கிண்டில் பேப்பர் ஒயிட் (Kindle PaperWhite) சிறப்பம்சங்கள்

எடை & அளவு

இதற்கு முன்பு விற்பனைக்கு வந்தன மற்ற  கிண்டில்  பேப்பர் ஒயிட்  கருவிகளை விட  இது மிகவும் எடை குறைவாகவும், மெல்லியதாகவும் அமைந்துள்ளது. 

Kindle PaperWhite 10th Gen Tamil

திரை

 இதனுடைய  திரை ஒரு சதுர அங்குலத்திற்கு  300 பிக்சல்கள் (300PPI) கொண்டுள்ளது,  எனவே மிகவும்   தெளிவாகவும்,  நேர்த்தியாகவும் படிக்க ஏதுவாக இருக்கும்.   குறிப்பாக தமிழ் எழுத்துக்கள் படிக்க மிகத் தெளிவாக இருக்கும். 

இந்த அளவிற்கு துள்ளியமான திரையின் காரணமாக இதன் வழியாக புத்தகம் படிப்பதற்கு  உண்மையான ஒரு பேப்பரில் படிப்பது போன்ற  அனுபவம் கிடைக்கும். 

Kindle PaperWhite 10th Gen Screen Vs iPad Tamil

மேலும் இதனுடைய திரை சூரிய வெளிச்சத்திலும்  மற்ற கைபேசி மற்றும் டேப்லட்களை விட  மிக மிக தெளிவாக படிக்க இயலும். 

மேலும் முந்தைய  சில கிண்டில் கருவிகளில்  Built-in LED Light  வசதி இல்லாமல் இருக்கும்,  ஆனால் இந்த கருவிகளில் அந்த வசதி உள்ளது எனவே இரவு நேரங்களில் வேறு எந்த விளக்கு வெளிச்சத்தையும் எதிர்பார்க்காமல் படிக்க இயலும். 

Storage

இந்த 10th Gen கிண்டில்  கருவியின்  சேமிப்பு அளவு 8GB / 32GB என இரண்டு அளவுகளில் கிடைக்கின்றது.  எனவே இதன் மூலம் ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை இந்த  கருவியில் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும். 

WaterProof

Kindle PaperWhite 10th Gen WaterProof

இதனுடைய மேலும் ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இது நீர் புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இனி நீங்கள் குளிக்கும் போதும் உங்கள் பாத்டப், கடற்கரை,  நீச்சல் குளம்  என்று  கவலை இல்லாமல் இந்த கருவியை கொண்டு  விருப்பம்போல் படிக்க இயலும். 

Battery 

ஒருமுறை இந்த கருவியை சார்ஜ் (Charge) செய்தால்,  ஒரு சில நாட்கள் அல்ல  குறையாமல் சில வாரங்கள் வரை உங்களால்   சார்ஜ் (Charge) பற்றிய கவலையின்றி படிக்க இயலும். 

Wi-Fi (Vs) Wi-Fi + 4G

இந்த கருவியில் 2 வாய்ப்புகள் (Options) உண்டு

  1.  வை-பை மட்டும் (Only Wi-Fi)
  2.  வை-பை மற்றும் 4ஜி (Wi-Fi + Free 4G)

உங்களுக்கும் Wi-Fi மட்டும் உள்ள கிண்டில் வேண்டுமா அல்லது அதனுடன் 4G இணைப்பு கொண்ட கிண்டல் கருவி வேண்டுமா என்பதை முடிவு செய்வது மிகவும் எளிது. 

உங்களிடம் அதிக பணம் இருந்தால் 4ஜி இணைப்பு கொண்ட கிண்டில் கருவியை வாங்கலாம்.  இல்லையென்றால் வை-பை மட்டும் (Wi-Fi Only) கொண்ட கருவியை வாங்குவது மிக மிக நல்லது.

10th Gen கிண்டில் பேப்பர் ஒயிட் விலை

Wi-Fi மட்டும் கொண்ட கிண்டில் கருவியானது அமேசான் இந்திய தளத்தில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  மாறாக 4G இணைப்பு கொண்ட கிண்டல் கருவியானது 18 ஆயிரத்திற்கு விற்கப்படுகின்றது. 

என்னை பொருத்தவரை கிண்டில் கருவிகளில் 4G இணைப்பு தேவையில்லை நமது கைப்பேசிகளில் உள்ள Mobile HotSpot வசதியை கொண்டு நமக்கு தேவையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவே இதற்காக தனியாக ஒரு 4G in-Built தேவையில்லை அதுவும் 5 ஆயிரம் ரூபாய் இதற்காக செலவு செய்ய தேவையில்லை என்பது என்னுடைய எண்ணம். 

Cons:

இந்த கருவியில் உள்ள ஒரே பின்னடைவு என்னவென்றால் இதன் மூலம் ஒலி புத்தகங்களை கேட்க இயலாது. 

கிண்டில் 10th Gen Technical Details

திரைAmazon’s 6” Paperwhite display technology with E Ink Carta and built-in light, 300ppi, optimized font technology, 16-level grayscale.
அளவு167 x 116 x 8.18 மி.மீ.
எடைWi-Fi: 182 கி. Wi-FI + 4G: 191 கி.
Storage8 GB / 32GB
Cloud Storageஅனைத்து அமேசான் உள்ளடக்கங்களுக்கும் இலவச amazon Cloud Storage.
பேட்டரி ஆயுள்6 வாரங்கள் (30Min/Day)
நிறம்கருப்பு

Formats Supported

AZW3, AZW, TXT, PDF, unprotected MOBI, PRC; HTML DOC, DOCX, JPEG, GIF, PNG, PMP

சிறப்பு அம்சங்கள்

  • A voiceView screen reader
  • Bluetooth audio,
  • text-to-speech (available in English only).
  • invert Black and White,
  • adjust the font size,
  • font face,
  • line spacing and margins.

நீர்ப்புகா அம்சம்

Waterproof (IPX8), 2 மீட்டர் புதிய நீரில் மூழ்குவதை 60 நிமிடங்கள் தாங்கிக்கொள்ள சோதிக்கப்பட்டது. மேலும் இதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள. 

உத்தரவாதமும் சேவையும்

1 ஆண்டு வரையறுக்கப்பட்ட உத்தரவாதமும் சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. கின்டலின் உத்திரவாதம் இங்கே காணப்படும் விதிமுறைகளுக்கு உட்பட்டது .

Related Post

புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது ?

Posted by - September 10, 2020 0
புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது ? உங்கள் சொந்த விருப்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்றால்,  Fiction or Non-fiction புத்தகத்தை எடுக்க விரும்பலாம். இதபோன்ற ஆயிர கணக்கான புத்தகங்கள்…

புத்தகங்களைப் படிப்பதன் 10 நன்மைகள்

Posted by - September 10, 2020 0
புத்தகங்களைப் படிப்பதன் நன்மைகள் என்ன? கடைசியாக நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்தது அல்லது கணிசமான பத்திரிகை கட்டுரைகள் படித்தது எப்போது? தவறாமல் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாத எண்ணற்ற…

ஏன் eBook Reader-ஐ வாங்க வேண்டும் ?

Posted by - August 20, 2020 0
ஏன் eBook Reader-களை பயன்படுத்த வேண்டும் ? மின்புத்தகம் என்றால் என்ன என்பது பற்றியும் பின் புத்தக கோப்புகளில் உள்ள வகைபடுகள் (PDF, ePub, Mobi, AZW,…

சங்க இலக்கிய நூல்கள் பட்டியல்

Posted by - September 24, 2020 0
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட…
E-readers types in Tamil

எத்தனை வகை eBook Reader-கள் உள்ளன? ஏன் Amazon kindle வாங்க வேண்டும்?

Posted by - August 20, 2020 0
சரி ஒரு வழியாக மின் புத்தகங்களை E-Reader-ல் படிக்கலாம் என முடிவு எடுத்துவிட்டீர்கள். ஒருவேளை இன்னும் இல்லையென்றால் இந்த இணைப்பை பார்க்கவும். தற்போது ஒருசில நிறுவனங்கள் மட்டுமே…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்