சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும்

(1 customer review)

சிறுபஞ்சமூலம் eBook

 • சிறுபஞ்சமூலம் (உரை: குமாரசுவாமி பிள்ளை – 1909) PDF Download
 • சிறுபஞ்சமூலம் – ஒரு சமுகவியல் பார்வை PDF Download

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்ற வார்த்தைக்கு ஐந்துசிறிய வேர்கள் என்று பொருள். சிறுபஞ்ச மூலம் நூலில் கூறப்படும் அந்த 5 வேர்கள் இதோ…

 1. சிறுவழுதுணைவேர்,
 2. நெருஞ்சி வேர்,
 3. சிறுமல்லி வேர்,
 4. பெருமல்லிவேர்,
 5. கண்டங்கத்தரி வேர்

இதை பற்றி கூறும் நூற்பா:

சிறிய வழுதுணைவேர், சின்னெருஞ்சி மூலம்,
சிறுமலி, கண்டங்கத்தரிவேர், நறிய
பெருமலி, ஓர் ஐந்தும் பேசு பல் நோய் தீர்க்கும்
அரிய சிறுபஞ்சமூலம்

(495) என்பது பதார்த்த குண சிந்தாமணி.
பொருட்டொகைநிகண்டு,

சிறுபஞ்சமூலம் கண்டங்கத்தரி,
சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி,
நெருஞ்சி இவற்றின் வேராகும்மே.

(867)

என்று உரைக்கின்றது.

சிறுபஞ்சமூலம் PDF

சிறுபஞ்சமூலம் PDF வடிவில் பதிவிறக்க இந்த இணைப்பை பார்க்கவும்.

சிறுபஞ்சமூலம் பெயர் காரணம்

 1. வில்வம்
 2. பெருங் குமிழ்
 3. தழுதாழை
 4. பாதிரி
 5. வாகை

இதன் வேர்களைப்பெரும் பஞ்சமூலம் என மேற்குறித்த இரண்டு நூல்களும் குறிபிட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட வில்வம் முதல் வாகை வரையுள்ள இவைகள் வேர்களிலிருந்து தயாரிக்கப் படும் மருந்துகள் ஆகும்.

சிறுபஞ்சமூலம் எனும் மருந்து எவ்வாறு உடல்நலம் பேணுமொ அதைபோல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து கருத்துக்களும் உயிர் நலம் பேணும்.

இந்த காரணம் கருதியே இந்த நூலுக்கு சிறுபஞ்சமூலம் என பெயர் வழங்கப் பெற்றது.

சிறுபஞ்சமூலம் ஆசிரியர்

காரியாசான் என்பவர் சிறுபஞ்சமூலம் நூலை இயற்றினார். இவரது இயற்பெயர் காரி என்பதே ஆகும், ஆசான்  என்பது இவர் செய்த தொழிலை குறிக்க பயன்படுத்திய பெயராக இருக்கலாம் என கருதப்படுகிறது.  உதாரணமாக : மதுரை வேளாசான், முக்கல் ஆசான்   என்ற புலவர்களின் பெயர்களும் இவ்வாறு வழங்கப்படுகிறது.

பாயிரச் செய்யுள் இவரை மாக் காரியாசான் என்று ( ‘மா’ என்ற அடைமொழியுடன்) சிறப்பிக்கின்றது.

சிறுபஞ்ச மூலம் நூலின் காப்புச்செய்யுளால் காரியாசான் சைன சமயத்தார் என்பதை  அறியமுடிகின்றது.

மேலும், சிறுபஞ்ச மூலம்  நூலின்  உள்ளே சைனசமயப் பெண்பாலரது ஒழுக்கமாகிய “குராக் குறுங்கானம்போதலையும்” (90), ‘கொன்றான் கொலையை உடன்பட்டான்'(68) என்ற பாடலில் ஐந்து பெரிய விரதங்களுள் ஒன்றாகிய அஹிம்ஸையின் உட்பாகுபாடுகளையும் அவற்றின் மறுதலையால் குறித்துள்ளார்.

காரியாசான், கணிமேதாவியார்

காரியாசான் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது இந்த நூலின் பாயிரச்செய்யுளிலிருந்து  தெரியவருகிறது. (மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் எனப்படுவரே இந்த மாக்காயனார் ஆவார்).

திணைமாலை நூற்றைம்பது  மற்றும் ஏலாதி  ஆகிய நூல்களை எழுதிய ஆசிரியரான கணிமேதாவியாரும் இந்த மாக்காயனாரின் மாணவர் ஆவார். எனவே இதன் மூலம் கணித மேதாவியார்  மற்றும் காரியாசான்  ஒரே குருவிடம் பாடம் பயின்றவர்கள் அவர்,  அதாவது ஒருசாலை மாணாக்கர்கள்.

கவிஞர்களுக்கே உரிய இயல்புகளை,

செந்தமிழ் தேற்றான் கவி செயலும்
நாவகம் மேய் நாடின் நகை (10)

எனவும்,

கேட்பவன் கேடில் பெரும் புலவன் பாட்டு அவன்
சிந்தையான் ஆகும் சிறத்தல் (31)

என்றும் , குறித்துள்ளார். எனவே, இவர் கவிதை உணர்ச்சியில் சிறந்தவராய், செந்தமிழில் தேர்ச்சி பெற்றவராய் விளங்கினார் என்று உணரலாகும்.

சிறுபஞ்சமூலம் |காரியாசான்

சோதிட நூல் கருத்து: ‘நாள்கூட்டம் மூழ்த்தம்'(42)என்ற பாடல் மருத்துவ நூல் கருத்து: ‘சிக்கர்,சிதடர்’ (74) என்ற பாடல்.

‘சத்தம், மெய்ஞ்ஞானம், தருக்கம், சமையமே, வித்தகர் கண்ட வீடு, உள்ளிட்டு அறிவான்தலையாய சிட்டன்’ என்றும் (91),

‘கணிதம், யாழ், சாந்து, எழுதல், இலை நறுக்கு, இவற்றை அறிவான் இடையாயசிட்டன்’ என்றும் (92),

இவ்வாறு இந்த நூல் ஆசிரியர் கூறுவதன்மூலம் சோதிடம், மருத்துவம் போன்ற பிறகலைகளையும் காரியாசான் நன்கு உணர்ந்தவர் என கருதலாம்.

சிறுபஞ்ச மூலம்

4 வரிகளிலே 5 பொருள்களை அமைத்துப்பாடும் திறம்  சிறுபஞ்சமூலம் நூலின் சிறப்பு. ஆனால் திரிகடுகம் பாடல்கள் போன்ற இந்த நூற்செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் தெளிவுபட விளக்கமாக அமையவில்லை.

“ஐந்து” என்னும் எண்ணுத்தொகைக்குறிப்பு 15 இடங்களிலே தான் உள்ளது (22,39,40,42,43,47,51,53,57,60,63,68,83,91,92). அதுவும், திரிகடுகத்தில் இருப்பது போன்று ஒரு முறையைப் பின்பற்றி அமையுமாறு இல்லை.

திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, முதலிய முந்தைய நூல்களில் பொதிந்துள்ள கருத்துகள் பலவற்றை இந்த நூலில் காணலாம்.

திரிகடுகத்தின் போக்கை குறிக்கும் ‘கல்லாதான்தான் காணும் நுட்பமும்’ (3) என்னும் பாடல், இன்னா நாற்பதின் அமைப்பை ஒத்துள்ள ‘இடர் இன்னா நட்டார்கண்'(12) என்னும் பாடல் ஆகியவை இந்த நூலில் காணப்படுகின்றது.

கடவுள் வாழ்த்து நீங்கலாக சிறுபஞ்சமூலம் நூலில் 102 பாடல்கள் உள்ளன.

85-ஆம் பாடல் தொடங்கி, 89-ஆம்பாடல் வரை உள்ள 5  பாடல்கள் பிரதிகளில் காணப்பெறவில்லை.

ஆனால், புறத்திரட்டில் சிறுபஞ்சமூல நூலைச்சார்ந்த 3 செய்யுட்கள் காணப்படுகின்றன. இவை விடுபட்ட இப் பகுதியைச் சார்ந்தனவாக இருக்கலாம் என கருட்கப்படுகின்றது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறுபஞ்சமூல பதிப்பு அந்தப் (புறத்திரட்டில்) பாடல்களை 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்களாகச்  அமைத்துள்ளது.

இதை சரிவர உறுதி செய்வதற்கு உரிய தக்க ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், இப் பதிப்பில் இவை நூலின்  இறுதியில், தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

‘ஒத்த ஒழுக்கம்‘ எனத் தொடங்கும் (பழைய உரையாசிரியரால் உரை வகுக்கப்பெற்ற ) பாயிரச்செய்யுளோடு, ‘மல் இவர் தோள் மாக்காயன்‘ என்னும் ஒரு பாயிரச் செய்யுளும் ஏடுகளில் காண்கிறது. இந்த 2-ம் நூல் இறுதியில் சிறப்புப் பாயிரம் என்னும் பெயரில் வழங்கப்படுகின்றது.

சிறுபஞ்சமூலம் உரை

சிறுபஞ்சமூல நூலுக்குப் பழைய உரை உள்ளது. இந்த நூலுக்குப் பழைய உரை ஒரு வேலை கிடைக்காமல் போயிருந்தால் அல்லது எழுதப்படாமல் விட்டிருந்தால் இப்பொழுது இந்த சிறுபஞ்சமூல நூலின் ஒரு ஒரு பாடல்களிலும் உள்ள ஐந்து கருத்துக்களையும் தெளிவாக கண்டறிந்து இருப்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்து இருக்கும்.

மேலும் இந்த பழைய உரையானது பழைய மரபுகளை அறிந்து சிறப்பாக அமைத்த ஒன்றாகும். 

சிறுபஞ்சமூலம் PDF வடிவில்

1909-ல் எழுதிய குமாரசுவாமி பிள்ளை உரையுடன் சிறுபஞ்சமூலம் PDF வடிவில் இங்கு பதிவிறக்கவும். விரைவில் eBook வடிவில் சிறுபஞ்சமூலம் இந்த பக்கத்தில் வெளியிடப்படும்.

Additional information

Authors Name

,

1 review for சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும்

 1. J. THARMINY

  University

Add a review

Your email address will not be published. Required fields are marked *