ஏன் eBook Reader-களை பயன்படுத்த வேண்டும் ?
மின்புத்தகம் என்றால் என்ன என்பது பற்றியும் பின் புத்தக கோப்புகளில் உள்ள வகைபடுகள் (PDF, ePub, Mobi, AZW, AZW3, Mobi) பற்றியும் விரிவாக படிக்க இந்த இணைப்பை பார்க்கவும்.
இந்த பதிவில் மின் புத்தகங்களை மின்புத்தகம் படிக்கும் கருவிகளை கொண்டு படிப்பதினால் என்ன பயன்கள் என பார்க்கலாம்.
சுற்று சூழலை பாதுகாக்க
இந்த உலகில் புத்தகம் அச்சிடும் தொழில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 16 மில்லியன் டன் காகிதத்தை பயன்படுத்துகிறது; அதாவது 32 மில்லியன் மரங்கள் ஒரு ஆண்டுக்கு.
இதை கட்டுபடுத்த விரும்பினால் மின்புத்தக்கத்தை பயன்படுத்த துவங்கலாம்.
படிப்பதை எளிதாக்க
- கிண்டில் (amazon Kindle) கருவி மிகவும் எடை குறைந்த சிறிய கருவி, இதை அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்ல முடியும்.
- மேலும் ஒரு கிண்டில் கருவியில் ஒரு நூலகத்தையே வைத்துக்கொள்ள முடியும். எனவே நீங்கள் பயணம் செய்யும்போதும், வேலை செய்யும் இடங்களுக்கும் எளிதில் எடுத்து செல்லலாம்.
- தற்போது இவை நீர் புகாத வகையில் செய்யபடுகின்றது, எனவே கவலையேதும் இல்லை , தொல்லை இனி இல்லை.. 🙂
- அதிகமாக சார்ஜ் தாங்க வல்லது. அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை படிக்க முடியும். *
- குறிப்புகளை அடிக்கோடிட்டு பயன்படுத்த முடியும், உங்கள் குறிப்புகளை ஏற்றுமதி (பகிர) செய்யலாம்.
- இலவச புத்தகங்கள்: இணையத்தில் 1000-கணக்கான இலவச மின்னூல்கள் கிடக்கின்றன, இந்த மின்நூல் படிக்கும் கருவிகளின் மூலம் இவற்றை எளிதாக படிக்க முடியும். பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்ய முடியும்.
E-Readers Vs. Tablets
The skinny: E-Readers பொதுவாக Tablet-ஐ விட சிறியதாகவும், இலகுவாகவும் இருக்கின்றது, எனவே அவை வைத்திருக்கும் போது உங்கள் மணிக்கட்டில் அவை சிறியதாகவும் எளிதாகவும் இருக்கும்.
Water Proof: புதிய மின் புத்தகம் படிக்கும் கருவிகள் அணைதகும் நீர் புகாத வடிவில் வருவதால், மழை நேரங்கள், கடற்கரை ஓரம், குளிக்கும் இடம் (Bath Tub) என எங்கு வேண்டுமானாலும் கவலை இல்லாமல் எடுத்த செல்ல முடியும்.
Battery: ஒரு Tablet கருவி அதிகபட்சமாக 7 முதல் 10 மணி நேரங்களுக்குள் மின்சாரம் தீர்ந்துவிடும். ஆனால ஒரு E-Book Reader-ல் உள்ள Battery-ஆனது தினமும் ஒரு மணி நேரம் என படித்தால் ஒரு மாதத்திற்கும் மேல் வரும்.
Non-Glare Screen: மின் புத்தகம் படிக்கும் கருவிகளின் திரை பிரகாசமான சூரிய ஒளியின் வெளிச்சத்திலும் எளிமையாக படிக்க முடியும். ஆனால் ஒரு Tablet அல்லது Mobile கருவிகளில் அப்படி படிக்க முடியாது.
கண் பாதுகாப்பு
E-Readers திரைகள் கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பல மணி நேரம் படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரைகளிலின் பின் இருந்து வெளிச்சம் நாம் கண்ணை நோக்கி பாயது.
பல E-Book Reader-களில் LED Backlight கிடையாது அவை சாதாரண புத்தகம் போன்றவையே, சூரியன் அல்லது பிற வெளிச்சத்தின் துணையுடன் மட்டும்தான் படிக்க முடியும்.
அல்லது சில EBook Reader-களில் LED Backlight இருந்தாலும் அவற்றை முழுவது பகல் நேரங்களில் அணைத்துவிட்டு படிக்க முடியும். இரவு நேரத்தில் படிப்பதற்கு மட்டுமே அவை தேவைபடும்.
(மேலும் Kindle EReader-களில் பயன்படுதகட்டும் Backlight தொழில்நுட்பம் Tablet, Mobile பயன்படுத்தும் திரை தொழில் நுட்பத்தை விட வேறுபட்டது, எனவே இதன் வெளிச்சம் கண்ணை அவ்வளவாக பாதிக்காது.)
E-Reader நான் வாங்க வேண்டுமா?
- நீங்கள், புத்தகம் அதிகம் படிக்க விருப்பம் உடையவர்களா ?
- மாதம் 3, 4 புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவரா ?
- உங்கள் மனைவி பிள்ளைகளும் புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்களா ?
- கைபேசி அல்லது Tablet-ல் புத்தகம் படிப்பதால் கண் எரிச்சல் அல்லது தலைவலி அல்லது சோர்வு அல்லது இறவு தூங்கும்போது கண்களில் சிறிதாக தண்ணீர் துளிகள் கசிக்கின்றதா?
- ஆங்கிலம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அல்லது படிக்க ஆசை அல்லது, அப்படி படித்து ஆங்கில அறிவை பெருக்க நினைக்கின்றீர்களா?
- உங்களால் படிப்பிற்கு ஒரு 7000 ரூபாய் ஒதுக்க முடியுமா ?
அப்படியென்றால் கட்டாயம் நீங்கள் E-Book Reader (Amazon Kindle Reader) கருவி வாங்க வேண்டும்.
Buy Kindle Reader From Amazon India.
மேலும் தகவல்கள் பார்க்க
- ஏத்தனை வகை eBook Reader-கள் உள்ளன? ஏன் Amazon kindle வாங்க வேண்டும்?