what is ebook - TamileBooks.org

மின்புத்தகம் என்றால் என்ன ?

நேரடியாக சொன்னால், மின் புத்தகம் (eBook) என்பது ஒரு மின்சாதன கருவிகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் எனலாம்.  ஆனால் உண்மையான பதில் சரியாக இதுவல்ல.

ஒரு புத்தகம் மின் புத்தகம் என்று கருதுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது பொதுவாக ஒரு PDF புத்தகத்தை மின் புத்தகம் என நேரடியாக கருதமுடியாது அதற்குக் காரணம் ஒரு PDF புத்தகம் சிறிய கருவிகள் (கைபேசி) படிக்கும்போதும் பெரிய கருவிகளில் படிக்கும் பொழுதும் அந்த திரையின் அளவிற்கு தகுந்தார் போன்று  எழுத்துக்கள், வாக்கியங்களின் வடிவங்கள் வளைந்து கொடுக்காதது.

மின்புத்தகம் என்றால் என்ன

மேலும் அந்த புத்தகத்தின் பின்னணி வண்ணம், எழுத்துக்களின் வண்ணம் போன்றவை மாற்ற முடியாது. (இரவு மற்றும் பகலில் படிப்பதற்கு ஏதுவாக)

 ஒரு மின் புத்தகம் நம் கைகளில் உள்ள கைப்பேசி அல்லது கணினி போன்ற மின்சாதன  கருவிகளில் வசதியாக அந்த கருவியின்  திரை அளவிற்குத் தகுந்தார் போன்று எழுத்துக்கள் மற்றும் வாக்கியங்கள் வளைந்து கொடுக்க வேண்டும், மேலும் அதன் வண்ணம் நம் தேவைக்கு ஏற்றார் போன்று மாற்றிக்கொள்ள வசதியாக இருக்க வேண்டும்.

 இது பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ள ஒரு PDF புத்தகத்தை எடுத்து உங்களுடைய கைப்பேசியில் படிக்கும் பொழுது நீங்கள் அறிந்துகொள்வீர்கள் அது படிப்பதற்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்று.

 சரி பிறகு எதற்காக இந்த PDF வடிவ மின் புத்தகம் என்பதை பற்றி விரிவாக பார்க்க.

மின் புத்தகங்களின் வகைகள்

மின் புத்தகங்கள் பல்வேறுபட்ட வகைகளில் (Formats) கிடைக்கின்றன ஒவ்வொரு வகை மின் புத்தகங்களும் ஒரு சில சாதகங்களும் ஒரு சில பாதகங்களும் உள்ளன வெவ்வேறு தேவைகளைப் பொறுத்து கோப்புகளின் வகைகள் வேறுபடுகின்றது.

ஒரு சில புத்தகங்களை ஒரு சில வகை கருவிகளில் மட்டும்தான் படிக்க முடியாது. அல்லது சில வகை புத்தகங்கள் ஒருசில கருவிகளில் படிக்க முடியாது. (இவற்றுக்குக் காரணம் உள்ளது)

நீங்கள் நினைக்கலாம் எதற்காக இத்தனை வகைப்பட்ட மின்புத்தகங்கள் என்று.

பொதுவாக நாம் பயன்படுத்தும் மின் புத்தக வகைகள்:

(Types of eBooks Formats)

  • PDF (.pdf)
  • ePub (.epub)
  • Mobi (.mobi)
  • Azw3 (.azw3)
  • Txt (.txt)

PDF (Portable Document Format)

PDF புத்தகங்கள் தொழில்நுட்ப ரீதியாக உண்மையான மின்புத்தகம் அல்ல, ஆனால் இது பெரும்பாலான மக்கள் அறிந்த மின் புத்தக வடிவமாகும். Adobe இந்த வகை கோப்பை உருவாக்கியது. கிட்டதட்ட அனைவருமே இந்த வகை புத்தகங்களைப் பார்த்திருப்போம். இந்த PDF கோப்பு அதன் உண்மையான வடிவத்தை அப்படியே தக்க வைத்திருக்கும். (PDFs are known for their ease of use and ability to hold custom layouts).

எனவே சில முக்கியமான புத்தகங்கள் அல்லது பக்கங்கள் இந்த PDF வடிவில் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணமாக: Resume, சான்றிதழ்கள், வீட்டு வடிவமைப்புகள் (House Design) போன்றவை PDF வடிவிலேய பயன்படுத்தப்படுகிறது.

ePub: Electronic Publication

இதுதான் உலகில் மிகவும் பிரபலமான மின்னூல் வடிவமாகும். மேலும் கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் பெரும்பாலான ஈ-ரீடர்கள் (Kindle தவிர) உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் படிக்க முடியும்.

ePub பற்றி மேலும் படிக்க…

MOBI (.mobi) : Mobipocket eBook 

இந்த வகை மின்புத்தக வடிவமைப்பானது முதன் முதலில் அமேசான் கிண்டில் கருவியை 2007-ல் வெளியிட்டபோது பயன்படுத்தியது. பிறகு 2011-ல் அமேசான் தனது பங்களிப்பை mobi-கோப்புகளுக்கு நிறுத்திக்கொண்டது. அதற்கு மாற்றாகதான் mobi கோப்புகளில் சில மாறுதல்களை செய்து, அமேசான் தனது புதிய கிண்டில் கருவிகளில் 2011 -க்கு பிறகு பயன்படுத்தி வருகின்றது.

AZW (.azw)  

AZW கோப்புகளை அமேசான் (amazon) அதன் கின்டெல் ஈ ரீடர் (Kindle E-Reader) -களுக்காக உருவாக்கியது. இந்த கோப்புகள் புக்மார்க்குகள், சிறுகுறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் போன்ற சிக்கலான உள்ளடக்கத்தை சேமிக்க முடியும்.

(mobi வகை கோப்புகளில் இந்த சிறப்பம்சம் கிடையாது. எனவே mobi-கக்கு மாற்றாக மேலும் சில பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து அமேசான் இந்த வகை கோப்புகளை பயன்படுத்த தொடங்கியது)

ஆனால் இந்த வகை கோப்புகளை கின்டெல் அல்லது கின்டெல் பயன்பாடுகளைக் (Kindle App for Android & iPhone) கொண்ட சாதனங்களுக்கு மட்டுமே படிக்க பயன்படும்.

AZW3 (.azw3) அல்லது KF8

தற்போது சந்தைகளில் விற்கப்படும் அமேசான் கருவிகளில் இந்த வகை கோப்புகள் பயன்படுகின்றது. இதுதான் அமெசனின் புதிய மின் நூல் கோப்பு வடிவம் ஆகும்.

காரணம் HTML5 மற்றும் CSS3 -களை azw3 வகை கோப்புகள்  அனுமதிக்கின்றன. AZW -களில் இல்லாத மேலும் சில கூடுதல் சிறப்பம்சங்களும் AZW3 -ல் உண்டு.

நான்காம் தலைமுறை கிண்டில் கருவிகளில் இருந்த அனைத்து கிண்டில் கருவிகளிலும் மற்றும் Kindle Fire கருவிகளிலும்  இந்த வகை கோப்புகள் பயன்படுத்த மூடுயும். (It is supported by 4 th-gen Kindle devices running firmware version 4.1.0 or later and the Kindle Fire device.)

குறிப்பு: AZW, AZW3 கோப்புகளை கிண்டில் தவிர பிற வகை கருவிகளில் (e-Readers) பயன்படுத்த முடியாது. (ஆனால் Kindle App for iPhone மற்றும்Kindle App android -களில் பயன்படுத்தி படிக்க முடியும்.)

அதே போல ePub வகை கோப்புகளை கிண்டில் கருவிகளில் படிக்க முடியாது.

மின் புத்தகங்களின் வகைகள்

TXT (.txt) format

இந்த வகை கோப்புகளில் படங்கள் மற்றும் இதர வடிவங்களை (Graphs) பயன்படுத்த முடியாது. மிகவும் சொற்ப வடிவமைப்பு அம்சங்களை மட்டுமே இவற்றில் பயன்படுத்த முடியும்.

இந்த வகை கோப்புகளில் நேரடியாக மின் புத்தகமாக வெளியிட முடியாது. காரணம், டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (DRM) பாதுகாப்பு  அம்சம் இல்லாததுதான்.

மேலும் படிக்க …

மின் புத்தகங்கள் படிக்க சிறந்த கருவி எது? 

 

 

Related Post

Kindle Paperwhite (10th Gen) பற்றி தெரிந்துகொள்வோம்

Posted by - September 7, 2020 0
https://images-na.ssl-images-amazon.com/images/I/A12gT5ZhhzS.mp4 கிண்டில் பேப்பர் ஒயிட் (Kindle PaperWhite) சிறப்பம்சங்கள் எடை & அளவு இதற்கு முன்பு விற்பனைக்கு வந்தன மற்ற  கிண்டில்  பேப்பர் ஒயிட்  கருவிகளை விட  இது…

புத்தகங்களைப் படிப்பதன் 10 நன்மைகள்

Posted by - September 10, 2020 0
புத்தகங்களைப் படிப்பதன் நன்மைகள் என்ன? கடைசியாக நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்தது அல்லது கணிசமான பத்திரிகை கட்டுரைகள் படித்தது எப்போது? தவறாமல் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாத எண்ணற்ற…

சங்க இலக்கிய நூல்கள் பட்டியல்

Posted by - September 24, 2020 0
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட…

Fiction” Vs Non-Fiction புத்தகங்கள்

Posted by - September 10, 2020 0
Fiction & Non-Fiction ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்? Fiction “புனைகதை” (Fiction) என்பது கற்பனையிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கியங்களைக் குறிக்கிறது. உதாரணமாக. மர்மங்கள், அறிவியல் புனைகதை, காதல், கற்பனை,…

ஏன் eBook Reader-ஐ வாங்க வேண்டும் ?

Posted by - August 20, 2020 0
ஏன் eBook Reader-களை பயன்படுத்த வேண்டும் ? மின்புத்தகம் என்றால் என்ன என்பது பற்றியும் பின் புத்தக கோப்புகளில் உள்ள வகைபடுகள் (PDF, ePub, Mobi, AZW,…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்