Sale!

ஓஷோ புத்தகங்கள்

(2 customer reviews)

0.00

ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்

  • ஓஷோ புத்தகங்கள் PDF Free Download
  • ஓஷோ புத்தகங்கள் ePub & Mobi (for amazon Kindle Reader)

*ePub & Mobi Books available for “PRO Members Only.” 

[wpsm_button color=”btncolor” size=”medium” link=”https://www.tamilebooks.org/download/osho-books-in-tamil/” icon=”none” class=””]FREE FOR PRO MEMBERS ONLY[/wpsm_button]

Description

ஓஷோ புத்தகங்கள் PDF Read Online

ஓஷோ புத்தகங்கள் PDF Free Download

ஓஷோ தமிழ் புத்தகங்கள் (osho books in tamil) PDF வடிவில் இலவசமாக இங்கு பதிவிறக்கவும். மேலும் இந்த புத்தகங்கள் epub, Mobi வடிவிலும் இங்கு கிடைக்கின்றது.

இந்த மின்புத்தகத்தில் நீங்கள் படிக்க இருக்கும் ஓஷோ கதைகள் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Osho Books in Tamil

  1. மனதின் இடைவிடா தீர்மானங்கள்
  2. போதிதர்மரின் வழிகள்
  3. போதிதர்மரின் வழிகள் – தொடர்ச்சி
  4. மரணத்தை மறக்காதே
  5. செயலும் அதைக்கடந்த நிலையும்
  6. அங்குலிமால்
  7. முல்லா நசுரூதீன்
  8. உறங்கும் மனிதன்
  9. மனதின் கதை
  10. வேரும் இறக்கையும்
  11. அடக்கி வைத்தலின் விளைவு
  12. மனிதனின் முடிவுகள்
  13. ஆன்மீக வியாபாரம்
  14. குரு செய்யும் வேலை
  15. ஆன்மீக வியாபாரம்
  16. திறன் பிறந்தது
  17. இரவு அரசன்
  18. ஆன்மீகத்தேடல்
  19. குரு மலர்தல்
  20. தன்ணுணர்வின் கதை
  21. ஆணவத்தின் ஏமாற்றம்
  22. வாழ்வின் உண்மை
  23. இணைப்புணர்வின் கதை
  24. இருப்பின் புனிதம்
  25. ஞானத்தின் பக்குவம்
  26. அறிவுரைக்கான தகுதி
  27. பந்தமின்றி இருத்தல்
  28. புத்தரின் புரிதல்
  29. காலிக் கோப்பை
  30. கூட்டத்தின் பலம்
  31. நீ யார் ?
  32. தேடல்
  33. யார் பிராமணன்
  34. கூட்ட மனப்பான்மை
  35. சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்
  36. பிடிப்பின் வலை
  37. தீட்சை
  38. மனதின் வழி
  39. கடவுளுக்கான சான்று
  40. மோஜுத் விவரிக்கமுடியாத வாழ்க்கையை கொண்ட மனிதன்
  41. பிரபஞ்ச தன்னுணர்வு
  42. சரணாகதியின் கதை
  43. சாட்சிபாவம்

ஒஷோவின் மேலும் சில புத்தகங்கள்

  • வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
  • மறைந்திருக்கும் உண்மைகள்

ஓஷோ (ரஜ்னீஷ் சந்திர மோகன்)

ஓஷோ (Osho) மத்திய பிரதேசத்தில் (குச்வாடா என்ற சிற்றூரில்) 1931 டிசம்பர் 11 இல் பிறந்தார்.  ஓஷோ என்ற சொல் ‘ஓஷியானிக்‘ என்ற சொல்லிருந்து தோன்றியதாக ஓஷோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஓஷியானிக் என்பதன் பொருள் கடலில் கரைந்து போவது ஆகும். அதாவது அனுபவத்தை குறிக்கிறது.
21 நாடுகள், ஓஷோ நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன, 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா (பம்பாய்க்கு) திரும்ப வந்துசேர்கிறார்.
ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஓஷோ தன்னுடைய 21-வது வயதில் (மார்ச் 21 – 1953) ஞானம் அடைந்தார். (கெளதமபுத்தர், கபீர், இரமணர் போன்றோர் இப்படி ஞானம் அடைந்தவர்களில் சிலர்.)
ஓஷோ அவர்கள் அமெரிக்காவின் ஓரேகானில் 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஆசிரமத்தை அமைத்தார்.
ஓஷோ பற்றிய மேலும் தகவல்கள் படிக்க: ஓஷோ விக்கிப்பீடியா
ஒஷோவின் விலையுயர்ந்த கடிகாரங்கள் ரோல்ஸ் ராய் கார்கள், டிசைனர் ஆடைகள் காரணமாக அவர் எப்போதும் விவாதங்களின் மையமாகவே திகழ்ந்தார்.

ஓஷோ மரணம் தொடர்பான சர்ச்சை

இறப்பு:  19 ஜனவரி 1990 (வயது 58)

[wpsm_quote author=”மருத்துவர் கோகுல்” float=”left” width=”100%”]மாரடைப்பினால் ஓஷோ மரணித்ததாக இறப்பு சான்றிதழில் எழுதுமாறு சீடர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். [/wpsm_quote]

எந்தவொரு துறவியின் மரணத்தையும் விழாவைப்போல் கொண்டாடும் வழக்கத்தை கொண்டது ஓஷோவின் ஆசிரமம். ஆனால், ஓஷோ இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அவரது இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டதும், அவருடைய இறப்பின் கொண்டாட்டமும் சுருக்கமாக இருந்ததும் அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்தது.

[wpsm_quote author=”ஓஷோ” float=”left” width=”100%”]பதிப்புரிமை, காப்புரிமை போன்றவை பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும், கருத்துகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் அல்ல[/wpsm_quote]

 

1. மனதின் இடைவிடா தீர்மானங்கள்

நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில்  ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர்.

அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான்.

இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை.

அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ” என்றான்.

மூன்றாவது நபர், “ உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல “ என்று கூறினான். அவன், “ எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் “ எனக் கூறினான்.

ஆனால் மற்ற இருவரும், “ ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். “ அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது “ என்று கூறினார்கள்.

அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள்.

மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை  அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி……… அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள்.

ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான்.

அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி  –  நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது — ஏனெனில்….  “ஓஷோவின் இந்த புத்தகங்களை முழுவதும் படிக்க பதிவிறக்கவும்”. 

ஓஷோ புத்தகங்கள் தமிழில்

ஓஷோ எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் பிறர் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர். இதுபோன்ற இவரது  சொற்பொழிவுகள் பல சீடர்களால் எழுதப்பட்டு நூற்களாக வெளிவரப்பெற்றன.

2 reviews for ஓஷோ புத்தகங்கள்

  1. Sivaranhani

    Very useful

  2. srinivasan

    nice

Add a review

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன