ஆண்களை நீ ஒரு போதும் குறை கூறாதே!'' என்றது.
கிளிகள் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று சண்டையிட்டுக் கொண்டதைப் பார்த்த பாடலீசனும், பிரபாவதியும் கிளிகள் இருக்கின்ற கூண்டை அடைந்து இரு கிளிகளையும் சமாதானப்படுத்தி ஒன்றுபட்டு வாழுமாறு கூறினார்கள்.
கதையை கூறி முடித்த வேதாளம், தன்னை சுமந்து செல்கின்ற விக்கிரமாதித்தனைப் பார்த்து, ''மன்னனே! இந்த கிளிகள் கூறியவற்றில் இருந்து நீர் என்ன நினைக்கின்றீர்? உலகில் கெட்டவர்கள் ஆண்களா? பெண்களா? இக்கேள்விக்கான சரியான பதிலைச் சொல்லாவிடின் உமது தலையானது வெடித்து சிதறி விடும்" என்று கூறி எச்சரித்தது.
அமைதியோடு மௌனத்துடன் இருந்த விக்கிரமாதித்தன் மெல்ல வாய் திறந்தான். "வேதாளமே! மனிதனாகப் பிறந்தோர் வாருமே முழுமையாக நல்லவர்கள் இல்லை. ஆனால் மனித மாபெரும்பாலும் தவறு செய்யாமலேயே வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்கள். சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் சில களில் அவர்களை தவறு செய்யத் தூண்டுகிறது. பினால் தவறு செய்பவர்கள் ஆண்களாக இருந்தாலும், பாக இருந்தாலும் சந்தர்ப்பமும், சூழ்நிலையுமே ளை தவறானவர்களாக மாற்றுகின்றன. அவர்களின் தவறுகளை தவிர்க்க இயலாமல் போகிறது. இச் செயல் ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே பொருந்தும்படியாக அமைகின்றன' என கூறினான்.
பதில் கூறிய காரணத்தால் விக்கிரமாதித்தனின் மௌனம் கலையவே உடனே வேதாளமானது கட்டை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொண்டது.
வேதாளத்தின் கட்டினை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் அதனை சுமக்கத் தொடங்கினான் விக்கிரமாதித்தன்.
"வேந்தனே! உன்னுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும், அஞ்சா நெஞ்சமும் மிகவும் மகத்தானவை. இன்னும் ஒரு கதையை உன்னிடம் கூறுகிறேன் கேள்" என்று மீண்டும் கதையைத் தொடர்ந்தது வேதாளம்.