சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளைஉ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன.

சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் 

எட்டுத்தொகை நூல்கள் (மொத்த நூல்கள் 8)

நூல்காலம்இயற்றியவர்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறுகபிலர்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகைநல்லந்துவனார் முதலிய பலர்
அகநானூறுபலர்
புறநானூறுபலர்

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள் (மொத்த நூல்கள் 10)

நூல் காலம்இயற்றியவர்
திருமுருகாற்றுப்படை8-ம் நூ.ஆ.நக்கீரர்
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை4 – 6ஆம் நூ.ஆ.நற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை2 – 4ஆம் நூ.ஆ.நக்கீரர்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
மதுரைக் காஞ்சி2 மற்றும் 4 -ம் நூ.ஆ.மாங்குடி மருதனார்
பட்டினப் பாலை3 ம் நூ.ஆ.
மலைபடுகடாம் 2 மற்றும் 4 -ம் நூ.ஆ.பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (மொத்த நூல்கள் 18)

நூல் காலம்இயற்றியவர்
திருக்குறள் கி. மு 31திருவள்ளுவர்
நான்மணிக்கடிகை6 ஆம் நூ.ஆ.விளம்பி நாகனார்
இன்னா நாற்பது5 ஆம் நூ.ஆ.கபிலதேவர்
இனியவை நாற்பது5 ஆம் நூ.ஆ.பூதஞ்சேந்தனார்
களவழி நாற்பது5 ஆம் நூ.ஆ.பொய்கையார்
திரிகடுகம்4 ஆம் நூ.ஆ.நல்லாதனார்
ஆசாரக்கோவை7 ஆம் நூ.ஆ.பெருவாயின் முள்ளியார்
பழமொழி நானூறு6 ஆம் நூ.ஆ.மூன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம்6 ஆம் நூ.ஆ.காரியாசான்
முதுமொழிக்காஞ்சி4 ஆம் நூ.ஆ.கூடலூர் கிழார்
ஏலாதி6 ஆம் நூ.ஆ.கணிமேதாவியார்
கார் நாற்பது6 ஆம் நூ.ஆ.கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது6 ஆம் நூ.ஆ.மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது6 ஆம் நூ.ஆ.கண்ணன் பூதனார்
ஐந்திணை எழுபது6ஆம் நூ.ஆ.மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது6ஆம் நூ.ஆ.கணிமேதாவியார்
கைந்நிலை6 ஆம் நூ.ஆ.புல்லங்காடனார்
நாலடியார்7 ஆம் நூ.ஆ.சமணமுனிவர்கள் பலர்

Related Post

இராவண காவியம் தலைவர்களின் பரிந்துரைகள் 

Posted by - September 30, 2020 0
இராவண காவியம் பற்றி தலைவர்களின் பரிந்துரைகள் வடமொழியில் இராமகாவியம் செய்த வான்மீகியும், தமிழ்க் கம்பரும், இராமனை நல்லவன் எனவும், இராவணனை இரக்க மென்றொரு பொருளிலாக் கொடிய அரக்கன்…

இராவண காவியம் எதற்கு? ஏன் ?

Posted by - September 30, 2020 0
இராவண காவியம் எதற்கு? கேள்வி வேடிக்கையான கேள்விதான். சற்று வியப்பைக் தருங் கேள்வியுங்கூட. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிய காப்பியங்கள் எல்லாம் எதற்கு? பெரிய புராணம், திருவிளை யாடற்…

Kindle Paperwhite (10th Gen) பற்றி தெரிந்துகொள்வோம்

Posted by - September 7, 2020 0
https://images-na.ssl-images-amazon.com/images/I/A12gT5ZhhzS.mp4 கிண்டில் பேப்பர் ஒயிட் (Kindle PaperWhite) சிறப்பம்சங்கள் எடை & அளவு இதற்கு முன்பு விற்பனைக்கு வந்தன மற்ற  கிண்டில்  பேப்பர் ஒயிட்  கருவிகளை விட  இது…

இராவண காவியம் கதை

Posted by - October 1, 2020 0
இராவண காவியம் கதை சுருக்கம் இராவண காவியம் (Ravana Kaviyam) 20-ம் நூற்றாண்டில் புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட தமிழ்  காவியம் ஆகும். இந்த நூலை 1946இல்…

ஏன் eBook Reader-ஐ வாங்க வேண்டும் ?

Posted by - August 20, 2020 0
ஏன் eBook Reader-களை பயன்படுத்த வேண்டும் ? மின்புத்தகம் என்றால் என்ன என்பது பற்றியும் பின் புத்தக கோப்புகளில் உள்ள வகைபடுகள் (PDF, ePub, Mobi, AZW,…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்