Description
வல்லிக்கண்ணன் எழுதிய அத்தை மகள் eBook Online read
அத்தை மகள் கதை
உங்க வீட்டுக்கு மோருக்கு வந்த புள்ளையா; தயிருக்கு வந்த புள்ளையா? பாலுக்கு வந்த புள்ளையா?…புள்ளையாம்! மோறையைப் பாரு. வவ் வவ்வே ‘ என்று ஒரு பாட்டம் பொழிந்து தள்ளிவிட்டு வாயைச் சுழித்து ‘வலிப்புக் காட்டினாள்”.
சொன்னா என்னட்டி செய்வே? என்னமோ செஞ்சிருவேன்னியேட்டி, ஏட்டி!’ என்று ரகளைப்படுத்தினான் அவன்.
ஊர்ப் பிள்ளைகள் ‘தளபாடமாக’க் கற்று வைத்திருந்த கைச் சரக்குகளில் ஒன்றை உதறினாள் அவள். ‘ஏட்டின்னா எட்டுப் பேரு கிட்டேக் கூட்டி விட்டுருவேன், ஒன்பது பேரு கிட்டே ஓட்டி விட்டுருவேன். தெரியுமா?’ எங்கே ? என்று சத்தம்போட்டாள். பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பேசவேண்டும் என்பது பெரியவர்களில் பலருக்குக்கூட பிடிபடாத வித்தையாக இருக்கும்பொழுது, அவள்பேச்சில் அர்த்தமிருக்க வேண்டும்; அதை அவள் சரியாக உணர்ந்து மிருக்கவேணும் என எதிர்பார்க்கக் கூடாதுதான்.
அவள் கத்தல் டையனின் உற்சாகத்தை தீயாக வளர்க்கும் பெட்ரோல். அவன் அட்டகாசம் பண்ணி தனது பெரும் ராகத்திலே பாட்டிழுத்தான் ‘ஏட்டி யேட்டி ரத்தினோம்…..’
ரத்னம் செயலற்றுப் போனாள் என்பதை ‘அம்மா! இந்தா பாரம்மா இவனை….-ஏட்டி யேட்டின்னு சொல்லிக் கேலி பண்ணுதான்’ என்று சிணுங்கியது பிரகடனப் படுத்தியது.
அவள் தாய் சிரித்துக்கொண்டே வந்தாள். ‘என்னட்டி கொலாங் கொலாங்குன்னு திண்ணையும் மண்ணும் புரியாம என்ன கத்துதே? என்ன?’ என்று கேட்டாள்.
ரத்னம் அழுகை பாவம் பிடித்து சினுங்கிக்கொண்டே சொன்னாள்; ‘ஏட்டி ஏட்டின்னு சொல்லுதானம்மா அவன்’.
‘சொன்னால் என்ன கெட்டுப்போச்சு?’ என்றாள் தாய்.
அவன் அமர்க்களமாகச் சிரித்தான். ஒஹ்ஹொ ஹொஹோ…ஒஹ்ஹொஹோ……”
ரத்னத்துக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ‘ஆமா, இவொ வந்துட்டோ. அவொ மருமகப்புள்ளே யல்லவா! மருமொவோப் புள்ளே! அதினாலே பரிஞ்சுக்கிட்டு வந்துட்டோ. வவ்வவ் !’ ……. (முழு புத்தகம் படிக்க பதிவிறக்கவும்)
வல்லிக்கண்ணன்
அத்தை மகள் புத்தகத்தின் ஆசிரியர் வல்லிக்கண்ணன் ஆவார். இவருடைய இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி ஆகும். இவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் வல்லிக்கண்ணன் படைப்புகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் இங்கு பார்க்கவும்.
Thiagarajan –
Super